இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே காணப்படும் முறுகல் நிலையே தெற்காசிய வறுமைக்கு பிரதான காரணமாகும்

பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் ஷாத் கட்டாக்

0 756

இந்­தியா – பாகிஸ்­தா­னுக்கு இடையே காணப்­படும் முறுகல் நிலையே தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தில் 16.1 சத­வீ­த­மான மக்கள் வறு­மைக்­கோட்­டிற்குக் கீழ் வாழ்­வ­தற்­கான பிர­தான கார­ண­மாகும். இம்­மு­ரண்­பாடு சார்க் அமைப்பு மற்றும் அதன் குறிக்­கோள்­க­ளுக்கும் பெரும் பாதிப்­பாக அமைந்­தி­ருக்­கி­றது என்று இலங்­கைக்­கான பாகிஸ்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் மேஜர் ஜெனரல் முஹமட் ஷாத் கட்டாக் தெரி­வித்தார்.

பாகிஸ்­தானால் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை (05) காஷ்­மீ­ரு­ட­னான ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் தின­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், அதனை முன்­னிட்டு இலங்­கை­யி­லுள்ள பாகிஸ்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­தினால் புதன்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் கலந்­து­ரை­யாடல் நிகழ்­வொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­கழ்வில் ‘அமை­தியும், ஸ்திரத்­தன்­மையும் தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் சுபீட்­சத்­திற்­கான கட்­டா­யத்­தே­வைகள்’ என்ற தலைப்பில் ஜம்மு – காஷ்மீர் மாநி­லத்தின் முன்னாள் பிர­தமர் சர்தார் அத்தீக் அஹ்மட் கான், ஊட­க­வி­ய­லா­ளரும் செயற்­பாட்­டா­ள­ரு­மான மேதா டி அல்விஸ், ஐக்­கிய இராச்­சி­யத்தின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கிரஹம் ஜோன்ஸ் மற்றும் இலங்­கைக்­கான பாகிஸ்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் மேஜர் ஜெனரல் முஹமட் ஷாத் கட்டாக் ஆகியோர் தமது கருத்­துக்­களைப் பகிர்ந்­து­கொண்­டனர்.

உலகில் சீனா­விற்கும், அமெ­ரிக்­கா­விற்கும் இடையில் தொடர்ந்­து­வரும் போட்­டித்­தன்மை மற்றும் சீனாவின் ‘ஒரு மண்­டலம் ஒரு பாதை’ திட்­டத்தில் தெற்­கா­சிய நாடுகள் பலவும் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றமை குறித்து விசே­ட­மாக சுட்­டிக்­காட்டிப் பேசிய ஐக்­கிய இராச்­சி­யத்தின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கிரஹம் ஜோன்ஸ், ஜம்மு – காஷ்­மீரின் சுயாட்­சி­யுடன் தொடர்­பு­டைய இந்­திய அர­சி­ய­ல­மைப்பின் 370 ஆவது ஷரத்தை புது­டில்லி இரத்­துச்­செய்­தமை மற்றும் காஷ்மீர் மக்­களின் உரி­மைகள் தொடர்­பிலும் குறிப்­பிட்­ட­துடன், ‘இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்­டிற்குள் இருக்கும் ஜம்மு–காஷ்­மீ­ருக்குள் நடை­பெறும் மிரு­கத்­த­ன­மான செயற்­பா­டு­களின் விளை­வாக காஷ்­மீரின் நிலைமை, சர்­வ­தேச அமைதி மற்றும் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­தி­ருக்­கி­றது’ என்றும் கூறினார்.

அதே­வேளை, காஷ்மீர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு மேற்­கு­லகம் அதன் முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்­க­வில்லை என்று விசனம் வெளி­யிட்ட அவர், இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு அனை­வ­ரி­னதும் பங்­க­ளிப்பை வழங்­கு­வது நமது கூட்­டுப்­பொ­றுப்­பாகும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

மேலும், ‘இலங்கை சுமார் 30 வரு­ட­கா­ல­மாக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொண்ட நாடாகும்.

எனினும், இறு­தியில் இலங்கை அர­சாங்கம் அதனைத் தோற்­க­டித்து நாட்டில் சுபீட்­சத்தை ஏற்­ப­டுத்தி, அதில் புதிய படி­நி­லை­க­ளையும் எட்­டி­யி­ருக்­கி­றது.

இது பாகிஸ்தான் மற்றும் காஷ்­மீ­ருக்கு சிறந்த முன்­னு­தா­ர­ண­மாகும்’ என்று ஜம்மு-– காஷ்மீர் மாநி­லத்தின் முன்னாள் பிர­தமர் சர்தார் அத்தீக் அஹ்மட் கான் தெரி­வித்தார். ‘காஷ்மீர் பிரச்­சினை 1947 ஆம் ஆண்டில் தெற்­கா­சி­யாவின் மிக முக்­கிய பகு­தியில் ஆரம்­பித்­தது. சர்ச்­சைக்­கு­ரிய ஜம்மு–காஷ்மீர் பிராந்­தியம் இன்­றைய மூன்று முக்­கிய சக்­தி­க­ளான பாகிஸ்தான், சீனா மற்றும் இந்­தியா ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் அமைந்­துள்­ளது. துர­திஷ்­ட­வ­ச­மாக காஷ்­மீரில் உள்­ளக பிராந்­திய மற்றும் சர்­வ­தேச தேவைப்­பா­டு­களைப் பூர்த்தி செய்­த­போ­திலும் இந்­தியா சமா­தானப் பேச்­சு­வார்த்­தைக்கு வர­வில்லை. கடந்த 72 வரு­ட­கால வர­லாற்றில் ஆணவம், மத­வெறி, வெறுப்பு, பேரி­ன­வாதம் ஆகி­ய­வையே இந்­தி­யா­வினால் காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன’.
‘இந்­தியா கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் திக­தி­யி­லி­ருந்து காஷ்மீர் பள்­ளத்­தாக்கு முழு­வ­தையும் முற்­று­கை­யிட்டு, ஒரு மில்­லியன் இரா­ணு­வத்­து­ருப்­புக்­களால் 9 மில்­லியன் காஷ்மீர் மக்­களை சுற்­றி­வ­ளைத்­தி­ருக்­கி­றது. அத்­தோடு காஷ்­மீரை இரா­ணுவ ரீதி­யாகப் பகு­தி­க­ளாகப் பிரித்து அவற்றை யூனியன் பிர­தே­சங்கள் ஆக்­கி­யி­ருக்­கி­றது.

ஆனால் ஐக்­கிய நாடுகள் சாச­னத்தின் பிர­காரம் எந்­த­வொரு சர்ச்­சைக்­கு­ரிய பிராந்­தி­யத்­திலும் பௌதிக மாற்­றங்­களைச் செய்­ய­மு­டி­யாது’ என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இதே­வேளை, இத்­த­லைப்பில் தனது கருத்­துக்­களை முன்­வைத்த ஊட­க­வி­ய­லாளர் மேதா டி அல்விஸ், ‘தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தில் காணப்­படும் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும், அதன் சுபீட்­சத்­திற்கும் இப்­பி­ராந்­தி­யத்­தி­லுள்ள நாடுகள் என்ற வகையில் நாம­னை­வரும் எத்­த­கைய பங்­க­ளிப்­பினை வழங்­கி­யி­ருக்­கிறோம்? அதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றோமா?’ என்று கேள்வி எழுப்­பினார். தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும், முன்­னேற்­றத்­திற்கும் சார்க் அமைப்பை மேலும் பலப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்­பிலும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கையின் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்பில் பேசிய அவர், காணா­மல்­போனோர் விவ­காரம் போன்­ற­வற்றில் அத­னா­லேற்­பட்ட வலியை மாத்­தி­ரமே மீண்டும் மீண்டும் நினை­வி­லி­ருத்­திக்­கொள்­வதில் பய­னில்லை என்றும் அத­னோடு நாம் நல்­லி­ணக்­கத்­தையும் அபி­வி­ருத்­தி­யையும் நோக்கிப் பய­ணிக்க வேண்­டிய தேவை­யி­ருக்­கி­றது என்றும் தெரி­வித்தார்.

இறு­தி­யாகக் கருத்து வெளி­யிட்ட பாகிஸ்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் முஹமட் ஷாத் கட்டாக், ‘தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தில் வாழும் மக்­களில் 16.1 சத­வீ­த­மானோர் வறு­மைக்­கோட்­டிற்குக் கீழ் இருப்­ப­தாகக் குறிப்­பிட்­ட­துடன், இந்­தியா – பாகிஸ்­தா­னுக்கு இடையே காணப்­படும் முறுகல் நிலையே இதற்குப் பிர­தான காரணமாக இருக்கிறது என்றும் கூறினார். இம்முரண்பாடு சார்க் அமைப்பு மற்றும் அதன் குறிக்கோள்களுக்குப் பெரும் பாதிப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

‘இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது சரத்து இரத்து செய்யப்பட்டமையின் மூலம், இந்தியா அதன் சொந்த அரசியலமைப்பை அப்பட்டமாக மீறியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி சுமார் 9 மில்லியன் மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களைக் கட்டுப்படுத்தியதன் மூலம் கடுமையான அடக்குமுறையையும் அது பிரயோகித்திருக்கிறது. இது பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.