கொரோனா வைரஸ் பரவல்: சீனாவில் உயிரிழப்பு 425 ஆக அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருவர் மரணம்

0 755

சீனாவில் கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்டு பலி­யானோர் எண்­ணிக்கை 425 ஆக அதி­க­ரித்­துள்ள நிலையில் சீனா­வுக்குவெளியில் கொரோனா வைர­ஸினால் இரண்­டா­வது மரணம் ஒன்றும் பதி­வா­கி­யுள்­ளது. 

ஹொங்­கொங்கைச் சேர்ந்த 39 வய­தான நபர் ஒரு­வரே கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­த­வ­ராவார். இவர் சீனாவின் வூஹான் நக­ரி­லி­ருந்து ஹொங்கொங் திரும்­பி­ய­வ­ராவார். ஹொங்கொங் ஹாம்­போ­கார்டன் பகு­தியைச் சேர்ந்த அவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பல­னின்றி பலி­யா­கி­யுள்ளார். ஏற்­க­னவே சீனா­வுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைர­ஸினால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சீனாவில் இது­வரை இவ்­வைரஸ் கார­ண­மாக 425 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 20471 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். சீனாவின் 33 மாகா­ணங்­களில் இவ்­வைரஸ் பர­வி­யுள்­ளது. மேலும் கொரோனா வைரஸ் சீனாவைத் தவிர 24 நாடு­களில் பர­வி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்து மக்­களைக் காப்­பாற்­று­வ­தற்கும், கொரோனா வைர­ஸுக்­குட்­பட்­டுள்ள நோயா­ளர்­க­ளுக்குத் தேவை­யான வச­தி­களை வழங்­கு­வ­தற்கும் சீனா இரா­ணு­வத்தை சேவையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளது. இதே­வேளை நேற்று முன்­தினம் ஷங்காய் மற்றும் சென்சேன் பங்குச் சந்­தையில் 10 வீதம் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக சீன அரசு அறி­வித்­துள்­ளது. அத்தோடு சீனாவுக்கு அவசரமாக முகக்கவசங்கள் மற்றும் வைத்திய உபகரணங்கள் தேவைப்படுவதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.