பயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வின் தத்துவம்

0 906

சடத்­து­வ­வாதத் தத்­து­வத்தின் இயல்­பு­களைத் தழு­வி­ய­தாக, உறு­திப்­ப­டுத்தும் அறி­வியல் சான்­று­களின் அடிப்­ப­டை­யற்ற நிலையில் தோற்­றம்­கண்ட ஒரு கோட்­பா­டா­கவே டார்­வினின் தத்­துவம் உலக வர­லாற்றில் இனங்­கா­ணப்­ப­டு­கி­றது. விஞ்­ஞானக் கண்­டு­பி­டிப்­பு­களால் இத்­தத்­துவம் உறு­திப்­ப­டுத்­தப்­படாத நிலையில் சடத்­து­வ­வாத தத்­து­வத்தின் பெயரில் கண்­மூ­டித்­த­ன­மாக ஆத­ரிக்­கப்­பட்­டது. அள­வு­க­டந்த இவ்­வார்­வக்­கோ­ளாறு பல­வி­த­மான பேர­ழி­வு­க­ளுக்கு கார­ண­மா­னது. ‘மனிதன் எதேச்­சை­யாக தோன்­றி­யவன்; உயிர் வாழ மேற்­கொண்ட உழைப்பின் போராட்­டத்தில் உரு­வெ­டுத்த ஒரு பிராணி’ எனும் எண்­ணப்­பாட்டை திணித்த இத்­தத்­துவம் உலக வர­லாற்றில் பேரி­ழப்­பு­களை கரு­வாக்­கிய பயங்­க­ர­வாத தத்­து­வங்­க­ளான இன­வெறி(Racism), வல்­லாண்மைத் தத்­துவம்(Facism), பொது­வு­டைமை வாதம்(Communism) போன்ற பல கருத்­து­ருக்­களை வலுப்­ப­டுத்­தி­யது; பேர­ழிவை விளை­வாக்­கி­யது.

மோது­வ­தற்கே வாழ்க்கை எனும் அடிப்­ப­டையில் எழுந்த இத்­தத்­து­வத்தை டார்வின் ஓர் அடிப்­ப­டை­வாத மூலக்­கூற்­றோடு தொடங்­கினார். ‘உயி­ரி­னங்­களின் பரி­ணாம வளர்ச்சி, உயிர்­வாழ்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் உழைப்பைப் பொறுத்­தது. இந்த உழைப்பில் வலு­வுள்­ளவன் வெற்­றி­ய­டைவான். வலு­வற்­றவன் தோல்­வியைத் தழுவி புறக்­க­ணிப்­புக்கு ஆளாவான்.’

உயிர் வாழ்­வ­தற்­காக ஈவி­ரக்­க­மற்ற கொடூர மோதலும் போராட்­டமும் நிகழ்ந்­து­கொண்டே இருக்கும் எனும் டார்­வினின் வாதம், பலம் மிகுந்­தவன் பலம் குறைந்­த­வனை எப்­போ­துமே வெற்­றி­கொள்வான் என்றும், இதன் மூலமே பரி­ணாம வளர்ச்சி சாத்­தி­ய­மாகும் என்றும் மோதலைத் தூண்டும் கருத்தை முன்­வைத்­தது. அதை நியா­யப்­ப­டுத்­தவும் செய்­தது. இக்­க­ருத்து டார்­வினின் எழு­திய நூலில், “The Origin of Species by Means of Natural Selection or Preservation of Favoured Races in the Struggle for Life” என்னும் துணைத்­த­லைப்பின் கீழ் புகுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

உயிர் வாழ்­வ­தற்­கான போராட்டம் எனும் இக் கருத்­து­ருவை உயி­ரி­னங்கள் தாண்டி மனித இனக் குழுக்­க­ளுக்­கி­டை­யிலும் நிகழ்­வ­தாக இவ­ரது வாதம் அமைந்­தது. தெரிவு செய்­யப்­பட்ட இனங்­களே பாது­காக்­கப்­படும் என்றும் அந்த இனம் வெள்ளை ஐரோப்­பி­யர்­களே என்றும் இவ­ரது வாதம் அமைந்­தது. ஆபி­ரிக்க மற்றும் ஆசி­யர்கள் போராட்­டத்தில் பின்­தங்­கி­ய­வர்­க­ளா­கவும் போராட்­டத்தில் தோற்று அழிந்து விடப்­போ­கி­ற­வர்­க­ளா­கவும் சித்­தி­ரிக்­கப்­பட்­டனர்.

இது­கு­றித்து இந்­திய மனித இன­யியல் வல்­லுநர் லலிதா வித்­யார்த்தி குறிப்­பி­டு­கையில், டார்­வினின் பரி­ணாம வளர்ச்சி தத்­துவம் சமூக அறி­வி­யலில் எவ்­வாறு இன­வெ­றியை ஊட்­டி­யது என்­பது பற்றி பின்­வ­ரு­மாறு விளக்­கு­கிறார்.

“ஆற்றல் அல்­லது வலி­மை­யுள்­ள­வனே உயிர் வாழ்வான் எனும் அவ­ரு­டைய (டார்­வி­னு­டைய) தத்­துவம் இன்­றைய சமூக அறி­வி­ய­லா­ளர்­களால் வர­வேற்­கப்­பட்­டது. மனித இனம் பரி­ணாம வளர்ச்­சியில் பல்­வேறு நிலை­களைக் கடந்து வெள்­ளை­நிற மனி­தனின் நாக­ரி­கத்தில் முடி­வ­டைந்­துள்­ளது என இவர்கள் நம்­பி­னார்கள். பத்­தொன்­பதாம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில், மேற்­கத்­திய அறி­வியல் வல்­லு­நர்­களில் பெரும்­பா­லானோர் இன­வே­று­பாட்­டு­ணர்ச்­சியை ஒரு யதார்த்­த­மா­கவே ஏற்­றுக்­கொண்­டனர்.” (Lalitha P.V.,1983).

An Essay on the Principle of Population (மக்கள் தொகை கொள்கை பற்­றிய ஒரு கட்­டுரை) எனும் ஆங்­கில பொரு­ளியல் வல்­லுநர் தோமஸ் மல்த்துஸ் என்­ப­வரால் எழு­தப்­பட்ட நூலும் அது சுமந்த கொள்­கை­யுமே டார்­வினின் தத்­துவம் எழ அகத்­தூண்­டு­த­லாக அமைந்­தி­ருந்­தது. குறித்த கொள்கை மக்கள் தொகை வேக­மாக அதி­க­ரிப்­ப­தா­கவும் அதைத் தடுக்க போர்கள், பேர­ழி­வுகள், பஞ்சம் மற்றும் நோய் போன்­றன ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது போன்­றான மிரு­கத்­த­ன­மான வாதமாய் அமைந்­தி­ருந்­தது. மல்த்­துஸின் கோட்­பா­டா­னது 19 ஆம் நூற்­றாண்டில் பர­வ­லாக அங்­கீ­காரம் கண்­டது. ‘இனத்­தூய்­மைப்­ப­டுத்தல் திட்­டத்தின் அறி­வியல் ரீதி­யான பின்­னணி’ எனும் ஆய்வுக் கட்­டு­ரையில் ஜெர்ரி பேர்க் மென் இக்­கோட்­பாடு பெற்ற முக்­கி­யத்­து­வத்தால் ஐரோப்­பாவில் மேற்­கொள்­ளப்­பட்ட கொடு­மையை இவ்­வாறு விவ­ரிக்­கிறார்:

“ஏழை எளி­ய­வர்­க­ளிடம் சுத்தம் பற்றி பரிந்­துரை செய்­வ­தற்குப் பதி­லாக அதற்கு நேர்­மா­றான பழக்­க­வ­ழக்­கங்­களை ஊக்­கு­விக்­க­வேண்டும். நம்­மு­டைய நக­ரங்­களின் வீதி­களை குறு­க­லாக்கி, வீடு­களில் அதி­க­மான மக்கள் குடி­யேறச் செய்து, பிளேக் நோய் திரும்­பவும் பீடிக்க தூண்ட வேண்டும். நாட்டில் கிரா­மங்­களை, தேங்கி நிற்கும் நீர்க்­குட்­டை­க­ளுக்கு அருகில் தோற்­று­விக்க வேண்டும். குறிப்­பாக சக்தி நிறைந்த, உடல் நலத்­துக்குப் பாத­க­மான சுற்­றுப்­பு­றங்­களில் கிரா­மங்­களை அமைக்க வேண்டும்.” (Hall T.D.), இதுவே அவர்­க­ளது திட்­ட­மாக இருந்­தது.

“ஏழை­களை ஒடுக்­குதல்” என அறி­யப்­பட்ட இத்­திட்டம் வலு­வற்­ற­வர்கள் நீக்­கப்­பட்டு மக்கள் தொகை மட்­டுப்­ப­டுத்­தப்­படும் என முன்­மொ­ழிந்­தது; பிரிட்­டனில் நடை­மு­றையும் கண்­டது. இதன் அங்­க­மாக சுரங்­கங்­களில் எட்டு ஒன்­பது வயது சிறார்­களும் பதி­னாறு மணி நேரங்கள் வேலை செய்யப் பணிக்­கப்­பட்­டனர். இதனால் ஆயி­ரக்­க­ணக்­கான சிறார்கள் உயிர் துறந்­தனர். மல்த்துஸ் தத்­துவம் முன்­வைத்த உயிர் வாழ்­வ­தற்­கான போராட்டம் பிரிட்­டனை மரண மண்­ணாக்­கி­யது. இத்­த­கைய இரக்­க­மற்ற வலுக்­கு­றைந்­த­வனை அழித்து வலு­வுள்­ளவன் வாழ ஆசை கொள்ளும் தத்­து­வங்­களால் கவ­ரப்­பட்ட டார்வின், இயற்­கை­யா­னவை யாவற்­றுக்கும் மோதல் கோட்­பாடு பொருந்தும் எனும் வாதத்தை முன்­வைத்து அதை நியா­ய­யப்­ப­டுத்­தவும் செய்தார். இறை மறுப்­பையும் இரக்­க­மற்ற மோத­லையும் முன்­வைத்த இது­போன்ற அறி­வியல் அடிப்­ப­டை­யற்ற கொள்­கைகள் பரப்­பப்­பட்­ட­தாலும் போதிக்­கப்­பட்­ட­தாலும் இரு­பதாம் நூற்­றாண்டு பேர­ழிவை எதிர்­நோக்கி இருந்­தது.

ஆதிக்­கத்தின் கீழி­ருந்த குடி­யேற்ற நாடு­களின் வளங்­களை சுரண்டி நல­னை­டந்த பிரித்­தா­னியா, தன் குடி­யேற்ற நாடு­களை ‘பரி­ணாமம் சார் பின்­ன­டைந்த நாடுகள்’ எனக் காட்­டிக்­கொண்­டது; அதை நியா­யப்­ப­டுத்த டார்­வினின் தத்­துவம் துணை­நின்­றது. ஐரோப்­பாவின் கலா­சா­ரத்தில் ஆதிக்கம் செலுத்­தி­யது.

இதன் பெரு­வி­ளைவு 1914 இல் மூண்ட உல­கப்போர். இக்­க­ருத்தை புகழ்­பெற்ற ஆங்­கில வர­லாற்று பேரா­சி­ரியர் ஜேம்ஸ் ஜோல் தனது Europe Since 1870 (1870 இலி­ருந்து ஐரோப்பா) எனும் நூலில் முதல் உல­கப்­போரின் அடித்­தளம் ஐரோப்­பிய ஆட்­சி­யா­ளர்­களின் டார்­வினின் தத்­துவம் மீதான நம்­பிக்­கை­யென முன்­மொ­ழி­கிறார் (Joll J.,1990). 19 ஆம் நூற்­றாண்டில் இன வேறு­பாட்­டு­ணர்வை விதைத்த டார்­வினின் தத்­துவம் 20 ஆம் நூற்­றாண்டில் கொலை வெறிக் கொள்­கைக்கு அடித்­த­ள­மா­னது. அடொல்ஃப் ஹிட்லர் மற்றும் அல்ஃப்ரட் ரோஸன்பேர்க் ஆகி­யோரால் வடி­வ­மைக்­கப்­பட்ட நாஸிஸம் முழு­வதும் டார்­வினின் தத்­து­வத்தின் ஆழ்ந்த ஆதிக்­கத்தை உணர முடியும்.

The Rise of Facism (வல்­லாண்மை ஆட்­சியின் எழுச்சி) எனும் நூலில் பீட்டர் கிறிஸ்ப் இந்த உண்­மையை இவ்­வாறு தெளி­வு­ப­டுத்­து­கிறார். “மனி­தர்கள் குரங்­கி­லி­ருந்து பரி­ண­மித்­தார்கள் எனும் டார்வின் தத்­துவம், முதலில் வெளி­யி­டப்­பட்­ட­போது ஏள­னத்­துக்­குள்­ளா­கி­யது. ஆனாலும் பின்னர் பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. நாஸிகள் டார்வின் கோட்­பா­டு­களை திரித்து போர்­க­ளையும் இன­வே­று­பாட்­டு­ணர்­வையும் நியா­யப்­ப­டுத்த பிர­யோ­கித்துக் கொண்­டனர்” (Peter Chrisp, p.6). வர­லாற்று ஆசி­ரியர் ஹிக்­மேனும் இதை உறு­திப்­ப­டுத்­து­கிறார்.

ஹிட்லர் எழு­திய Mein Kampf (எனது போராட்டம்) எனும் நூலில் பரி­ணாம வளர்ச்சி தத்­து­வத்தின் மீதான அவ­ரது உறுதி நம்­பிக்­கையும் அதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அதன் கோட்­பா­டு­க­ளையும் விளக்கி வலு­வற்­ற­வர்­களை அழிப்­பதன் மூலமே சிறந்த சமூகம் தோன்றும் எனும் வாதத்தை முன்­வைத்தார். டார்­வினின் தத்­து­வத்தின் சமூ­க­வியல் வடி­வங்­களில் ஒன்­றாக நாஸிஸம் பரி­ண­மித்­தது. (Hickman R., 1999) அது காவு­கொண்ட உயிர்ப்­ப­டு­கொ­லைகள் இது­வரை​ உலக வர­லாறு எதிர்­பா­ரா­தவை.

டார்­வினின் தத்­து­வத்தின் சமூ­க­வியல் வடி­வங்­களில் மற்­றொன்று பொது­வு­டைமை வாதம். இவ்­விரு தத்­து­வங்­க­ளுக்கும் இடை­யான உறவு அவற்றின் ஆரம்பம் முத­லா­னது. பொது­வு­டைமை வாதத்தின் மூல­கர்த்­தாக்கள் மார்க்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் ஆகியோர் மேற்­கொண்ட கடி­தத்­தொ­டர்பு டார்­வினின் தத்­து­வத்தில் இயற்கை வர­லாற்றில் பொது­வு­டைமை வாதத்­திற்கு ஓர் அடிப்­படை இருந்­ததை கண்­ட­தாகத் தெரி­விக்­கி­றது. ஏஞ்சல்ஸ் எழு­திய The Dielectics of Nature (இயற்­கையின் வாதக்­கலை) எனும் நூலில் அதன் தாக்­கத்தை காணலாம்.

தனது நூலில் ஓர் அத்­தி­யா­ய­மாக The Part Played by Labour in Transmission from Ape to Man (குரங்­கி­லி­ருந்து மனிதன் பரி­ண­மித்­ததில் உடல் உழைப்பின் பங்கு) எனும் பகு­தியை ஏற்­ப­டுத்தி இதை உறு­தி­செய்­கிறார். இவர்­களை அடி­யொற்­றிய பொது­வு­டைமை வாதிகள் ப்ளேக்நோவ், லெனின், ஸ்டாலின் யாவரும் டார்­வினின் தத்­து­வத்தை வழியாய்க் கொண்­ட­வர்­களே. ரஷ்ய பொது­வு­டைமை வாத மூல­கர்த்­தா­வான ப்ளேக்நோவ், “சமூ­க­வி­யலில் டார்­வினின் தத்­து­வத்தின் செயல்­மு­றை­களே மார்க்­ஸியம்” (Robert M Young, 1980) எனக் குறிப்­பிட்­டுள்­ளமை நினை­வு­கூ­ரத்­தக்­கது. டார்­வினின் தத்­து­வத்தின் சமூ­க­வியல் செயல்­மு­றை­க­ளான இத்­தத்­துவம் காவு கொண்ட அப்­பாவி மக்கள் உயிர்த்­தொகை மில்­லி­யன்­க­ளுக்கும் அதிகம். சீனாவில் இதை நிறு­விய மா ஓ சேதுங் கொன்று குவித்த மக்கள் தொகை ஏராளம் ஏராளம். இவ­ரது கொடூர சிந்­தனை டார்­வினின் தத்­து­வத்தின் அடிப்­ப­டை­யி­லேயே நிறு­வப்­பட்­டமை ஹாவாட் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ஜேம்ஸ் ரீவி பூஸி எழு­திய China and Charles Darwin (சீனாவும் சார்ள்ஸ் டார்­வினும்) எனு ஆய்வு நூல்­மூலம் தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­கி­றது (Mehnert K., 1977). 120 மில்­லியன் மக்கள் கொல்­லப்­பட ஏது­வான பொது­வு­டைமை வாதத்தின் அடிப்­படை டார்­வினின் தத்­துவம் என்­பதில் அதன் பரி­ணா­மத்தை உண­ர­மு­டி­கி­றது.

இன்னும் ஏரா­ள­மான பல அடிப்­ப­டை­க­ளி­லி­ருந்தும் இந்த உண்­மையை உண­ர­மு­டியும், அதுதான், இரு­பதாம் நூற்­றாண்டின் மொத்த மனித வர்க்­கத்­திற்கும் இன்னல் தந்த வன்­முறைக் கோட்­பா­டுகள் யாவற்­றிற்கும் மூல காரணம் டார்­வினின் தத்­து­வமே. இதன் தொடர் புதிய உலக ஒழுங்­கா­கவும் கலா­சா­ரங்­க­ளுக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லா­கவும் இன்­ற­ளவும் தொடர்­கி­றது. உலகம் பல (மத) நம்­பிக்­கை­க­ளையும் உலக கருத்­துக்­க­ளையும் சித்­தாந்­தங்­க­ளையும் கொண்­ட­தாக உள்­ளது. இவை ஒவ்­வொன்றும் ஒன்­றுக்­கொன்று முரண்­படும் தனித்­தன்­மை­களை கொண்­டி­ருப்­பது இயல்பே. ஆன­போதும் அவற்­றிற்­கி­டையில் ஆரோக்­கி­ய­மான ஒரு சக­வாழ்வு ஏற்­ப­டுத்­த­தப்­ப­டு­வதே மனித நேய­மாக உள்­ளது. தங்­க­ளோடு ஒத்து வரா­த­வர்­களை தக்க மரி­யா­தை­யுடன் நடத்த வேண்டும். ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டல்­களால் கருத்து வேறு­பா­டு­களை அணுக வேண்டும். இதுவே இஸ்லாம் முன்­வைக்கும் போத­னை­யா­கவும் உள்­ளது. இதற்கு மாற்­ற­மாக பிற­கொள்கை கொண்­டோரை போராடி அழித்து அதில் அனு­கூலம் காண்­பதை ஆத­ரிப்­போ­மானால் அது அழி­வை­யன்றி எது­வொன்­றையும் விளை­வாக்­கப்­போ­வ­து­மில்லை. அதுவே பயங்­க­ர­வாதம் அல்­லது தீவி­ர­வா­த­மாகும். இதை ஊக்­கு­விக்கும் அறி­வியல் அடிப்­படை எது­வு­மற்ற ஒரு சடத்­துவ வாதத் தத்­து­வ­மா­கவே, துடைத்­தெ­றி­யப்­ப­ட­வேண்­டிய அறிவியல் அழுக்காகவே டார்வினின் தத்துவம் வரலாற்றில் படிப்பினை தருகிறது.
டார்வினின் தத்துவம் போன்ற பயங்கரவாதத்திற்கு வித்திடும் தத்துவங்களாலோ அதை அடியொட்டி எழுந்த சடத்துவவாதத் தத்துவங்களாலோ தரமுடியாத பயங்கரவாதமற்ற சகவாழ்வை தரவல்ல அதியுன்னத வழியாக இஸ்லாம் திகழ்கிறது என்பதைக் காட்ட அதன் ஒளியில் அமைந்த ஓர் ஆட்சியின் ஒரு சம்பவத்துடன் இத்தொகுப்பு சுருங்க முடிவுகாண்கிறது. “அல்லாஹ்வின் அடியாரும், இறை நம்பிக்கையாளர்களின் அதிபருமாகிய உமர், இயோலியா நகரவாசிகளுக்கு வழங்கும் பாதுகாப்பு இது தான். அவர் எல்லா மக்களுக்கும், நோயுற்றவர்களுக்கும், நலமுடன் இருப்பவர்களுக்கும் அவர்களின் உயிர், உடைமை, தேவாலயங்கள், சிலுவைகள் மற்றும் அவர்களுடைய மத சம்பந்தப்பட்ட யாவற்றிற்கும் பாதுகாப்பளிக்கின்றார். அவர்களுடைய தேவாலயங்கள் குடியிருக்கும் இல்லங்களாக மாற்றப்படமாட்டா, அல்லது அழிக்கப்படா; அவையோ அவற்றிலுள்ள உடைமைகளோ எவ்வகையிலும் குறைக்கப்படமாட்டா, அவர்களுடைய மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எவ்வித நிர்ப்பந்தமும் செய்யப்படமாட்டார்கள். அவர்களில் யாரும் தொல்லைப்படுத்தப்படவும் மாட்டார்கள்”. கலீபா உமர் (ரழி) ஜெருசலேம் வந்ததும் ஜெருசலேம் தலைமை குருவோடு மேற்கொண்ட ஒப்பந்தம் இது.-Vidivelli

  • எம்.ஐ.முஹம்மத் ஸப்ஷாத்,
    ஓட்­ட­மா­வடி,
    மொறட்­டுவை
    பல்­க­லைக்­க­ழகம்.

Leave A Reply

Your email address will not be published.