பொது தேர்தலில் அம்பாறையில் போட்டியிட முடிவெடுத்துள்ளேன்

முன்னாள் பிரதியமைச்சர் கருணா தெரிவிப்பு

0 712

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­காகத் திட­மான முடி­வெ­டுத்­தி­ருக்­கிறேன் என்று தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான கருணா அம்மான் என்று அழைக்­கப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் குறிப்­பிட்­டுள்ளார்.

கல்­முனை உப பிரதேச் செய­லக முன்­றலில் நேற்­று­முன்­தினம் கட்சி ஆத­ர­வா­ளர்­களை சந்­தித்த பின்னர் பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர்­பாக ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மேலும் அவர் பேசு­கையில்,எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்தில் போட்­டி­யி­டு­வ­தற்­காகத் திட­மான முடி­வெ­டுத்­தி­ருக்­கிறேன்.
ஏனெனில், இங்­குள்ள திற­மை­மிக்க புத்­தி­ஜீ­விகள், இளை­ஞர்­களை இணைத்துக் கொண்டு நாங்கள் தனித்­து­வ­மாகப் போட்­டி­யி­டு­வ­தற்கு முடி­வெ­டுத்­தி­ருக்­கிறோம்.

அம்­பாறை மாவட்­டத்தில் பல பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன.

ஒவ்­வொரு கிரா­மத்­திற்கும் பல பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன.

இன்­றும்­கூட திருக்­கோவில், தம்­பி­லுவில் பிர­தேச மக்­களை சந்­தித்து அங்கு இடம்­பெறும் பாரிய கொள்ளை, கொலைச் சம்­ப­வங் கள் தொடர்­பாக பொலிஸ் அதி­கா­ரி­களை அழைத்துப்பேசி­யி­ருக்­ கின்றேன்.

பிரச்­சி­னை­களை நிவர்த்தி செய்­வ­தற்­கா­கவும் பல அபி­வி­ருத்திப் பணிகள் செய்­வ­தற்­கா­கவும் அந்த மக்­களின் உரி­மை­களை பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் இன்று நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டிடயிட முடி வெடுத்திருக்கிறேன். அதற்கு நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் அந்த மக்கள் பாரிய ஆதரவை வழங்கி வருகிறார் என கூறினார்.-Vidivelli

  • பாறுக் ஷிஹான்

Leave A Reply

Your email address will not be published.