கொரோனா வைரஸ் அச்சம்: பாடசாலைகளை மூடவேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை

தேவையாயின் அரசாங்கம் அறிவிக்கும் என்கிறார் பந்துல

0 696

பாட­சாலை மாண­வர்கள் அனை­வரும் சுவாசக்­க­வசம் (மாஸ்க்) அணிய வேண்­டு­மென சுகா­தார அமைச்சோ, கல்­வி­ய­மைச்சோ அறி­வு­றுத்­த­வில்லை.

தேவை­யாயின் அர­சாங்­கமே உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும். ஆகவே, மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­களை இடை­நி­றுத்தம் செய்ய வேண்­டிய தேவை தற்­போது கிடை­யாது. பெற்றோர் அச்சம் கொள்ள வேண்­டா­மென தகவல் மற்றும் தொடர்­பாடல் உயர்­கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்­றினை ஒரு தரப்­பினர் தங்­களின் சுய­தே­வை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்திக் கொள்ள முனை­கின்­றார்கள். மூக்குப் பகு­தியை மறைக்கும் வகை­யி­லான மாஸ்க் அணி­யு­றை­க­ளுக்­கான தட்­டுப்­பாடு தற்­போது ஏற­பட்­டுள்­ளது. அர­சாங்கம் இதனை இல­வ­ச­மாக வழங்க வேண்­டு­மென எதிர்த்­த­ரப்­பினர் குறிப்­பி­டு­கின்­றார்கள். மக்­க­ளுக்கு மாஸ்க் முக­மூ­டி­யினை இல­வ­ச­மாக வழங்­கு­வது ஒன்றும் அர­சாங்­கத்­திற்கு இய­லாத காரி­ய­மல்ல. மக்கள் அனை­வரும் இதனை பாவிக்க வேண்­டு­மென்ற தேவை தற்­போது கிடை­யாது.

பாட­சா­லை­களில் இந்நோய் தொற்று அதி­க­மாக பரவும் என்று வெளி­யான போலி­யான செய்­தியை கேட்டு பெற்றோர் பீதி­ய­டைந்­துள்­ளார்கள். பெற்­றோரின் நிலை­மை­யினை எம்மால் புரிந்­து­கொள்ள முடியும். ஆனால் உண்மைத் தன்­மை­யி­னையும் அனை­வரும் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்­றுநோய் தாக்­கத்­திற்கு இலங்கை பிர­ஜைகள் எவரும் உள்­ளா­க­வில்லை. ஒரு சீன நாட்டுப் பெண்­மணி மாத்­தி­ரமே வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகி முழு­மை­யான சிகிச்சை பெற்று பாது­காப்­பான முறையில் வைத்­தி­ய­சா­லையில் உள்ளார். அத்­துடன் சுகா­தார அமைச்சு உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறி­வு­றுத்­த­லுக்­க­மைய அனைத்து செயற்­றிட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது. விமான நிலையம், துறை­முகம் ஆகி­ய­வற்றில் தீவி­ர­மான பாது­காப்பு மற்றும் பரி­சோ­தனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பாட­சாலை மாண­வர்கள் அனை­வரும் மூக்குப் பகு­தியை மறைக்கும் விதத்தில் மாஸ்க் அணிய வேண்­டு­மென்று சுகா­தார அமைச்சோ, கல்வி அமைச்சோ குறிப்­பி­ட­வில்லை. மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளையும், தற்­போது இடம்­பெறும் பாட­சாலை விளை­யாட்டு போட்­டி­க­ளையோ இடை நிறுத்த வேண்­டிய தேவை கிடை­யாது. பொது­மக்கள் அனை­வரும் மாஸ்க் அணிய வேண்­டு­மென சுகா­தார அமைச்சு குறிப்­பிட்டால் அதனை அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்­ப­துடன் மாஸ்க் இல­வ­ச­மாக வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்போம்.

கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் சித்ரானந்த

கொரோனா வைரஸ் தொற்று தொடர்­பிலும், பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் அனைத்து பாட­சா­லை­க­ளுக்கும் சுற்­ற­றிக்கை அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. வைரஸ் தொற்­றி­லி­ருந்து பாது­காத்துக் கொள்ள வேண்­டிய பொது விட­யங்­களை முறை­யாக பின்­பற்­று­வது அவ­சி­ய­மாகும்.

பாட­சா­லையில் மாண­வர்கள் குறித்து ஆசி­ரி­யர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். மாண­வர்கள் சுக­யீ­ன­ம­டைந்­தி­ருந்தால் துரி­த­மாக வைத்­தி­ய­சா­லையில் அவர்­களை அனு­ம­திப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆகவே பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம்.

கிரிபத்கொட பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 12ஆம் தர மாணவி ஒருவர் ஆசிரியரினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள அக்கல்வி வலயத்தில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களை எல்லைமீறித் தண்டிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.