புதிய பெயரில் புதிய சின்னத்தில் தேர்தல் கூட்டணி உதயமாகிறது

ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாஷிம் எம்.பி.

0 1,260
Q ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ஸவின் தோல்­விக்கு அக்­கட்சி, பன்­ச­ல­களை மறந்து செயற்­பட்­ட­மையே கார­ண­மென்பது பெரும்­பா­லா­னோரின் கருத்­தா­க­வுள்­ளது. ஐ.தே. கட்­சியின் உயர்­மட்­டத்­தி­னரும் இக்­க­ருத்­துடன் உடன்­ப­டு­வ­தா­கவே தெரி­கி­றது. இதில் உண்மை உண்டா?

நான் ஒரு பெளத்தர் அல்­லா­விட்­டாலும் அதே கருத்­துடன் நீண்­ட­காலம் உடன்­பா­டு­டை­யவன் என்ற வகையில், 2005 ஆம் ஆண்டு எங்கள் மீது புலி முத்­திரை குத்­தப்­பட்ட போதும் கூட நான் தேசிய சிந்­தனை குறித்தே பேசி­வந்தேன்.

டீ.எஸ்.சேன­நா­யக்­கவின் காலத்­தி­லி­ருந்தே இக்­கட்சி தேசி­யத்­திற்­காகப் பணி­யாற்­றிய ஒரு கட்­சி­யாகும். இந்­நாட்டின் பிர­தான இனத்தைக் காட்­டிக்­கொ­டுக்கும் கட்­சி­யாக செயற்­பட்­ட­தே­யில்லை. இப்­போது இக்­குற்­றச்­சாட்டு எம்­மீது தொடுக்­கப்­ப­டு­கி­ன்ற­போ­திலும் அதனை நான் ஏற்றுக் கொள்­ள­வ­தற்­கில்லை.

நாம் பன்­ச­லை­களை மறந்­த­மைக்கோ அல்­லது சிங்­கள பெளத்­தர்­களைப் புறக்­க­ணித்­த­மைக்கோ எத்­த­கைய ஆதா­ரங்­களும் இல்லை.

நாம் 2015 ஆம் ஆண்டு அர­சாங்­கத்தைப் பொறுப்­பேற்­கும்­போது சர்­வ­தேச மட்­டத்தில் எமது நாட்டின் நற்­பெயர் மிகவும் மோச­மான நிலைக்கே தள்­ளப்­பட்­டி­ருந்­தது. சிங்­கள இனம் குறித்த பல்­வேறு தப்­ப­பிப்­பிராயங்­களும் வெளி­நா­டு­களில் பரப்­பப்­பட்­டி­ருந்­தன. அத்­த­கைய அவப்­பெ­யர்­க­ளை­யெல்லாம் நாம் மாற்­றி­ய­மைத்தோம். மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்குக் கூட தன்­மா­னத்­துடன் வெளி­நா­டு­க­ளுக்கு விஜயம் செய்­வ­தற்கும் நாமே வழி­ய­மைத்­துக்­கொ­டுத்தோம். 2015 ஆம் ஆண்டு எமது அர­சாங்கம் பெளத்த மதத்­திற்கு எத்­த­கைய சேவை­களும் செய்­ய­வில்­லையா என்று தான் நாம் கேட்­கிறோம்? நான் ஒரு முஸ்லிம் என்ற நிலையில் எனது தொகு­தி­யி­லுள்ள பன்­ச­லை­க­ளுக்கு கடந்த அர­சாங்­கத்தில் 20 ஆண்­டுகள் வழங்­கிய சேவை­களை விடவும் மேல­தி­க­மான பணிகள் எமது குறு­கிய காலத்தில் நிறை­வேற்­றிக்­கொ­டுத்­துள்ளேன்.

இன்­றைய அரசு, ஊட­கங்­களை நன்கு பயன்­ப­டுத்தி மக்கள் தலை­களில் பொய்­களைப் புகுத்­தி­யுள்­ளது. அதன் விளைவே இவ்­வா­றான சந்­தே­கங்கள் எழுப்­பக்­கா­ர­ண­மாகும். மேற்­படி தரப்­பினர், தேர்தல் ஒன்று நெருங்கும்போது இன­வாதம், மத­வா­தங்­களைத் தூண்டி குளிர்­காய முயல்­கின்­றனர். அவர்­களால் விதைக்­கப்­படும் இன­வாதம், மத­வா­தங்கள் யாவும் முளைத்து வள­ரவே செய்­கின்­றன. நாம் பெளத்த மதத்­திற்கு என்ன செய்­தோமோ இல்­லையோ என்று சிந்­திப்­பதை விட எமது எதிர்த்­த­ரப்­பி­னரால் விதைக்­கப்­பட்ட இன, மத­வாத விதையால் விளையும் நீண்டகாலப் பாதிப்­புக்கள் குறித்து சிந்­திக்­க­வேண்டும். சஹ்­ரானின் குண்டுத் தாக்­கு­தல்­களை அப்­ப­டியே ஐ.தே.கட்­சியின் மீதே போட்டு விட்­டார்கள். உண்­மை­யி­லேயே சஹ்­ரா­னுக்கு சம்­பளம் கொடுத்து வளர்த்­த­வர்கள் கோத்­தா­பய ராஜபக் ஷாக்கள்தான். ஐக்­கிய தேசியக் கட்சி ஓரி­னத்­திற்கு மாத்­திரம் உரிய கட்­சி­யல்ல. நாம் கொள்கை ரீதி­யாக சகல இனத்­த­வர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறோம். டீ.எஸ்.சேன­நா­யக்க காலத்­தி­லி­ருந்து சிங்­கள –பெளத்த மக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி ஏனைய இனங்­க­ளுக்கும் அதே சமத்­துவ உரிமை வழங்­கு­வதே எமது கட்­சியின் குறிக்­கோ­ளாகும். நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் சமத்­து­வ­முள்ள நாடு ஒன்றே எங்­க­ளுக்கு வேண்டும்.

Q இலங்­கையில் பெரும்­பான்­மை­யான மக்கள் ஆத­ர­வுள்ள கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்சி விளங்­கி­யது. அந்த வாக்கு வங்கி இப்­போது 25 இலட்­சத்தால் அள்­ளுண்டு போயுள்­ள­தாகத் தெரி­கி­றது. மத்­திய தர வகுப்பு மக்­களே பெரும்­பாலும் ஐ.தே.க.வி­லி­ருந்து மூழ்­கிப்­போ­யுள்­ள­னரே?

ஐ.தே.கட்­சியின் வாக்கு வங்கி அவ்­வாறு தாழ்ந்து போக­வில்லை யென்றே நான் கூறு­கிறேன். இப்­போது எங்­க­ளுக்கு 30–35 வீதத்­திற்­கி­டைப்­பட்ட வாக்கு வங்­கி­யொன்­றுள்­ளது. நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் ஐ.தே.க வுக்கு 55 இலட்சம் வாக்­குகள் கிடைத்­துள்­ளன.

Q வடக்கு – கிழக்கு மக்­களின் வாக்­கு­களை ஐ.தே.கட்­சியின் வாக்கு வங்கிக் கூட்­டுக்குள் சேர்க்க முடி­யா­தல்­லவா?

அது சரி, நாம் வடக்கு, கிழக்கு வாக்­கு­களை 20 இலட்சம் எனக் கொள்வோம். அந்த வகையில் 35 இலட்சம் தென்­ப­குதி மக்­க­ளது வாக்­கு­க­ளாகும். இவை தனி­யாக ஐ.தே.கட்­சிக்­கு­ரிய வாக்­கு­க­ளே­யாகும். ஐ.தே.க. தனி­யாக ஆட்­சி­ய­மைத்­துள்­ளது. ஆனால் இப்­போது அது முடி­யா­துள்­ளது. அந்த வகையில் பார்க்கும் போது சிறி­ய­தொரு தளர்வு ஏற்­பட்­டுள்­ள­தாகத் தோன்­று­கி­றது. கட்சி என்ற வகையில் கீழ் மட்­டத்­தி­லி­ருந்து எமது உறுப்­பி­னர்­களைப் பலப்­ப­டுத்த வேண்டியுள்ளது. அண்­மைக்­கா­லத்­தி­லி­ருந்து நாம் எமதூர் பிர­தி­நி­திகள் குறித்து கவனம் செலுத்தத் தவ­றி­யுள்ளோம். அவர்­களை ஒன்று திரட்டி செயற்­ப­டவும் வழி செய்­ய­வில்லை. தாமரைக் கட்­சியில் சமுர்த்தி அதி­கா­ரிகள், கிராம அதி­கா­ரிகள், கூட்­டு­றவு அதி­கா­ரிகள் போன்­றோரை தம் கைக்குள் வைத்துக் கொண்டு அவர்­க­ளுக்கு கூடு­த­லான சலு­கை­களை வழங்கி கட்­சியை வளர்க்கும் நிலையில் எங்­களால் எமது பிர­தேச அமைப்­பா­ளர்­களைக்கூட கை தூக்­கி­விட முடி­யாது போனமை துர­திர்ஷ்­ட­மே­யாகும்.

Q ஐக்­கிய தேசியக் கட்­சியில் நீண்­ட­கா­ல­மாக தலை­மைத்­துவச் சிக்கல் நிலவி வரு­கின்­றது. பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காகக் கூடும் சகல பேச்­சு­வார்த்­தை­களின் போதும் பிரச்­சினை மேலும் விஸ்­வ­ரூபம் எடுத்துக் கொண்டே போகி­றது. இத்­த­கைய கட்­சி­யொன்றால் எப்­படி தலை­தூக்க முடி­கி­றது? இவ்­வாறு தொடர்ந்தால் கட்­சியால் முன்­னுக்கு வர­மு­டி­யுமா?

முடி­யவே முடி­யா­தென தெளி­வாகக் கூறலாம். ஐ.தே.கவுக்கு இதனை விடவும் பாரிய பிரச்­சி­னைகள் நிரம்­பிய வர­லாறும் இருந்­துள்­ளது. ஜே.ஆர். – டட்லி பிரச்­சினை, பிரே­ம­தாச – ஜே.ஆர்.பிரச்­சினை இதே போன்றே பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளிலும் கட்­சிக்­குள்ளே பூகம்­பங்­களும் உரு­வா­கி­யுள்­ளன. இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் கட்சி ஈடுகொடுத்தே வந்­துள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குப் போல எமது கட்­சிக்குள் நடக்­க­வில்லை. அக்­கட்சி உடைந்து போய் வேறு கட்சி தோற்றம் பெற்­றுள்­ளது. பெயரும் வேறு சின்­னமும் வேறாக மாற்­றப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளுக்கு நிலை­யா­ன­தொரு கொள்­கை­யு­மில்லை. எமது கட்­சிக்குள் அத்­த­கைய எதுவும் இல்லை. ஐ.தே.க. என்­பது ஒரு கலா­சா­ர­மாகும். கட்­சிக்குள் ஒரு கட்­டுக்­கோப்பு காணப்­ப­டு­கி­றது. அதனால் பிரச்­சி­னையின் போது சிலர் பிரிந்து சென்ற போதிலும் கட்சி அழிந்து விடவில்லை. தற்­போது உரு­வா­கி­யுள்ள பிரச்­சினை நீண்ட கால­மாக இழு­ப­றி­யா­கவே உள்­ளது. இது நல்­ல­தல்ல.

எவ்­வா­றான போதிலும் இதனை எங்­களால் தீர்த்­துக்­கொள்ள முடியும். இந்த நம்­பிக்கை எனக்­குண்டு. 25 வரு­டங்­க­ளாக தனி­நபர் ஒரு­வரே தொடர்ந்­தேர்ச்­சை­யாக தலை­மைத்­துவம் வகிப்­ப­தென்­பது ஒரு நீண்ட கால எல்­லை­யாகும். ரணில் விக்­கி­ர­ம­சிங்க மிகவும் கஷ்­ட­மான கால­கட்­டங்­களில் எல்லாம் சவால்­க­ளுக்கு முகம் கொடுத்து இன்று வரையும் கட்­சியைப் பேணிப் பாது­காத்து இந்த நிலையில் வைத்­துள்ளார் என்­பதை நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­கிறோம்.

எல்­லோ­ருக்கும் இய­லு­மான காலம் ஒன்­றுள்­ளது. ரணில் ஆற்­ற­லுள்­ள­வ­ராக இருக்­கலாம். ஆனால் அர­சி­யலில் அத்­த­கைய ஆற்­றல்கள் பேணப்­ப­டு­வது சாத்­தி­ய­மற்றுப் போயுள்­ளது. மனி­தர்கள் மத்­தியில் மிகவும் நல்­ல­வ­ராக விளங்­கு­வது அர­சி­ய­லுக்கு மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். அவர் ஒரு கட்­சியின் தலைவர் என்றால் கட்­சியின் வழிநடத்­த­லுக்கும் அது மிகவும் முக்­கி­ய­மா­கி­றது.

அதனால் தலைவர் ஒரு­வ­ருக்கு மக்­க­ளது வர­வேற்பும் மக்­க­ளு­ட­னான நெருக்­கமும் அவ­சி­ய­மா­ன­தாகும். இந்த நிலை­யிலே கட்­சியின் பெரும்­பான்­மை­யானோர் கட்­சியில் மாற்றம் ஒன்றை வேண்டி நிற்­கின்­றனர். இதற்­காக கட்­சிக்குள் பரந்­த­ள­வி­லான கலந்­து­ரை­யா­டல்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இதனை வைத்தே கட்­சிக்குள் பிளவேற்­படும் என்று சிலர் கரு­து­கின்­றனர்.

கட்சி பிள­வு­பட வேண்டும் என்று நினைப்­போ­ரு­முள்­ளனர். கட்­சியில் மாற்றம் ஒன்று வேண்டும் என்­பதே எமது முத­லா­வது விருப்­ப­மாக உள்­ளது. முகங்கள் மாத்­திரம் மாற்­றப்­பட்டால் போதாது. காலத்­திற்­கேற்ற வகையில் கொள்­கை­க­ளிலும் மாற்­றங்கள் அவ­சி­ய­மா­கின்­றன. அதற்­கு­ரிய காலம் கனிந்­துள்­ளது. காலத்­திற்குக் காலம் மாற்றம் நிகழ்ந்தே வந்­துள்­ளது. ஜே.ஆரின் காலத்தில் பாரி­ய­தொரு மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அது இப்­போது மாற்­றப்­ப­ட­வேண்டும். சமூக, பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யில் நாம் இப்­போ­துள்ள நிலை சரியா? அல்­லது புதி­ய­தொரு முறை குறித்து சிந்­திக்க வேண்­டாமா? புதிய கொள்­கை­யொன்றை வழி­ந­டத்த வேண்­டாமா? இவை குறித்து கட்­சிக்குள் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கின்­றன. சகல துறை­க­ளிலும் மாற்­றங்­களும் புதுப்­பித்­தல்­களும் வேண்டும் என்ற கோஷம் மேலோங்­கி­யுள்­ளது. இப்­போது புதிய குழு­வொன்று இதனை முன்­னெ­டுக்க வேண்டும்.

Q ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறும் முயற்­சியில் இறங்­கி­யுள்ளார். இந்­நி­லையில் ஐ.தே.க. சிக்­கலில் உள்­ளது. எனவே சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கட்­சியின் தலைமைப் பதவி கிடைக்­காது போனால் எதிர்­நோக்கும் தேர்­தலில் உங்கள் கட்சி எப்­படி முகம் கொடுக்கப் போகி­றது? போட்­டி­யிட்டு வெற்றி பெறு­வது எப்­படிப் போனாலும் பலம் வாய்ந்த எதிர்க்­கட்­சி­யாக வர­மு­டி­யுமா?

இந்த அர­சாங்கம் போகிற போக்கில் மூன்றில் இரண்டு பெறு­வ­தென்­பது வெறும் கன­வுதான். இந்த அரசு மக்­களின் மூளையைச் சலவை செய்து கொண்டே பத­விக்கு வந்­தது. அப்­போ­தி­ருந்த எங்­க­ளது அரசால் நாட்டை வழி நடாத்த இய­லாது, நாம் பத­விக்கு வந்தால் நாட்டை சீராக நடாத்திக் காட்­டு­வோம், எம்­மிடம் முத­லீட்டும் திட்டம் இருக்கிறது என்றெல்லாம் ஆசை­காட்­டியே அவர்கள் ஆட்­சி­ய­மைத்­தனர். இப்­படி வந்­த­வர்கள் இன்று அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கவும் திண்­டா­டு­கின்­றனர். சீனா­வி­ட­மி­ருந்து கடன் கோரு­கின்­றனர். ஆனால் இன்று சீனாவும் பாதா­ளத்தில் வீழ்ந்­துள்­ளது. இந்­தி­யாவின் பின்­னாலும் போகி­றார்கள். முதன்­மு­த­லாக முன்­னெ­டுத்த கருத்­திட்­டத்­தையும் கைவிட்­டுள்­ளார்கள். மரக்­கறி விலை­களைக் கூட கட்­டுப்­ப­டுத்தத் தெரி­யாத இவர்­களால் எப்­படி மூன்றில் இரண்டைப் பெற முடி­கி­றது? ஆனால் எமது கட்சி இப்­போது போகிற போக்கில் நகர்ந்தால் அவர்­கள் இல­குவில் மூன்றில் இரண்டு இலக்கை அடை­வது உறுதி. இதனால் நாம் எம்மை சீர்­தி­ருத்­திக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அதற்­க­மைய சஜித் பிரே­ம­தா­சவின் தலை­மையில் புதிய கூட்­டணியொன்றை அமைத்து பாரிய மாற்றம் ஒன்றை நிகழ்த்த முன்­வந்­துள்ளோம். ஐ.தே.க.வும் இக்­கூட்­ட­ணிக்கு பூரண அதி­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளது. சஜித் தலை­மை­யி­லான இக்­கூட்­ட­ணியே பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு முகம் கொடுக்­க­வுள்­ளது.

இம்­மாதம் ஆரம்­பத்தில் இக்­கூட்­டணி உரு­வா­கி­விடும். அதன் மூலம் பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்­தையும் பெறலாம் என்று எதிர்­பார்க்­கிறோம்.

Q ஐ.தே.க.வின் தலை­வ­ராக ரணில் தொடர்ந்து இருப்பார். சஜித் பிர­தமர் வேட்­பா­ள­ரா­கவும் கூட்­ட­ணியின் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றுவார். இத்­தீர்­மா­னத்தின் மூலம் புதிய மாற்­ற­மெ­துவும் இல்­லையே?

ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறு­கி­ய­கால எல்லை வரை கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­லி­ருப்பார். அத்­துடன் அவர், கட்­சிக்­குள்ள அதி­கா­ரங்­களை புதிய கூட்­ட­ணி­யி­டமும் வழங்­குவார். அதன் மூலம் கொள்கை தயா­ரித்தல், வேட்­பாளர் பெயர் பட்­டியல் வழங்­கு­வது, தேசிய பட்­டியல் தயா­ரித்தல், பொதுச் செய­லாளர் நிய­மித்தல் உள்­ளிட்ட அதி­கா­ரங்கள் புதிய கூட்­ட­ணி­யையே வந்­த­டையும்.

Q இந்த அடிப்­ப­டை­யி­லான புதிய கூட்­டணி, புதிய பெய­ரிலும் புதிய சின்னம் ஒன்­றி­லுமா தோற்றம் பெறப்­போ­கி­றது?

ஆம், புதுப்­பெ­யரில் தான் கூட்­டணி உத­ய­மா­கி­றது. ஆனால் சின்னம் குறித்து இரு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. புதி­ய­தொரு சின்னம் அவ­சியம் என்று ஒரு குழு கருத்து முன்­வைக்­கி­றது. மற்­றொரு குழுவோ யானைச் சின்­னத்­தி­லேயே போட்­டி­யிட வேண்டும் என்­கி­றது. யானைச் சின்­னத்தை புதிய கூட்­ட­ணிக்கு வழங்­கு­வ­தற்கு கட்­சியால் முடியும். அவ்­வாறு இல்­லை­யென்றால் புதிய பெயரில், புதிய சின்­னத்தில் கூட்­டணி தோற்றம் பெறும். கடந்த தேர்­தலில் நாம் தோல்வி­யு­ற­வில்லை. தோற்­க­டிக்கப்பட்டோம். அதனால் தான் கட்­சியின் சகல அதி­கா­ரங்­களும் புதிய கூட்­ட­ணியை வந்­த­டைய வேண்டும் என்றே நாம் எதிர்­பார்க்­கிறோம். ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் கூட கூட்­ட­ணி­யிடம் வர­வேண்டும். எமது யோச­னை­களை சஜித் பிரே­ம­தாச முன்­வைத்­துள்ளார்.

எவரும் பழி வாங்­கப்­படமாட்­டார்கள் என்றும் கூறி­யுள்ளார். தன்­னிடம் பிரி­வினைவாதக் குழு­வெ­து­வு­மில்­லை­யென்றும் தெரி­வித்­துள்ளார். தமக்கு வேட்­பாளர் பட்­டி­யலில் இடம் கிடைக்­காது போகும் என்று சிறு கூட்டம் ஒன்று நினைப்­ப­தா­லேயே தான் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதில் சிக்கல் உரு­வா­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் தற்­போது பிர­தி­நி­தித்­துவம் வகிப்போர் அனை­வ­ரும் எதிர்­வரும் தேர்­தலில் வேட்­பாளர் பட்­டி­யலில் இடம்­பெ­றுவர் என்று சஜித் மற்றும் நாமும் தீர்­மானம் எடுத்­துள்ளோம். அதனால் கட்­சியின் அனை­வரும் ஒன்று பட்டு நடக்கும் கலந்­து­ரை­யா­டல்கள் வெற்றிபெற ஒத்­து­ழைக்க வேண்டும். அதன் மூலம் பிரச்­சி­னை­களைத் தீர்த்­துக்­கொண்டு முன்­ந­க­ரலாம்.

Q சஜித் பிரே­ம­தாச தலை­மைத்­து­வத்­துக்குப் பொருத்­த­மற்­றவர் என்றும் அவ­ரிடம் கட்சித் தலைமை ஒப்­ப­டைக்­கப்­ப­டு­மானால், கட்சி நாச­மாகி விடும் என்றும் ஒரு புறத்­தி­லி­ருந்து யோசனை முன்­வைக்­கப்­ப­டு­கி­றதே?

எப்­படி அவ்­வாறு கூற முடியும்? கடந்த தேர்தல் முடிந்த கையோடு, கடன் ஏற்­பட்­டுள்­ளது. புலி­களைச் சந்­திக்­கப்­போ­கிறார். அர­சி­ய­லி­லி­ருந்து ஒதுங்கப் போகிறார் என்­றெல்லாம் கதைகள் பரப்­பப்­பட்­டன. இவை­யாவும் சேறு பூசும் கதைகள் என்றே நாம் கூறு­கிறோம். தலை­மைத்­து­வத்­திற்­கு­ரிய இலட்­சணம் அவ­ரி­ட­முள்­ளது. தலை­மையை வழங்­காது அவ­ருக்கு அதற்­கு­ரிய ஆற்றல் இல்லை என்று எப்­படிக் கூறு­மு­டியும்? பதவி ஒப்­ப­டைக்­கப்­பட்ட பிற­குதான் அதனை மதிப்­பீடு செய்ய முடியும்.

யாப்பு சதி மோச­டியின் 52 நாள் ஆட்­சியின் போது சஜித்தின் தலை­மைத்­துவப் பண்பு பளிச்­சி­டவே செய்­தது. அதன்போது பிர­தமர் பத­வியை ஏற்­கும்­படி ஜனா­தி­பதி சுமார் 55 தட­வைகள் சஜித்­திற்கு தொலை­பேசி மூலம் அழைப்பு விடுத்­துள்ளார். சுய­நலம் உள்ள ஒரு­வ­ரென்றால் அப்­போதே அதனை ஏற்­றி­ருப்பார்.

அச்­சந்­தர்ப்­பத்­திலும் அவர் கட்­சியின் நிலைப்­பாடு, தலை­மைத்­து­வத்தின் மீதுள்ள பற்று என்­ப­ன­வற்­றுக்கே முன்­னு­ரிமை கொடுத்­துள்ளார். அப்­போது பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் அவர் வெளிப்­ப­டுத்­திய சுபா­வங்­களே அவர் தலை­மைத்­து­வத்­திற்கு அரு­க­தை­யு­டை­யவர் என்­பதை உணர்த்­தி­யதை எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது.

ஜனா­தி­பதி தேர்­தலில் சஜித்­துக்குக் கிடைத்த ஒரு மாத­கால அவ­காசம் போதாது. அத்­தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ 69 இலட்சம் வாக்­கு­களைப் பெற்றார். அவற்றுள் சுமார் 14 இலட்சம் வாக்­குகள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னு­டை­யது. மக்கள் விடு­தலை முன்­னணி 4 இலட்சம் வாக்­கு­களைப் பெற்­றது.

கோத்தா அணியால் மக்கள் மூளைச் சலவை செய்­யப்­பட்ட தாலேயே கோத்தா வெற்றி பெற்றார். இந்­நி­லையில் சஜித் பெற்ற வாக்­கு­களை எண்­ணிப்­பா­ருங்கள். தலை­மைத்­துவ ஆற்றல் இல்­லை­யென்றால் இவ்­வ­ளவு தொகை வாக்­கு­களை அவரால் பெற்­றி­ருக்க முடி­யுமா? இப்­போது இந்த அரசு பெற்ற வாக்கு வங்­கி­யையும் இழந்து வரு­கி­றது. இந்த வாக்­கு­க­ளையும் சஜித்தால் இப்­போது பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்­புள்­ளது.

Q இந்த தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­சவால் வெற்றிபெற முடியும் என்று நீங்கள் நினைக்­கி­றீர்­களா?

அர­சாங்கம் தேர்­தலை கிட்­ட­டியில் வைக்­காது ஒரு வரு­ட­ம­ளவில் காலம் தாழ்த்­து­மாக இருந்தால் காலம் கடக்கக் கடக்க எமக்கு வெற்றி வாய்ப்பு அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­ம். தான் அனு­ப­வ­மற்ற அர­சி­யல்­வா­தி­யென்­பதை கோத்­தா­பய இப்­போது நிரூ­பித்து வரு­கிறார். எனவே, புதிய கூட்­டணி, புதிய கொள்கை, புது­முகம் என்­ப­வற்­றுடன் நாம் களம் இறங்­கினால் வெற்றி நிச்­ச­ய­மாக வந்­த­டை­யவே செய்யும். பெப்ரவரி மத்­திய பகு­தியில் எமது தேர்தல் பிர­சாரப் பணியை ஆரம்­பிக்­கலாம் என்­றெண்­ணு­கிறேன். ஜனாதிபதித் தேர்தலிலும் இழுபறி ஏற்பட்டு இறுதிக் காலகட்டத்திலேயே பிரசாரப்பணியை ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டது. அதேபோன்று இத்தேர்தலில் நடக்கக்கூடாது என்ற கவலையே உள்ளது. விரைவாக எமது கட்சிப் பிரச்சினைகளும் முடிய வேண்டும்.

அப்போது பெப்ரவரி, மார்ச் மாதத்திற்குள்ளாவது எமது தேர்தல் போராட்டத்தை முன்னெடுக்கலாம். எமது குரல்கள் மக்களிடம் அவசரமாக சென்றடையக் கூடிய முறையொன்று கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் நடந்து கொள்கின்ற முறைகளுக்கு மத்தியில் எமது பிரசார நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது குறித்து புதிதாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த அரசின் போக்கு குறித்து, உண்மைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவேண்டும். இந்த வகையில் சஜித்திடம் இப்போது சிறந்த குழுவொன்றுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கின் அரசியல் தலைவர் ஒருவருக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகூடிய பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தமையை ஈண்டு குறிப்பிடலாம்.

Q ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கோருவது அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து, ஜனாதிபதிக்கிருந்த முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதற்கென்றே தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சஜித் பிரேமதாச தரப்பின் கருத்தென்ன?

நாட்டைச் சீராக்கவும் நாட்டு மக்கள் நலன் கருதியும் கோத்தாபய ராஜபக் ஷ யாப்புத் திருத்தம் கொண்டு வருவாராயின் அதற்கு நாம் நூறுவீதமான ஆதரவைத் தெரிவிப்போம். அதற்காக எப்போதும் தயாராகவே உள்ளோம்.

பதிலாக தனதோ தனது குடும்பத்தின் நலனுக்காகவோ கொண்டு வரும் எந்த யாப்புத் திருத்தத்துக்கும் நாம் உடன்படப் போவதில்லை.-Vidivelli

  • நேர்காணல்: கே.சஞ்ஜீவ
    தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்
    நன்றி– அனித்தா
    02.02.2020

Leave A Reply

Your email address will not be published.