ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை நிராகரித்தது பலஸ்தீன்

ஜெரூசலம் விற்பனைக்கு அல்ல என்கிறார் மஹ்மூத் அப்பாஸ்

0 1,126

பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்ட அமெ­ரிக்­காவின் மத்­திய கிழக்கு அமைதி திட்­டத்தை அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறி­வித்­துள்ளார்.

சமா­தா­னத்தை நோக்­கிய பாரிய கால­டி­யினை இஸ்ரேல் எடுத்து வைத்­தி­ருக்­கின்­றது என இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யாஹு அருகில் நிற்­கையில் ட்ரம்ப் தெரி­வித்தார். எனது தூர­நோக்கு இரு தரப்­பிற்கும் வெற்றி என்ற அடிப்­ப­டை­யி­லான தீர்­வினைக் கொண்­டுள்­ளது எனத் தெரி­வித்த அவர் இஸ்ரேல் தலை­வர்கள் அங்­கீ­க­ரிப்­பார்கள் எனவும் தெரி­வித்தார்.

இந்த திட்­டம்தான் பலஸ்­தீ­னத்­திற்­கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி­யுள்ளார். ஆனால், அமெ­ரிக்­காவின் அமைதி திட்­டத்தை சதித்­திட்டம் எனக் கூறி புறக்­க­ணித்­துள்­ளது பலஸ்­தீனம்.

இறந்த நிலையில் வந்­துள்ள முன்­மொ­ழிவு என இதனை வரு­ணித்­துள்ள பலஸ்­தீ­னர்கள், இது பலஸ்­தீ­னர்­களின் அபி­லா­ஷை­களை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான முயற்­சி­யாகும் எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

அமெ­ரிக்கா அறி­வித்­துள்ள திட்­டத்­தின்­படி ஜெரூ­சலம் பிரிக்­கப்­ப­டாத இஸ்­ரேலின் தலை­ந­க­ராக இருக்கும்.

பலஸ்­தீன சுதந்­திர அரசை முன்­மொ­ழிந்­துள்ள அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேற்கு கரை குடி­யேற்­றங்கள் மீதான இஸ்­ரேலின் இறை­யாண்­மை­யையும் அங்­கீ­க­ரித்­துள்ளார்.

இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­ச­மினை தனது அருகில் வைத்துக் கொண்டு இந்த அமைதித் திட்­டத்தை வெள்ளை மாளி­கையில் அறி­வித்த டிரம்ப், “இதுதான் பலஸ்­தீ­னத்­திற்­கான கடைசி வாய்ப்பு” என்றும் கூறினார்.

இன்று வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த தின­மாகும் எனத் தெரி­வித்த இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெட்­டன்­யாஹு ட்ரம்பின் முன்­மொ­ழி­வுக்­காக நன்­றி­யி­னையும் தெரி­வித்தார். பலஸ்­தீ­னர்கள் இத் திட்­டத்தை ஏற்­றுக்­கொள்­வார்­க­ளானால் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு விரும்­பு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

பலஸ்­தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், “இது சதித்­திட்டம்” என்று கூறி அமெ­ரிக்­காவின் முன்­மொ­ழி­வினை புறக்­க­ணித்­துள்ளார்.

மஹ்மூத் அப்பாஸ், “நான் டிரம்­பிற்கும், பெஞ்­சமின் நெதன்­யா­ஹூ­வுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்­பு­கிறேன். ஜெரூசலம் விற்­ப­னைக்கு அல்ல, எங்கள் உரி­மை­களைப் பேரம் பேச முடி­யாது. அவை விற்­ப­னைக்கு அல்ல. உங்­க­ளது சதித்­திட்டம் வெல்­லாது,” எனக் கூறி­யுள்ளார்.

உலகின் மிக நீண்­ட­கால சிக்­கல்­மிக்க பிரச்­சி­னை­களுள் ஒன்­றான இதனைத் தீர்ப்­ப­தற்கு நீண்ட முயற்­சி­களின் பின்னர் ட்ரம்பின் முன்­னெ­டுப்­பி­னை­ய­டுத்து அவ­ரது மரு­ம­க­னான ஜாரெட் குஷ்­ன­ரினால் இம் முன்­மொ­ழிவு வரை­யப்­பட்­டது.

2014 ஆம் ஆண்டு இஸ்­ரேல்-­–ப­லஸ்­தீன பேச்­சு­வார்த்தை தோல்­வி­ய­டைந்­தது. ட்ரம்பின் நிரு­வா­கத்­தோடு இணைந்­து­கொள்ள மறுப்புத் தெரி­வித்த பலஸ்­தீ­னர்கள் கடந்த வருடம் அறி­விக்­கப்­பட்ட 50 பில்­லியன் பொரு­ளா­தார புத்­து­யி­ர­ளிப்பு முதற்­கட்ட முன்­மொ­ழி­வையும் நிரா­க­ரித்­தனர்.

50 பக்கம் கொண்ட இம் முன்­மொ­ழிவில் பலஸ்­தீ­னர்கள் முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்கும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­கரை பாரிய சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்கள் மீது இஸ்­ரேலின் இறைமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரையில் ஜோர்தான் பள்­ளத்­தாக்கின் பாது­காப்பு கட்­டுப்­பாடு இஸ்­ரே­லுக்கு வழங்­கப்­படும் என்றும் ட்ரம்ப் தெரி­வித்தார்.

இத் திட்­டத்தில் இஸ்­ரே­லிய குடி­யேற்றக் கட்­டு­மானப் பணிகள் நான்கு ஆண்­டு­க­ளுக்கு இடை­நி­றுத்­தப்­படும் எனவும் இக் காலப்­ப­கு­தியில் விரி­வான ஒப்­பந்­தத்­திற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­படும் எனவும் ட்ரம்பின் அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பாத ட்ரம்ப் நிரு­வா­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இந்த நான்கு ஆண்டு காலத்­திற்குள் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்­லை­யானால் இக் காலப் பகு­தியில் நீடிப்புச் செய்­யப்­ப­டுமா என்­பது தொடர்பில் எவ்­வித தெளி­வு­களும் இல்லை.

எவ்­வா­றெ­னினும் பாலஸ்­தீன அரசை உரு­வாக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த அதி­கா­ரிகள், இந்த திட்டம் இரு தேசங்கள் என்ற தீர்வு கைவி­டப்­ப­டுமா என்­பது தொடர்பில் தெளி­வில்லை எனவும் தெரி­வித்­தனர்.

ஜெரூ­சலம் இஸ்­ரேலின் ‘பிரிக்­கப்­ப­டாத தலை­ந­க­ராக’ இருக்கும் எனத் தெரி­வித்த ட்ரம்ப் ஆனால், இத் திட்­டத்தின் கீழ் ‘கிழக்கு ஜெரூ­சலம்’ பலஸ்­தீன அரசின் தலை­ந­க­ராக செயல்­படும் எனவும் தெரி­வித்தார்.

‘கிழக்கு ஜெரூ­சலம்’ என்­பதன் மூலம் அவர் எதனை அர்த்­தப்­ப­டுத்­து­கின்றார் என்­பதை அவர் விரி­வாகக் கூற­வில்லை. பாலஸ்­தீ­னிய தலை­ந­கரம் ‘கிழக்கு ஜெரூ­ச­லத்தின்’ சில பகு­தி­களில் இருக்­கலாம் எனவும் அவர் தனது டுவிட்­டரில் தெரி­வித்­துள்ளார்.

ட்ரம்ப் ஏலவே இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரூ­ச­லத்தை அங்­கீ­க­ரித்து அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை டெல் அவி­வி­லி­ருந்து ஜெரூ­ச­லத்­திற்கு மாற்­றி­யி­ருந்தார்.
ஜெரூ­சலம் விற்­ப­னைக்­கல்ல, எமது உரி­மை­களும் விற்­ப­னைக்­கல்ல என்­பது மட்­டு­மல்ல எவ்­வித பேரம் பேச­லுக்கும் இட­மில்லை என இத் திட்டம் தொடர்பில் பதி­ல­ளித்த அப்பாஸ் தெரி­வித்தார்.

ட்ரம்பின் அறிக்கை மிகுந்த ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக ஹமாஸ் அதி­கா­ரி­யான சமி அபூ ஸுஹுரி தெரி­வித்தார்.

திட்­டத்தின் முக்­கிய முன் வரை­வுகள் என்­னென்ன?

எந்த பலஸ்­தீ­னரும், இஸ்­ரே­லி­யரும் தங்கள் இடத்­தி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­ப­ட­மாட்­டார்கள்.

அதா­வது, இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்த மேற்கு கரையில் உள்ள யூத குடி­யேற்­றங்­களில் எந்த மாற்­றமும் இல்லை.

இஸ்­ரேலின் பகு­தி­யாக டிரம்ப் கூறும் திட்­டத்­தின்­படி இந்த பிராந்­தி­யத்தின் மீது இஸ்­ரே­லுக்கு உள்ள இறை­யாண்­மையை அமெ­ரிக்கா அங்­கீ­க­ரிக்கும். இஸ்ரேல் செய்ய விரும்பும் பிராந்­திய ரீதி­யி­லான சம­ர­சங்­களைக் காட்­டு­வ­தாக டிரம்ப் தெரி­விக்கும் ஒரு கருத்­துரு வரை­ப­டமும் இந்த திட்­டத்தில் உள்­ள­டங்கும்.

பலஸ்­தீன தரப்­புக்குக் கிழக்கு ஜெரூ­ச­லத்தில் ஒரு தலை­ந­கரை இந்த வரை­படம் அளிக்­கி­றது.

இங்கு அமெ­ரிக்கா தங்­களின் தூத­ர­கத்தைத் திறக்கும் என்று டிரம்ப் தெரி­வித்­துள்ளார். டிரம்ப் அறி­வித்­துள்ள திட்­டத்­தின்­படி இந்த பிராந்­தி­யத்தில் 15 சத­வீ­தத்­துக்கு மேலாக பலஸ்­தீ­னர்­க­ளுக்கு கட்­டுப்­பாடு கிடைப்­ப­தாக தெரி­வித்­துள்ள பலஸ்­தீன விடு­தலை அமைப்­பான பிஎல்ஓ, இதனை ”வரலாற்று சிறப்பு வாய்ந்த பலஸ்தீனம்” என்று கூறுகிறது.

ஜெரூசலம் ”பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராக தொடர்ந்து இருக்கும்”. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெரூசலம் தொடர்பாக தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. 1976 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததாகக் கூறும் பலஸ்தீனம் அந்நகரை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பெரும்பாலான உலக நாடுகள் ஜெரூசலமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை.

இந்த நிலையில் ஜெரூசலமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே மோதல் வலுத்தது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.