இலங்கையில் கொரோனா: அநாவசிய பீதி வேண்டாம்

0 863

கொரோனா வைரஸ் முழு உல­கத்­தையும் பீதிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல, முழு உலக மக்­களும் கொரோனா வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்தும் தங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வதில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளனர். மரண பயம் அனை­வ­ரையும் ஆட்­கொண்­டுள்­ளது.

‘முழு உல­கத்­துக்கும் இது நெருக்­க­டி­யான நேரம். இலங்­கைக்கும் ஒரு வகையில் நெருக்­க­டி­யான நேர­மா­கவே உள்­ளது. என்­றாலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் அநா­வ­சிய பீதி கொள்­ளத்­தே­வை­யில்லை என்­றாலும் நாம் தயா­ராக இருக்க வேண்டும். இந்த வைரஸ் பர­வு­வதைத் தடுப்­ப­தற்கு நாம் உரிய வழி­மு­றை­களைப் பின்­பற்ற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்’ என்று சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரி­வித்துள்ளார்.

டாக்டர் அனில் ஜாசிங்­கவின் கூற்­றுப்­படி இலங்­கை­யர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் அதீத பீதி கொள்­ளத்­தே­வை­யில்லை. ‘வரும் முன் காப்போம்’ என்ற வகையில் நாம் எம்மைப் பாது­காத்துக் கொள்­வது அவ­சி­ய­மாகும்.

கொரோனா வைரஸ் மிரு­கங்­க­ளி­லி­ருந்தே வரு­கின்­றன. அவை சில சந்­தர்ப்­பங்­களில் மனித உட­லுக்குள் செல்­கின்­றன. இம்­முறை சீனாவில் முதலில் விலங்­கி­லி­ருந்து மனித உட­லுக்கு வந்­துள்ள கொரோனா வைரஸ் மனி­த­னி­லி­ருந்து மனித உட­லுக்குச் செல்லும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இவ்­வைரஸ் தொற்றுக் கார­ண­மாக சீனாவில் கடந்த புதன்­கி­ழமை வரை 170 பேர் பலி­யா­கி­யுள்­ளார்கள். இந்த வைரஸ் தாக்­கத்­தினால் 7711 பேர் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கி­றார்கள். புதன்­கி­ழமை மாத்­திரம் சீனாவில் 38 பேர் பலி­யா­கி­யுள்­ளமை இந்த வைரஸின் கொடூர தாக்­கத்­தினை உறு­தி­செய்­கி­றது. இதே­வேளை கடந்த 4 தினங்­க­ளுக்குள் சீனா­வி­லி­ருந்து 661 பேர் இலங்கை திரும்­பி­யுள்­ளனர். இவர்­களில் 488 பேர் மாண­வர்­க­ளா­வார்கள்.

சீனப்பெண் குண­ம­டைந்தார்

சீனா­வி­லி­ருந்து இலங்­கைக்கு சுற்­றுலா வந்த 43 வய­தான சீனப்பெண் ஒரு­வரே முதன்முதல் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­னவர் என இனங்­காணப்பட்டார். கடந்த 19 ஆம் திகதி சீனா­வி­லி­ருந்து இலங்கை வந்த சுற்­றுலாக் குழு­விலே அவரும் இலங்­கைக்கு வந்தார். அக்­குழு இலங்­கையில் பல பகு­தி­க­ளுக்கும் சுற்­றுலா மேற்­கொண்­டி­ருந்­தது. அக்­கு­ழு­வினர் கடந்த 25 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ள நிலையில் குறிப்­பிட்ட பெண் மாத்­திரம் சுக­யீனம் கார­ண­மாக ஐ.டி.எச். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அங்கு மேற்­கொண்ட மருத்­துவ பரி­சோ­த­னை­களின் பின்பே அவர் கொரோனா வைரஸ் பீடிக்­கப்­பட்­டி­ருப்­பவர் என்­பது ஊர்­ஜிதம் செய்­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அரசும், சுகா­தார அமைச்சும் உட­னடி நட­வ­டிக்­கை­களில் இறங்­கின. அப்­பெண்ணின் இரத்த மாதிரி ஆய்­வுக்­காக வெளி­நாட்­டுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

குறிப்­பிட்ட பெண்­மணி சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து முழு­மை­யாகக் குண­ம­டைந்­துள்­ள­தாக அங்­கொடை தொற்று நோய்ப் பிரி­வான ஐ.டி.எச் வைத்­தி­ய­சாலை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சந்­தே­கத்­துக்­கி­ட­மான 18 நோயா­ளர்கள்

கொரோனா வைரஸ் தொற்­றுக்­குட்­பட்­ட­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் மேலும் 18 பேர் ஐ.டி.எச் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள் விஷேட வைத்­திய கண்­கா­ணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வரு­வ­தாக வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்த நோயா­ளர்கள் காய்ச்சல், இருமல், சுவா­சிப்­பதில் சிரமம் ஆகிய நோய் அறி­கு­றிகள் கார­ண­மா­கவே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அவர்­க­ளது இரத்த மாதி­ரிகள் வைத்­திய ஆய்வு கூடத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

ஐ.டி.எச்.வைத்­தி­ய­சாலை காய்ச்சல் நோய் பிரி­வுக்கு சிகிச்­சைக்­காக வருகை தரு­வோரில் அநேகர் சீன நாட்­ட­வர்கள் என்றும் அவர்கள் இலங்­கைக்கு சுற்­று­லாவில் வந்­த­வர்கள் என்றும் அவர் கூறினார். வைரஸ் .தொற்­றுக்­குள்­ளாகி தற்­போது குண­ம­டைந்து தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் குறிப்­பிட்ட சீனப்பெண் ஏனைய நோயா­ளர்­க­ளி­லி­ருந்தும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

பாட­சா­லைகள் மூடப்­ப­ட­மாட்­டாது

கொரோனா வைரஸ் தாக்­கத்தை எதிர்­பார்த்து பாட­சா­லை­களை மூடு­வ­தற்கோ அல்­லது பாட­சா­லை­களில் இடம்­பெ­று­கின்ற இல்ல விளை­யாட்டுப் போட்­டி­களை நிறுத்­து­வ­தற்கோ எவ்­வித தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

மாண­வர்­க­ளுக்கு அவ­சர தொற்­றுநோய் பாது­காப்பு தேவை­யாயின் முறைப்­படி ஊட­கங்கள் ஊடாக உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்புச் செய்­யப்­படும். இதே­வேளை தற்­போது சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பரப்­பப்­படும் கட்­டுக்­க­தை­க­ளுக்கு பொது மக்கள் ஏமா­றவோ அச்­சம்­கொள்­ளவோ தேவை­யில்லை என உயர்­கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் மாண­வர்கள் மத்­தி­யிலும் பெற்றோர் மத்­தி­யிலும் பெரும் அச்சம் தோன்­றி­யுள்­ளது. சில தரப்­பி­னரால் அச்­சத்தை தோற்­று­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதனை நம்­ப­வேண்டாம் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

முகக்­க­வசம் தேவை­யில்லை

நோயற்ற நிலை­மையில் மற்ற நபர்­க­ளி­ட­மி­ருந்து நோய் தொற்றும் என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­திக்­கொண்டு முகக்­க­வசம் அணி­வது தற்­போ­தைக்கு அவ­சி­ய­மற்­றது என சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

நோயுற்ற நபர் ஒருவர் முத்­த­மி­டா­விட்டால், சாதா­ரண இடை­வெ­ளியில் இருந்து உமிழ்­நீரை துப்­பு­வ­தில்லை என்றால் இந்த வைரஸ் காற்­றி­னூ­டாக தொற்­று­வ­தற்கு வாய்ப்­பில்லை என சுகா­தார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் வைத்­திய நிபுணர் தீபா கமகே தெரி­வித்­துள்ளார்.

முகக்­க­வசம் அணிய வேண்­டிய சூழ்­நிலை உரு­வானால் அது தொடர்பில் சுகா­தார அமைச்சு அறி­விக்கும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நோய்த் தொற்­றுக்­குள்­ளான நபர்­களே முகக்­க­வசம் அணிந்­து­கொள்ள வேண்டும். இன்று சந்­தையில் விற்­பனை செய்யும் முகக்­க­வசம் சுமார் 8 மணித்­தி­யா­லங்­க­ளுக்கே அணி­யக்­கூ­டி­ய­தாகும். குறிப்­பிட்ட முகக்­க­வ­சத்தை தொடர்ந்து அணி­வ­தாக இருந்தால் அதன் மூலம் வேறு வைரஸ்கள் உட­லுக்குள் செல்லும் அபாயம் இருக்­கி­றது எனவும் சுகா­தார அமைச்சு மக்­களைத் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

மாண­வர்­க­ளுக்கும் முகக்­க­வசம் அவ­சி­ய­மில்லை

மாண­வர்கள் தற்­போ­தைய சூழ்­நி­லையில் முகக்­க­வசம் அணியும் தேவை­யில்லை எனவும், முகக்­க­வ­சங்­களை சந்­தையில் கொள்­வ­னவு செய்து அணி­யு­மாறு கல்வி அமைச்சோ அல்­லது சுகா­தார அமைச்சோ மாண­வர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­க­வில்லை. ஒருசில வர்த்­த­கர்கள் இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி அதி­கூ­டிய விலையில் முகக்­க­வ­சங்­களை விற்­பனை செய்யும் நோக்­குடன் மாண­வர்கள் மத்­தியில் பீதியைக் கிளப்­பி­யுள்­ளார்கள்.

மாண­வர்கள் முகக்­க­வசம் அணிய வேண்­டிய சூழ்­நிலை உரு­வானால் அது தொடர்பில் கல்வி அமைச்சு உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்கும் எனவும் உயர்­கல்­வி­ய­மைச்சர் தெரி­வித்­துள்ளார்.

கல்­வி­ய­மைச்சு சுற்­ற­றிக்கை

கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்தும் பாட­சாலை மாண­வர்­களைப் பாது­காப்­ப­தற்­காக கடைப்­பி­டிக்க வேண்­டிய செயற்­பா­டுகள் தொடர்­பாக சகல மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்வி அதி­கா­ரி­க­ளுக்கும் தேசிய பாட­சாலை அதி­பர்­க­ளுக்கும் கல்வி அமைச்­சினால் ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. கல்வி அமைச்சு சுற்­ற­றிக்கை ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளது.

*கைகளைச் சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ளுங்கள். சவர்க்­காரம் அல்­லது மது­சார கிரு­மி­நா­சினி பயன்­ப­டுத்தி சுத்தம் செய்து கொள்­ளலாம்.

*தும்மல் ஏற்­ப­டும்­போதும், இருமல் ஏற்­படும் போதும் வாய், மூக்கை டிசு அல்­லது கைக்­குட்­டையைப் பயன்­ப­டுத்தி அல்­லது முழங்­கை­கக்கு உள்­ளேயே மறைத்துக் கொள்­ளுங்கள்.

*பயன்­ப­டுத்­திய டிசு கட­தா­சியை சுகா­தார முறையில் தொட்­டி­யி­லிட வேண்டும்

*தேவை­யில்­லாது அடிக்­கடி முகம், கண் மற்றும் மூக்கைத் தொடு­வதைத் தவிர்க்­கவும்.

*தற்­போ­தைய சூழ்­நி­லையில் ஆரோக்­கி­ய­மான மாண­வர்கள் பாட­சா­லைக்கு முகக்­க­வசம் அணிந்து வரத்­தே­வை­யில்லை

காய்ச்சல், இருமல், வயிற்­று­வலி இருந்தால் முகக்­க­வசம் அணிய வேண்டும் என்­ப­துடன் கூடிய விரைவில் வைத்­தி­யரின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் சீனர்கள் பரி­சோ­தனை

இலங்­கையில் பல பகு­தி­களில் அதி­வேக பாதை நிர்­மாணம் உட்­பட பாரிய திட்­டங்­களில் பணி­பு­ரியும் சீன நாட்­டி­ன­ருக்கு கொரோனா வைரஸ் தொற்­றி­யுள்­ளதா என்­பதைப் பரி­சோ­திக்கும் நட­வ­டிக்கைள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
சிறப்பு சுகா­தார பரி­சோ­த­கர்கள் அடங்­கிய குழு­வினர் இந்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். சீனர்கள் பணி­பு­ரியும் திட்ட இடங்­க­ளுக்கு நேரில் சென்று பரி­சோ­தனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­துடன் வைரஸ் தொற்று ஏற்­பட்­டுள்­ள­மைக்­கான அறி­கு­றிகள் தென்­பட்டால் அவர்­க­ளுக்கு உட­ன­டி­யாக சிகிச்­சைகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

கொழும்பு நகர் உள்­ளிட்ட மேலும் பல பகு­தி­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான சீனப் பிர­ஜைகள் பணி­பு­ரி­வதால் அவர்கள் தொடர்பில் சுகா­தாரப் பிரி­வினர் விசேட கவனம் செலுத்­தியே இத்­திட்­டத்தை அமுல் செய்­வ­தா­கவும் அதனால் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்­கை­யர்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை எனவும் சுகா­தார சேவைகள் பிரதிப் பணிப்­பாளர் வைத்­திய நிபுணர் பபா பலி­ஹ­வ­டன தெரி­வித்­துள்ளார்.
பல்­வேறு வேலைத் திட்­டங்கள்

கொரோனா வைரஸ் தொற்று இலங்­கைக்குள் பர­வு­வதைத் தடுப்­ப­தற்­காக இலங்கை அர­சாங்கம் பல்­வேறு வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது. சுகா­தார அமைச்சு, பாது­காப்பு அமைச்சு, வெளி­வி­வ­கார அமைச்சு, சுற்­று­லாத்­துறை அமைச்­சு­க­ளுடன் இணைந்து இந்­ந­ட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. சீனாவின் 3 பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் நாட்­டுக்குள் வரு­வ­தற்­கான விசா வழங்­கலை குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­களம் இரத்துச் செய்­துள்­ளது.

வூஹான், ஹுவெங்­ஹனெக், ஏஷு ஆகிய நக­ரங்­க­ளி­லி­ருந்து வரு­வோ­ருக்­கான விசா நடை­மு­றையே இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் சீனாவின் 53 நக­ரங்­களில் வசிக்கும் மக்கள் இலங்­கைக்கு வருகை தரு­வ­தற்கு முன்பு விசா­வுக்கு விண்­ணப்­பித்தல் அவ­சியம் என குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

கட்­டு­நா­ய­கக விமான நிலைய சுகா­தார பிரிவு

சீனா­வி­லி­ருந்து கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு அழைத்து வரப்­படும் இலங்கை மாண­வர்கள், விமான நிலை­யத்தில் ஆரம்பகட்ட கொரோனா பரி­சோ­த­னை­களின் பின்பு தத்தம் வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றனர்.
கொரோனா வைரஸ் தொற்று தனது செயற்­பாட்டை உக்­கிர நிலைக்குக் கொண்டுவர 2 முதல் 14 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும் என மருத்­துவ ஆராய்ச்­சி­யா­ளர்கள் குறிப்­பிடும் நிலையில் இவ்­வாறு ஆரம்­ப­கட்ட சோத­னை­யொன்­றுடன் இலங்கை மாண­வர்­களை வீடு­க­ளுக்கு அனுப்பும் செயன்­முறை அவ­தானம் மிக்­கதென கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் சுகா­தார வைத்­திய பிரிவின் வைத்­தியர் பீ.ஆர். பெரேரா தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு சீனா­வி­லி­ருந்து இலங்கை திரும்பும் மாண­வர்கள் இரு வாரங்கள் மருத்­துவ முகாமில் தடுப்பில் வைத்­தி­ருந்து அதன் பின்பே அவர்கள் வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இம்­மு­றையே சிறந்­த­தாக அமையும் எனவும் அவர் சுட்டிக் காட்­டி­யுள்ளார்.

சூழலை எதிர்­கொள்ள 12 வைத்­தி­ய­சா­லைகள்

கொரோனா வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­வ­தற்­காக ஐ.டி.எச். மருத்­து­வ­ம­னைக்கு மேல­தி­க­மாக 12 வைத்­தி­ய­சா­லைகள் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு மாகா­ணத்­திற்கு ஒன்று என்ற அடிப்­ப­டை­யில வைத்­தி­ய­சா­லை­களில் விசேட விடு­திகள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. மேல் மாகாணம் அதி­கூ­டிய சனத்­தொ­கையைக் கொண்­டுள்­ளதால் அங்கு ஒன்­றுக்கு மேற்­பட்ட வைத்­தி­ய­சா­லைகள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த வைத்­தி­ய­சா­லை­களில் தேவை­யான அனைத்து மருத்­துவ வச­தி­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. சந்­தே­கத்தின் பேரில் சிகிச்சைபெற வரு­ப­வர்­களை பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இங்கு சிகிச்­சைக்­காக வரு­ப­வர்­களில் 99 வீத­மானோர் கொரோனா வைரஸ் தாக்­க­லுக்கு உட்­ப­டா­த­வர்கள் என வைத்­தி­ய­சாலை அறிக்கைள் தெரி­விக்­கின்­றன.

இங்கு பணி­ப­ரியும் சுகா­தார உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அவை தனி­யான பாது­காப்புக் கரு­வி­க­ளாகும். அதனால் சுகா­தார உத்­தி­யோ­கத்­தர்­களும் அச்­ச­மின்றி பணி­பு­ரி­கி­றார்கள்.

தேசிய அனர்த்த நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்த கோரிக்கை

கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்­பட்­டுள்ள இந்த கால­கட்­டத்தை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தேசிய அனர்த்த நிலை­யாகப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென அமைச்­சர்­க­ளுக்­கான செய­லா­ளர்­களின் தேசிய அமைப்பின் தலைவர் கீர்த்தி ஸ்ரீவீர­சிங்க கோரிக்கை விடுத்­துள்ளார்.
மக்­களின் பாது­காப்­பிற்­காக அர­சாங்கம் இல­வ­ச­மாக சுவாசக் கவ­சங்­களை (மாஸ்க்) வழங்க வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்ளார்.

சமூக வலைத்­தள செய்­தி­களை நம்­ப­வேண்டாம்

சீனா­வி­லி­ருந்து உலகின் பல்­வேறு நாடு­க­ளுக்குப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வெளி­வரும் எந்­த­வொரு சமூகவலைத்தள தக­வ­லையும் நம்ப வேண்­டா­மென சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

சமூக வலைத்­த­ளங்­களில் ஏரா­ள­மான வதந்­திகள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. அவற்றை நம்பி மக்கள் அச்­ச­ம­டை­யவோ, பதற்­ற­ம­டை­யவோ தேவை­யில்லை என சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை நாட்­டி­லுள்ள பல வைத்­தி­ய­சா­லை­களில் கொரோனா வைரஸ் தாக்­கத்­துக்­குள்­ளா­கிய நோயா­ளர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்கள் எனப் பரப்­பப்­படும் செய்­தி­யிலும் எந்த உண்­மை­யு­மில்லை எனவும் அறிக்­கையில் தெரி­விக்கப் பட்­டுள்­ளது.

கொழும்பு உலக வர்த்­தக மத்­திய நிலை­யத்தில் நபர் ஒருவர் சுக­வீ­ன­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­காக கொண்டு செல்­லப்­பட்­ட­போது புகைப்­ப­ட­மெ­டுத்து சில ஊட­கங்­களில் செய்­தி­யாகப் பிர­சு­ரித்­தி­ருப்­பதும் பொய்­யான தவ­றான பிர­சா­ர­மாகும். அந்தச் செய்­தியில் குறிப்­பிட்ட நபர் கொரோனா வைரஸ் தாக்­கத்­திற்கு உட்­பட்­டவர் என தவ­றாக பிர­சாரம் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான கட்­டுக்­க­தைகள் மக்கள் மத்­தியில் தேவை­யற்ற பீதியை உரு­வாக்கும் வகையில் பரப்­பப்­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அரசின் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது எனவும் அவ்­வ­றிக்கை தெரி­விக்­கி­றது.

மேலும் இத்­த­கைய பொய்ப்­பி­ர­சா­ரங்­க­ளுக்கு ஏமாற்­ற­ம­டைய வேண்டாம் என அர­சாங்கம் பொது மக்­களை வேண்­டிக்­கொள்­கி­றது. வைரஸ் தாக்­கத்­துக்­குட்­பட்ட எவ­ரா­வது ஒருவர் எந்தப் பிர­தே­சத்­திலும் இனங்­கா­ணப்­பட்டால் அது தொடர்­பான விப­ரங்கள் பொதுமக்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

எனவே, பொதுமக்கள் அர­சாங்­கத்­தி­னதும் சுகா­தார அமைச்­சி­னதும் உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­க­ளையே நம்­ப­வேண்டும். அவற்றின் அறி­வு­றுத்­தல்­க­ளையே பின்­பற்ற வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்­திற்கு 5000 முகக்­க­வ­சங்கள்

பாரா­ளு­மன்ற உறுப்பினர்களதும், பாராளுமன்ற உத்தியோகத்தர்களினதும் பாதுகாப்பு கருதி 5000 முகக்கவசங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் தொற்றி லிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பாராளுமன்ற வைத்தியப்பிரிவு பாராளுமன்ற விநியோகப் பிரிவினூடாக இந்தக் கொள்வனவைச் செய்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் சுகாதார அமைச்சினூடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சமமான பாதுகாப்பு தேவை

மிகவும் பீதியை உருவாக்கியுள்ள கொரோனா வைரஸிலிருந்தும் நாட்டு மக்கள் அனைவரையும் எவ்வித பாகுபாடும் இன்றி பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த ஏற்பாடுகளையே நாட்டு மக்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், இன்றைய சூழலில் மக்கள் முகக்கவசம் (Mask) அணியத் தேவையில்லை. பாடசாலை மாணவர்களும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தும் இந்த அறிவிப்புகளை செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் ஆயிரக்கணக்கில் முகக்கவசம் கொள்வனவு செய்வது நியாயமானதா?
உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு கல்வி அமைச்சோ, சுகாதார அமைச்சோ ஆலோசனை வழங்கவில்லை. அவர்கள் முகக்கவசம் அணியும் அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் பீதியான சூழலில் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஊழியர்களும் மாத்திரம் முகக்கவசம் அணிந்து கொள்வதை எவ்வாறு நியாயப்படுத்தலாம். அரசு நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக வழிநடாத்த வேண்டும். நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு மாத்திரம் விஷேட சலுகைகள் இருக்கக்கூடாது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.