வுஹானிலிருந்து இலங்கை வந்த மாணவரின் அனுபவம்

0 664

தற்­போது உல­கையே அச்­சு­றுத்­திக்­கொண்­டி­ருப்­பது கொரோனா வைர­ஸாகும்.இது சீனாவின் வுஹான் மாகா­ணத்­தையே பெரிதும் பாதிப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது. அங்கு கல்­வி கற்கச் சென்­ற இலங்கை மாண­வர்­களில் 33 பேர் அண்­மையில் நாடு திரும்­பி­யுள்­ளனர். அவர்கள் 14 தினங்கள் தியத்­த­லாவ இரா­ணுவ முகாமில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் ஒரு மாணவரான கசுன் விக்ரமகோ தனது முகநூல் நேற்றைய தினம் பகிர்ந்துள்ள அனு­பவக் குறிபபை தமிழில் தருகிறோம்:

இது கன­வல்ல; நாம் இப்­போது இலங்­கையில் இருக்­கிறோம். நாட்டைக் காக்கும் தேவ­தை­களின் உத­வியால் நாம் அப­ரி­மி­த­மான கவ­னிப்­புக்­க­ளுக்கு மத்­தியில் நல்ல சுகத்­துடன் இருக்­கிறோம். இதனை எழுதும் சந்­தர்ப்­பத்­திலே எங்­களில் எவ­ருக்கும் சுதந்­தி­ர­மில்லை. ஏன் நாம், இரா­ணுவ முகாமில் இருப்­ப­த­னால்­தானா? நாம் வரும் வரை­யிலே வழி­பார்த்­தி­ருந்த எங்­களை இலங்­கைக்கு வர­வ­ழைக்க, அர்ப்­ப­ணித்த எங்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்கக் கோரிய மனி­தா­பி­மா­னத்­து­ட­னான நல்­லுள்­ளங்­கொண்ட மக்­களால் நாம் ஏனைய நாடு­க­ளுக்கு இரண்டாம் தர­மல்ல என்­பதை உணர்த்­திய மக்­களின் அன்­பான அழைப்பினால்தான் இங்குவந்த­டைந்தோம்.

அனை­வ­ருடனும் அல்­லா­வி­டினும் இயன்­ற­வ­ரையில் எல்­லோ­ரு­டனும் கதைக்­கிறோம். சிரமம் பாராது தக­வல்­களைத் தரு­கிறோம். அம் மனி­தர்­களின் அர்ப்­ப­ணிப்­பாலே நாம் இந்த இடத்தில் இருக்­கிறோம். 18 மணி நேர பயண அலுப்­பையும் பொருட்­ப­டுத்திக் கொண்டு கொஞ்­ச­நே­ர­மேனும் இளைப்­பா­றாது இருக்க, எங்­களை வர­வேற்ற எங்­களைக் கவ­னித்த புது­மை­யான உபசரிப்பின் வெளிப்­பாடே கார­ண­மாகும்.

எங்­க­ளுக்கு நேற்று முன்­தினம் இரவு எமது இலங்கைத் தூத­ர­கத்­தி­லி­ருந்து மகிழ்ச்­சி­க­ர­மா­ன­தொரு தகவல் வந்­தது. ‘பிள்­ளை­களே உங்கள் பொருட்­களை தயார்­ப­டுத்தி வைத்­துக்­கொள்­ளுங்கள். பெரும்­பாலும் மாலை­யா­கும்­போது போவ­தற்கு முடி­யு­மாகும்…’ என்ற நல்ல செய்­தியே அது. அந்த வச­னங்­களை நாம் திரும்பத் திரும்ப கேட்டு வந்தோம். பல நாட்­க­ளுக்குப் பிறகு செவி­களை எட்­டிய மிகவும் இனி­மை­யான வார்த்­தைகள் அவை. இம்­ம­கிழ்ச்­சிக்கும் இனி­மைக்கும் பின்னால் பாரிய கார­ணி­யொன்று மறைந்­துள்­ளது. அதுதான் எங்­களை இங்கு வர­வ­ழைப்­ப­தற்­காக எங்கள் குடும்­பங்கள் ஒரு­புறம். மறு­பு­றத்தில் சீனாவில் படித்த, இன்னும் படித்துக் கொண்­டி­ருக்­கிற இலங்கை நண்­பர்கள் தம் நேர­கா­லத்தை அர்ப்­ப­ணித்து வெளி­நாட்டு அமைச்­சுக்கு விடுத்த கோரிக்­கையை எண்ணி மகிழ்­கிறோம். மனி­தர்கள் மிகவும் கஷ்­ட­மான காலத்தில் இருந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள். நாமும் கஷ்டம் நிறைந்த சூழ்­நி­லையில் எங்கள் மத்­தியில் இல்­லாதோர் குறித்து நாம் மீண்டும் ஒரு முறை சிந்­தித்துப் பார்க்­கிறோம். எங்­களை அங்கு வைத்­தி­ருக்க முனைந்த ஒருவர் இருப்­பா­ரே­யானால் அதனால் நாம் மேலும் உற்­சா­கப்­பட்டோம். நாடே எங்­களை ஆசீர்­வ­தித்­தது. மனி­தா­பி­மானம் எப்­போதும் வென்றே தீரும். இது சத்­தியம்.

எல்லோர் முகங்­க­ளிலும் உறு­தி­யற்ற தன்­மையால் நிரம்­பிய மகிழ்ச்சி. அன்பும் அழகும் நிறைந்த வுஹான் நகரைத் தனி­மையில் விட்டுப் பிரி­வ­த­னா­லான நிலை­யல்ல அது. மக்­களின் வாழ்வைப் பறிக்க வந்த வைர­ஸி­லி­ருந்து உயிரைக் காப்­பாற்­றிக்­கொண்டு அன்­புள்ள தாய­கத்­திற்கு மீளு­கிறோம் என்ற மகிழ்ச்சிப் பிர­வா­க­மே­யாகும்.

பின்னர் காலையில் மற்­றொரு தகவல் வரு­கி­றது. தூத­ர­கத்­தி­லி­ருந்து அன்று மாலையில் விமான நிலை­யத்­திற்குச் செல்ல பஸ் வண்­டி­யொன்று வரு­கி­றது. அதில் புறப்­பட தயா­ரா­கும்­படி அத்­த­கவல் கூறி­யது. என்­னதான் தயார்­ப­டுத்த உள்­ளது. போகக் கிடைப்­ப­தொன்றே போதும் என்­றது மனம்.

நாம் அங்­கி­ருந்து புறப்­ப­டும்­போது எமது அடுத்த அறையில் இருக்கும் நேபாள நண்பர் கூறிய வார்த்­தை­களை எமது மொழியில் தரு­கிறேன்.

‘நீங்கள் போகி­றீர்­களா? எங்கள் நாட்­டி­லி­ருந்து இன்னும் எங்­களை அழைக்­கக்­கூட இல்லை. நீங்கள் அதிர்ஷ்­ட­சா­லிகள். கவ­ன­மாகப் போக முடி­யு­மானால் நாம் மீண்டும் சந்­திப்போம். அந்த நிச்­ச­ய­மற்ற முகத்தைப் பார்த்து என்னால் என்ன பதில்தான் பகர முடியும்?

‘பாகிஸ்­தா­னி­லி­ருந்து எங்­களை அழைத்துச் செல்­வ­தற்கு எவரும் வரு­வ­தில்­லையே என்று பாகிஸ்தான் நண்­பர்கள் அழு­வ­தாக எங்­களில் சிலர் கூறு­வதைக் கேட்க முடி­கி­றது. அவர்கள் தாயைப் பார்ப்­ப­தற்குச் செல்­வ­தற்­காக ஆவல்­ப­டும்­போது வேண்டாம் என்று தடுப்­பது எந்­த­ள­வுக்கு அநா­த­ரவு நிலைக்­குத்­தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். எமது நாட்டு தற்­போ­தைய தலை­மைத்­து­வத்தை நினைக்­கும்­போது பெரு­மைப்­பட வேண்டும்.

வல்­ல­ரசு நாடு­க­ளான அமெ­ரிக்கா, ரஷ்­யா­வுக்கு அடுத்து எமது சின்னஞ் சிறிய இலங்­கையே சீனா­விடம் எமது பிள்­ளை­களை எமது நாட்­டுக்கு அனுப்­பும்­படி கோரிக்கை விடுத்­துள்­ளது. தொழில்­நுட்­பத்தில் நாம் அமெ­ரிக்­காவைப் போன்று வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை. ஆனால் எங்கள் தூத­ர­கத்­திற்கு, எமது வெளி­நாட்­ட­மைச்­சிற்கு எங்கள் 33 பேரையும் பொறுப்­பேற்­ப­தற்­கு­ரிய நம்­பிக்கை இருந்­துள்­ளது. எங்­களை விட வளர்ச்சி காணாத நாடுகள் அவர்­க­ளது மாண­வர்­களை வர­வ­ழைக்க முடி­யாத நிலையில் உள்­ளன. எம் விட­யத்தில் எங்கள் பெற்றோர், சகோ­தர, சகோ­த­ரிகள், உற்றார், உற­வி­னர்கள் எல்­லோரும் ஏக­குரல் கொடுத்­த­மையே எங்கள் விட­யத்தில் கை கொடுத்­துள்­ளது. எனவே எங்கள் நாடு ஓர் அதிர்ஷ்ட நாடா­கு­மல்­லவா?

பெரும் எண்ணச் சுமை­களைத் தாங்­கிய 33 பேர்­க­ளையும் சுமந்த பஸ் வண்டி வுஹான் நக­ரி­லி­ருந்து பய­ணிக்­கி­றது. வீதிகள் வெறிச்­சோடிக் கிடக்­கின்­றன. சன­நெ­ரிசல் மிக்க கடைத் தொகு­திகள் மூடி அநா­த­ர­வாகக் காட்சி தரு­கின்­றன. அழ­கிய வுஹான் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கொரோனா எங்­களைச் சூழ இரை தேடிக் கொண்­டி­ருக்­கி­றது. எப்­ப­டியோ 8 மணி­யா­கும்­போது நாம் டியன்ஹே விமான நிலை­யத்தை அடைந்தோம். ஏரா­ள­மான நாடுகள் வுஹானை விட்டு வெளி­யே­று­கின்­றன. ஆனால் விமான நிலை­யத்தில் பணி­க­ளுக்கோ மிகவும் குறை­வான ஊழி­யர்­களே கட­மையில் இருந்­தனர். அதனால் பணிகள் மந்த கதி­யிலே நடந்­தன. ஆனாலும் உயர்ந்­த­பட்ச பங்­க­ளிப்­போடு வேலைகள் நடந்து கொண்­டி­ருந்­தன. அந்­நாட்டு மக்­களும் விழுந்து கொண்­டி­ருக்கும் நாட்டைக் கரை சேர்ப்­பதில் பகீ­ரதப் பிர­யத்­த­னத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தனர். வைரஸை ஒழித்துக் கட்­டு­வதில் இயன்ற அர்ப்­ப­ணிப்­புடன் செய­லாற்­றிக்­கொண்­டி­ருந்­தனர். நாம் சீனாவை விட்டு வெளி­யே­றி­னா­லும் அது அவர்­க­ளது நாடு. எனவே அவர்கள் அங்­குதான் வாழ­வேண்டும்.

எமது 33 பேர்­க­ளதும் சக­ல­வி­த­மான பதி­வுகள், பரி­சோ­த­னைகள் அனைத்­தையும் முடித்­துக்­கொண்டு நாம் 3.40 மணிக்கு எமக்­கு­ரிய விமா­னத்தில் ஏறினோம். எமது தேசியக் கொடி­யுடன் விமா­னத்தைப் பார்க்­கையில் நாம் நாட்டை வந்­த­டைந்த பிரம்மை கொண்டோம். அங்கும் பல­ராலும் நாம் வழி­ய­னுப்­பப்­பட்டோம். அவர்­களும் உயிரைப் பணயம் வைத்­துத்தான் வந்­தி­ருக்­கி­றார்கள். ஒரு சிலர் வீடு­களில் பொய்யைக் கூறித்தான் இங்கு வந்­தி­ருக்­கி­றார்கள். அவ்­வ­ள­வுக்கு ஆபத்து நிறைந்த வழி­ய­னுப்­பல்தான். அப்­பா­வித்­த­ன­மான நன்­றி­யு­ணர்­வொன்றை வெளி­யிட்டோம்.

6 மணி நேர பய­ணத்தின் பின்னர் மத்­தள மஹிந்த ராஜபக் ஷ விமான நிலை­யத்தை வந்­த­டைந்தோம். காலை 8.00 மணி­ய­ளவில் எமது புண்­ணிய பூமியில் பாதம் பதிக்­கிறோம். நாம் சரி­யான நேரத்தில் வுஹா­னி­லி­ருந்து புறப்­பட்­டுள்ளோம். இப்­போது வுஹான் மூடப்­பட்­டுள்­ளது.

விமா­னத்­தி­லி­ருந்து வெளியைக் கண்­ட­வுடன் சிறு சஞ்­சலம் ஒன்று நெஞ்சை ஆட்­கொள்­ளவே செய்­தது. எமது இரா­ணுவ அதி­கா­ரிகள் வெள்ளை சீரு­டை­யு­டன் நிற்க அம்­புலன்ஸ் வண்­டிகள் உள்­ளிட்ட விசேட செயற்­றிட்­டங்கள் அங்கு அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தன. இவை எல்லாம் எங்­க­ளுக்­காக, நாட்­டுக்­கா­கவே ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன எத்­தனை அர்ப்­ப­ணிப்­புக்கள்?

சகல கிருமித் தொற்­றுக்­குள்­ளி­ருந்தும் இர­சா­யன சுத்­தப்­ப­டுத்­தலின் பின் குளித்து முழு­கிய பின்னர் பிரத்­தி­யேக ஆடைகள் அணி­விக்­கப்­பட்டோம். அதன் பின்பே பஸ் வண்­டியில் ஏற்­றப்­பட்டோம். நாம் எடுத்து வந்த எந்தப் பொருட்­களும் எம்­மி­ட­மி­ருக்­க­வில்லை. அனைத்தும் கடும் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின் தொற்று அகற்­றப்­பட்ட பிறகே எம்­மிடம் ஒப்­ப­டைத்­தனர். அதுவும் தியத்­த­லாவ முகாமை நெருங்­கும்­போதே அவை தரப்­பட்­டன.

நண்­பகல் 12 மணி­ய­ளவில் நாம் தியத்­த­லாவ முகாமை அடைந்தோம். அதுவும் இரா­ணுவ பொலிஸ் பாது­காப்­பு­ட­னேதான். அழைத்து வரப்­பட்டோம். இதனை எழுத்தில் வர்­ணிக்க இய­லாது.

அங்கு எங்­க­ளுக்­கென்று பூர­ண­மாக தயார்­ப­டுத்­தப்­பட்ட கட்­டடம் ஒன்றில் வேறாக்­கப்­பட்ட அறை­களே தரப்­பட்­டன. அங்கு சகல வச­தி­களும் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தன. வை பை, சுடுநீர், வோஷிங் மெஷின் என்று சக­லதும் நிரம்­பி­யி­ருந்­தன. நாம் எதிர்­பார்த்­ததை விடவும் கூடிய வசதி வாய்ப்­புக்­கள்­த­ரப்­பட்­டன. 48 மணி நேரத்­திற்­குள்ளே இவ்­வ­ளவு முயற்­சி­க­ளும் செய்­துள்­ளார்கள். ஜப்பான், சீனாவில் திடீர் வைத்­தி­ய­சா­லைகள் நிர்­மா­ணிக்கும் போது எமது இரா­ணுவ வீரர்கள் அந்­நாட்­டுக்குச் சளைத்­த­வர்கள் அல்லர் என்­பதை உணர்த்­து­வது போன்று இக் கைங்­க­ரி­யங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய தேசிய செயற்­பா­டு­களில் எதிர்­கா­லத்­திலும் முன்­நிற்பர் என்­பதில் சந்­தே­க­மில்லை. இவற்­றுக்கும் மத்­தியில் இன்னும் என்ன தேவை­யுள்­ளன என்று எமது இரா­ணுவ அதி­கா­ரிகள் எம்­மிடம் கேட்­கின்­றனர். இது உலகில் மிகவும் உன்­ன­த­மான மனி­தா­பி­மான இரா­ணுவம் அல்­லவா? இது நாம் சொல்­வ­தல்ல முழு உல­கமும் கண்டு கொண்­டுள்ள உண்­மை­யாகும்.

எமது தாய்மார்கள் எம்மை அன்­பொ­ழுக வர­வேற்­பது போல பாற் சோ­றுடன் நாம் நன்கு உப­ச­ரிக்­கப்­பட்டோம். நாம் எங்­க­ளது அறை­க­ளு­க்குள் அங்­கு­மிங்கும் சுதந்­தி­ர­மாக நட­மா­டினோம். இது எங்கள் நாடு, எங்கள் பூமி. இறைவன் காவலில் எத்­த­கைய சந்­தே­கமோ பீதியோ எமக்­கில்லை.

நாம் இங்கு வந்து சேர்ந்­தமை எங்­களை விட எம்மை ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருந்த மக்­களே மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்துள்ளார்கள். எங்­க­ளுக்­காக தொலை பேசியில் ஆவ­லுடன் கதைத்­த­வர்­க­ளுக்குக் கூட எங்­களால் பதிலோ அல்­லது குறு­கிய தக­வல்­களோ பரி­மா­றக்­கூட வாய்ப்­புக்­கி­டைக்­க­வில்லை. இங்கு வந்­த­வுடன் பல சேவை­களைப் பூர­ணப்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாலே இதனைச் செய்ய முடி­யாத நிலைக்கு தள்­ளப்­பட்டோம்.

கவ­லையின் போது எங்­க­ளுக்­காக வருந்தியிருந்­த ­மக்­க­ளுக்கு புண்­ணியம் மட்டும் கிடைத்­தால் ­போ­தாது. எமது வாயி­லி­ருந்து ஒரு வார்த்­தை­யேனும் பகர்­வ­தற்கு காத்­தி­ருக்­கிறோம். நாம் இங்கு வந்து சேரும் வரை ஊட­கங்­களில் ஒவ்­வொரு செய்தி வாசிப்பின் போதும் எங்­களைப் பற்­றிய தக­வல்­களை அறி­வதில் ஆர்­வத்­துடன் காத்­தி­ருந்­த­துடன் இறை­வ­னிடம் பொறுப்புச் சாட்­டியும் தர்­மங்கள் செய்தும் எமது மன­நி­லையை சீர்­செய்தும் எங்­க­ளுக்­காக காத்­தி­ருந்த எல்லா மக்­க­ளுக்கும் புண்­ணியம் கிடைக்­க வேண்டும்.

வந்து சேரு­வோமா இல்­லையோ என்­றி­ருந்த எமக்கு இல்லை இல்லை நீங்கள் அனை­வரும் கண்­டிப்­பாக வந்து சேருவீர்கள் என்று வாயார வாழ்த்தியோர் பலர். நாம் வந்து சேர்ந்தோம். ஆனால் சாவதற்கு சரி வரவும் என்று கூறிய மனிதர்கள் உள்ள நாட்டில் நாம் வந்துள்ளது சாவதற்கல்ல. எல்லோரையும் பாதுகாத்து வாழ்வதற்கே பல நாட்களாக உண்ணாமல் பருகாமல் காத்திருந்த தாய் தகப்பனிடம் செல்வதற்கு நாம் காத்திருக்கிறோம். எமது குடும்ப உறவுகளிடம் சுருக்கமாக சொல்வதானால் எங்களுக்காக ஆவலோடு பார்த்திருப்போரிடம் செல்வதற்காக எதிர்பார்த்திருக்கிறோம்.

இந்தப் புனித பூமியில் மக்கள் புரியும் பிரார்த்தனைகள் எப்போதும் புறந்தள்ளப்படுவதில்லை. கொரோனா வைரஸ் எடுத்த எடுப்பிலேயே பரவிய வுஹான் பிராந்தியத்திலிருந்து நாம் மீண்டு வந்து நாட்டை அடைய எமது மக்கள் புரிந்த பிரார்த்தனைகளின் ஆசிர்வாதமே காரணமாகும். நாம் 33 பேரும் எத்தகைய பாதிப்புமின்றி சுகதேகிகளாக வந்துள்ளோம்.

14 தினங்களின் பின்னர் நாம் சுக புருஷர்களாக சமூகத்துடன் வந்துசேருவோம்.

இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று பட்டு கைகோர்த்து கொரோனாவை வெற்றி கொண்டு எழில் மிகு இலங்கையை இப்புவி மீது காண இறை கருணை கிடைக்க மீண்டும் பிரார்த்திப்போம்.-Vidivelli

  • தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்

Leave A Reply

Your email address will not be published.