வீடுகளை இழந்த கொழும்பு- கொம்பனித்தெரு பகுதிகளில் வசித்தவர்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

0 1,087

கொழும்பு – கொம்­ப­னித்­தெரு புகை­யி­ரத வீதியை அண்­மித்த பகு­தி­களில் வசித்த மக்­களின் காணி­களை 2013 ஆம் ஆண்டு ஆட்­சி­யி­லி­ருந்த மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்கம் பொறுப்­பேற்று புதிய வீடு­களை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்­த­போதும் இது­வ­ரையில் அவர்­க­ளுக்­கான வீடுகள் பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்று அப்­ப­குதி மக்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் இவர்­க­ளுக்­கான வாட­கை­களை நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை வழங்கி வரு­கின்ற போதிலும், அத­னையும் பெரும் சிர­மத்தின் மத்­தி­யிலே இவர்கள் பெற்றுக் கொள்­வ­தா­கவும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் தெரி­வித்­த­து­டன், ‘புகை­யி­ரத வீதி­யோ­ரங்­களில் வசித்த மக்கள் வீடின்றி இருக்­கின்­ற­னர், ‘கொம்­பனித் தெரு மக்­க­ளுக்கு இவ்­வாறு செய்தால் ஜனா­தி­ப­திக்கு என்ன செய்­வார்கள் ‘, ‘வீடும் இல்லை , வீட்­டுக்­கான வாட­கையும் இல்லை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மக்­களை ஏமாற்­றி­யுள்­ளது’ என்ற சுலோ­கங்கள் எழு­தப்­பட்ட பாதா­கை­களை ஏந்­தி­யி­ருந்­தனர்.

2013 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்­த­போது எமது காணி­களை அவர்கள் பொறுப்­பேற்று, எமக்குப் புதிய வீடு­களை கட்டிக் கொடுப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருந்­தார்கள். அது­வ­ரை­யிலும் எம்மை வாடகை வீடு­களில் இருக்­கு­மாறும், அதற்­கான வாட­கையை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­னூ­டாகப் பெற்றுக் கொள்­ளு­மாறும் தெரி­வித்­தி­ருந்­தார்கள். வாடகை செலுத்­து­வ­தற்கு இரு மாதங்­க­ளுக்கு முன்­னரே நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யி­னூ­டாக அந்தப் பணத்தை பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரி­வித்­தனர். ஆனால் நாங்கள் கால­தா­ம­தத்­துடன் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கியே இந்தப் பணத்தை பெற்று வரு­கின்­றோ­மென ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன், கடந்த தேர்­தலின் பின்னர் அந்தப் பணமும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு 122 வீடுகள் அகற்­றப்­பட்­டுள்­ளன. இந்த வீடு­களை 2 வரு­டத்­திற்குள் நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தாகக் கூறி­யி­ருந்­தனர். பின்னர் இது இன்னும் முழு­மைப்­ப­டுத்­த­வில்லை என்று 6 மாத­காலம் அவ­காசம் கேட்­டனர்.

தற்­போது 7 வரு­டங்கள் கடந்­துள்­ளன. ஆனால் இது­வ­ரையில் எங்­க­ளுக்கு வீட்­டு­ரிமை கிடைக்­க­வில்லை என்­றும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஆர்ப்­பாட்­டத்தின் போது இங்கு வரு­கை­தந்­தி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்ஷ டி சில்வா கூறி­ய­தா­வது ,

நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையே இதற்குப் பொறுப்புக் கூற­வேண்டும். அவர்­களே பாகிஸ்தான் நிறு­வ­ன­மொன்­றுடன் இந்த ஒப்­பந்­தத்தை மேற்­கொண்­டுள்­ளனர். தற்­போது இந்த மக்­க­ளுக்­கான வாடகை பணத்­தையும் கொடுக்­கா­தி­ருக்­கின்­றனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த விவ­காரம் தொடர்பில் நாங்கள் பகிஸ்தான் நிறு­வ­னத்­துடன் தொடர்பு கொண்­ட­போது அவர்கள் எதிர்­வரும் 20 ஆம் திக­திக்கு முன்னர் இவர்­க­ளது வீடு­களை ஒப்­ப­டைப்­ப­தாகத் தெரி­வித்­தனர். ஆனால் அதற்குள் இந்த நிர்­மா­ணப்­ப­ணி­களை முடிக்க முடி­யாது.

மக்­க­ளுக்­கான ஆறு­மா­த­கால வாடகை பணத்தை மாத்­திரம் தம்மால் செலுத்த முடி­யு­மென்று நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை கூறி­னாலும் , மக்கள் அவர்­க­ளது ஆறு­மாத வாட­கை­யையும் பெற்றுக் கொடுக்­கு­மாறு கோரிக்கை வைத்­துள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹுமான் கூறு­கையில்,
நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த ஒப்­பந்தம் தொடர்பில் நாங்கள் அப்­போதே எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்தோம். பாகிஸ்­தானின் நிறு­வனம் ஒன்­று­டனே இவ்­வாறு ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த நிறு­வ­னத்­திற்குப் பல நாடுகள் தடை­வி­தித்­தி­ருந்­தன. ஆனாலும் அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதுவரையில் எந்த வீடும் முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

இவற்றை முழுமைப்படுத்துவதென்றால் இரண்டு மாதகாலமாவது எடுக்கும். இந்நிலையில் மக்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் நகர அபிவிருத்தி அதிகாரசபை இவர்களுக்கு வாடகையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.