சஜித் தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம், பதவிகள் பற்றிய அறிவிப்பு விரைவில்

0 747

எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான புதிய கூட்­ட­ணியின் சின்னம் மற்றும் பத­விகள் பற்­றிய அறி­வித்­தலை விரைவில் வெளி­யி­டுவோம் என புதிய கூட்­ட­ணியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

சஜித் பிரே­த­ம­தாச தலை­மை­யி­லான புதிய கூட்­ட­ணியின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அவர், முன்­ன­ணியின் அடுத்­த­கட்ட  நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்­பாக அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான புதிய கூட்­ட­ணியின் நட­வ­டிக்­கை­களை மிக விரைவில் ஆரம்­பிக்க இருக்­கின்றோம். பொதுத் தேர்தல் நெருங்கி இருப்­பதால் அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே ஆரம்­ப­மாக மேற்­கொள்ள இருக்­கின்றோம்.

இது­தொ­டர்­பாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யாட இருக்­கின்றோம். அத்­துடன் எமது கூட்­ட­ணியின் சின்னம் மற்றும் அதன் பத­விகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டியே தீர்­மா­னிக்க இருக்­கின்றோம். என்­றாலும் மிக விரைவில் சின்னம் மற்றும் பத­வி­களை அறி­விப்போம். அத்­துடன் எமது புதிய கூட்­ட­ணிக்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலை­வர்­களும் இணக்கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். மேலும் ஜன­நா­ய­கத்­துக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கும் எமது புதிய முன்னணியில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.