”சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது இலங்கைக்கு நன்மை பயப்பதாகும்” என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஸ்மத் தெரிவித்தார்.
இலங்கை ஓய்வுபெற்ற படை அதிகாரிகளின் அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படை தலைமையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்து அவர் கூறுகையில்
சீனா – பாகிஸ்தான் பொருளாதார நுழைவாயிலானது உலகமுழுவதிலும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதனை நோக்காகக்கொண்ட சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் முன்னணி முயற்சியாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்நுழைவாயில் பிராந்திய இணைப்பிற்கான சிறந்த கட்டமைப்பாகும். அத்துடன் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிற்கு மட்டுமல்லாது பிராந்தியத்திற்கும் இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசிய குடியரசுகளிற்கும் நன்மை பயப்பதாகும்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன ஸ்திரத்தன்மையான இருதரப்பு உறவுகளை பேணுவதாகவும், இருநாடுகளும் வலுவான கலாசார பிணைப்புககளால் இணைக்கப்படுகின்றன எனவும் உயர் ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.