உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த னப்[நபருக்கு மீண்டும் விளக்கமறியல்

0 704

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த நபர் ஒருவர் மீண்டும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். குறித்த நபரை மீண்டும் மே 6 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கல்­முனை நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

குறித்த வழக்கு நேற்று கல்­முனை நீதி­மன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்­னி­லையில் விசா­ர­ணைக்­காக எடுத்து கொள்­ளப்­பட்ட போது சந்­தேக நபரை மீண்டும் எதிர்­வரும் மே 6 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

விசா­ர­ணையின் போது மேல­திக அறிக்­கைகள் பொலி­ஸா­ரினால் நேற்­றைய தினம் தாக்கல் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்தே மீண்டும் சந்­தே­க­நபர் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ளார். மட்­டக்­க­ளப்பு மாவட்டம் காத்­தான்­குடி பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட புற­நகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம் கைதான குறித்த சந்­தேக நபர் அண்­மையில் சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைக்­க­மைய பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இருந்த போதிலும் தற்­போது மீண்டும் குறித்த சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டு பலத்த பாது­காப்­புடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.-Vidivelli

  • பாறுக் ஷிஹான்

Leave A Reply

Your email address will not be published.