ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு

0 673

கெப்­பிடல் சிட்டி எனும் நிறு­வ­னத்­துக்கு மன்னார் பகு­தியில் 78 ஏக்கர் காணியை போலி காணி உறு­திகள் ஊடாக 492 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­த­தாக சி.ஐ.டிக்கு கிடைத்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்­க­மை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்­க­மைய கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் சகோ­தரர் ரிப்கான் பதி­யு­தீனின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வரும் 20 ஆம் திக­தி­வரை கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன நீடித்தார்.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­த­போது, சந்­தேக நப­ருக்குப் பிணை­ய­ளித்தால் சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­ட­லா­மெனத் தெரி­வித்தே ரிப்கான் பதி­யு­தீனின் விளக்­க­ம­றி­யலை நீடிக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

நேற்று இது­கு­றித்த விவ­காரம் விசா­ர­ணைக்கு வந்த போது, இந்த விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி முறைப்­பாட்­டா­ளர்­க­ளுக்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தொலை­பே­சி­யூ­டாக அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ள­தா­கவும் அது தொடர்பில் சி.ஐ.டி.யில் முறை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அத்­துடன், இந்த விட­யத்­துடன் தொடர்­பு­டைய தொலை­பேசி உரை­யாடல் தொடர்­பான அறிக்­கையை பெற்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தாக குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் நீதி­மன்­றத்தில் அறி­வித்­தது.

எவ்­வா­றா­யினும், முறைப்­பாட்­டா­ளரின் சட்­டத்­த­ரணி, தனது சேவை பெறு­ந­ருக்கு தொலை­பே­சியில் அச்­சு­றுத்தல் விடுத்­தவர் சந்­தேக நபரா என்­பது தெரி­யாது எனவும், எனினும் தமக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தா­கவும் கூறினார்.

எனினும், சந்­தேக நபர் ரிப்கான் பதி­யுதீன் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி காலிங்க இந்­ர­திஸ்ஸ, தனது சேவை பெறுநர் முறைப்­பாட்­டாளர் அல்­லது சாட்­சி­யா­ளரை அச்­சு­றுத்­தினார் என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் இல்லை எனவும், தனது சேவை பெறுநர் போலி உறு­தி­களை தயா­ரித்­த­தா­கவும் எங்கும் கூறப்­ப­ட­வில்லை எனவும் சுட்­டிக்­காட்டி பிணை சட்­டத்தின் 14 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் பிணை கோரினார்.

எனினும், மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள கார­ணி­களின் பிர­காரம், சந்­தே­க­ந­பரை பிணையில் விடு­விப்­பது முறைப்­பாட்டின் சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­ய­லா­மென பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்ன தெரி­வித்து பிணைக் கோரிக்­கையை நிரா­க­ரித்து விளக்­க­ம­றி­யலை நீடித்தார்.

கடந்த 2015 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி 78 ஏக்கர் காணியை போலி காணி உறு­திகள் ஊடாக 492 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­த­தாக சி.ஐ.டிக்கு கிடைத்­தி­ருந்த முறைப்­பாட்­டுக்­க­மை­வாக, கடந்த 2016 ஆம் ஆண்டு சி.ஐ.டி. கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் அறிக்கை சமர்ப்­பித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், தலை­மன்னார் பகு­தியில் 240 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 40 ஏக்கர் காணியை போலி காணி உறு­தி­களை தயார்­செய்து கைய­கப்­ப­டுத்திக் கொண்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களில், வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமைய ரிப்கான் பதி­யு­தீனை சி.ஐ.டி. சந்­தேக நப­ராக கடந்த 2019இல் நீதி­மன்­றுக்கு பெய­ரிட்ட நிலையில் அவரைக் கைது­செய்ய நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. இந்­நி­லையில் அவரை தேடி வரு­வ­தாக சி.ஐ.டியினர் மன்றில் தெரி­வித்­தி­ருந்­தனர். அதன்­படி அவ­ரது வீட்­டுக்கு சென்று அவர் தொடர்பில் விசா­ரித்­த­தா­கவும் அவர் வர்த்­தக நட­வ­டிக்­கைக்­காக கொழும்­புக்கு வந்­துள்­ள­தாக அவ­ரது தயார் கூறி­ய­போதும், ரிப்­கானின் தொலை­பே­சியும் செய­லி­ழந்­துள்­ள­தாக சி.ஐ.டியினர் மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் கடந்த ஜன­வரி 22 ஆம் திகதி மாலை சி.ஐ.டிக்கு சென்று சர­ண­டைந்­துள்ள ரிப்கான் பதி­யு­தீனை சி.ஐ.டியினர் கைது செய்து ஜன­வரி 23 மன்றில் ஆஜர் செய்­தனர். அது முதல் அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

முன்­ன­தாக கடந்த 2015 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி, அப்துல் காசிம் மொஹமட் சலாஹி என்­பவர் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் வணிக விசா­ரணைப் பிரிவில் விஷேட முறைப்­பா­டொன்­றினைச் செய்­தி­ருந்தார். அந்த முறைப்­பாட்­டுக்­க­மை­யவே சி.ஐ.டி. இந்த நில மோசடி விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

குறித்த முறைப்­பாட்டில், தாம் 40 ஏக்கர் கொண்ட காணித் துண்­டுகள் இரண்டை 240 இலட்சம் ரூபா­வுக்கு கொள்­வ­னவு செய்­த­தா­கவும், அந்தக் காணியை எல்­லை­யிட்டு வேறு வேறாக பிரித்­த­தா­கவும் முறைப்­பாட்­டாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இந்­நி­லையில், அவ்­வாறு காணியை கொள்­வ­னவு செய்து சில மாதங்­களில் ரிப்கான் பதி­யுதீன் என்­பவர் தான் கொள்­வ­னவு செய்த காணி­க­ளுக்கு உரிமை கோரிக்­கொண்டு, தனக்கு தனது காணிக்குள் உள்நுழையத் தடை ஏற்படுத்தியதாகவும், தனது சொத்துக்கு போலி உறுதிகளை தயாரித்து அவற்றை கையகப்படுத்தி சொத்து மற்றும் பண இழப்பை ஏற்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரித்து வரும் சி.ஐ.டி., தண்டனை சட்டக் கோவையின் 400,403,454, 457, 459, 102, 113(அ) பிரிவுகளின் கீழ் தண்டனைக்குறிய குற்றமொன்று இடம்பெற்றுள்ளாதாக கருதியே மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.