பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அட்டூழியங்களை பொறுக்க முடியாது

மலேசிய பிரதமர் மகாதீர் சீற்றம்

0 911

பலஸ்­தீ­னர்கள் மீதான இஸ்­ரேலின் ஒடுக்­கு­மு­றையைக் கண்டு மலே­சியா இனியும் அமைதி காக்­கா­தெனப் பிர­தமர் மகாதிர் முஹம்மத் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

அவ்­வாறு அமைதி காத்தால் இஸ்‌­ரே­லி­யர்­களால் கொல்­லப்­படும் பலஸ்­தீ­னர்­களின் இரத்­த­மா­னது நம் கைக­ளிலும் படிந்­து­வி­டு­மென அவர் கூறி­யுள்ளார். உல­கெங்­கிலும் பலஸ்­தீ­னத்­துக்கு ஆத­ர­வா­க­வுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற நிகழ்ச்சி கோலா­லம்­பூரில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு பேசி­ய­போதே மகாதிர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

“நாங்கள் (மலே­சியா) கட­மை­யு­ணர்­வுடன் உள்ளோம். தங்­களை நீதி மற்றும் சுதந்­தி­ரத்தின் காவ­லர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலம் மிக்க நாடுகள், அட்­டூ­ழி­யங்கள் நடக்­கும்­போது அவற்றைக் கண்டு அமைதி காப்­பது என்ற வழக்­கத்தைப் பின்­பற்­றும்­போது நமது கடமை மேலும் அதி­க­ரிக்­கி­றது.

கடந்த ஜன­வரி 7ஆம் திக­தி­யன்று, பலஸ்­தீ­னிய பகு­தியில் 2 ஆயிரம் புதிய குடி­யி­ருப்­பு­க­ளுக்­கான கட்­டு­மானப் பணிக்கு இஸ்‌ரேல் அரசு ஒப்­புதல் வழங்­கி­யுள்­ளது. இத்­த­க­வலை குடி­யேற்ற எதிர்ப்பு கண்­கா­ணிப்­புக்­குழு வெளி­யிட்­டுள்­ளது. வேறொரு நாட்­டிற்கு சொந்­த­மான நிலப்­ப­கு­தியில் குடி­யி­ருப்­பு­களை நிர்­மா­ணித்து அது தங்­க­ளு­டைய பகு­தி­யென சொந்தம் கொண்­டாடும் இந்த வழக்கம் உலகின் வேறு எந்த நாட்டின் வர­லாற்­றிலும் காணப்­ப­டாத ஒன்று” எனறும் பிர­தமர் மகாதிர் சாடினார்.

கடந்த 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து இதுநாள் வரை, இஸ்‌ரேல் இரா­ணு­வத்தால் 12 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பலஸ்­தீன குழந்­தைகள் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்ட அவர், தற்­போது அக்­கு­ழந்­தைகள் வளர்ந்து ஆளா­கி­விட்ட நிலை­யிலும், தடுப்­புக்­கா­வலில் குழந்­தை­க­ளுக்கு அளிக்­கப்­படும் வச­தி­க­ளு­ட­னேயே வாழ்­வ­தாக சுட்­டிக்­காட்­டினார்.

யுனிசெப் உள்­ளிட்ட மனி­தா­பி­மான அமைப்­புகள் பலஸ்­தீன குழந்­தை­க­ளுக்கு எதி­ரான இஸ்­ரேலின் அத்­து­மீ­றல்கள் குறித்தும், இஸ்‌ரேல் இரா­ணுவ நீதி­மன்­றங்­களால் பலஸ்­தீன குழந்­தைகள் தண்­டிக்­கப்­ப­டு­வது குறித்தும் நீண்­ட­கா­ல­மாக ஆவ­ணப்­ப­டுத்தி வந்­துள்­ள­தாக மகாதிர் தெரி­வித்தார்.

“இவ்­வாறு கைது செய்­யப்­படும் பலஸ்­தீன குழந்­தை­களைப் பயன்­ப­டுத்தி, பலஸ்­தீ­னத்தால் சிறை­பி­டிக்­கப்­படும் தங்கள் வீரர்­களை இஸ்‌ரேல் விடு­வித்துக் கொள்­வது கண்­கூ­டாகத் தெரி­கி­றது. இவை அனைத்­துக்­கா­கவும் இஸ்‌ரேல் கண்­டிக்­கப்­ப­டவும் தண்­டிக்­கப்­ப­டவும் வேண்டும். ஆனால் சுதந்­திரம் குறித்தும், சட்­டத்தின் ஆட்சி குறித்தும் அதிகம் பேசும் அமெ­ரிக்கா போன்ற பல­மிக்க நாடு­களோ, சட்­ட­வி­ரோத செயற்­பாட்டை சட்­ட­பூர்­வ­மாக்க முனை­கின்­றன. இந்த நூற்­றாண்டின் ஒப்­பந்தம் என்ற பெயரில் ஜெரு­ச­லமை இஸ்‌ரேல் ஆக்­கி­ர­மித்­துள்­ளதை சட்­ட­பூர்­வ­மாக்­கி­யுள்ளார் அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப்” என்றும் மகாதிர் அதி­ருப்தி வெளி­யிட்டார்.

இது முழுக்க ஒரு­த­லைப்­பட்­ச­மாக உள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், இந்த ஒப்­பந்­தத்தை உரு­வாக்கும் நட­வ­டிக்­கையில் பலஸ்­தீனம் நேர­டி­யாக ஈடு­ப­ட­வில்லை என்றும், குறைந்­த­பட்சம் இது குறித்து பலஸ்­தீ­னத்தை கலந்­தா­லோ­சிக்­க­வு­மில்லை என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

இந்த அமைதித் திட்­ட­மா­னது பல­மிக்க ஆக்­கி­ர­மிப்­பா­ளரை அங்­கீ­க­ரிக்­கி­றதே தவிர, ஒடுக்­கப்­பட்­ட­வர்­களின் உரி­மை­களை அறவே புறந்­தள்­ளி­யுள்­ள­தா­கவும் மகாதிர் சாடினார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் பலஸ்­தீ­னத்தின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்து வரு­கிறார் மகாதிர். அண்­மையில் ஹமாஸ் தலைவர் இஸ்­மாயில் ஹனி­யாவும் அவ­ரது குழு­வி­னரும் மலே­சி­யா­வுக்கு வருகை தந்­தனர். அச்­ச­மயம் அக்­கு­ழு­வினர் மகா­திரை சந்­தித்துப் பேசினர்.

பலஸ்­தீ­னத்­துக்­கான உத­வி­களை செய்­வ­தற்கு வச­தி­யாக ஜோர்தான் தலைநகர் அம்மானில் மலேசியா தூதரகமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்தாண்டு ஒக்டோபரில் மகாதிர் அறிவித்திருந்தார். இதையடுத்து மகாதிரின் இந்த திட்டத்தை தீவிர இஸ்‌ரேல் மற்றும் யூத எதிர்ப்புக் கொள்கை என்று இஸ்‌ரேலின் வெளியுறவு அமைச்சு கோபத்துடன் வர்ணித்தது. மேலும் மேற்கு கரை பகுதிக்கு செல்ல மலேசிய அதிகாரிகளுக்கு அனுமதியளிக்கவும் இஸ்‌ரேல் மறுத்துவிட்டது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.