21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு அமைய இந்த விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். கடந்த சனிக்கிழமையன்று இவ்விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 250 இற்கும் அதிகமானோர் பலியாகவும் பாரிய சொத்து சேதம் ஏற்படவும் உதவி ஒத்தாசை புரியும் வகையில் செயற்பட்டுள்ளதாக கூறி மேற்படி விவகாரத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளனர். அவர்களுக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 250, 296, 298, 326,327,328 , 329 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ் இருவரும் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே அந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் நிலையில், ஐ.தே.க. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்றுள்ள சி.ஐ.டி.யின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழு இந்த வாக்குமூலத்தை முன்னாள் பிரதமரிடம் பதிவு செய்துள்ளதாகவும் இதன்போது விசாரணைகளை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும் அங்கு சென்றதாகவும் அறிய டம் பதிவு செய்துள்ளதாகவும் இதன்போது விசாரணைகளை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும் அங்கு சென்றதாகவும் அறிய முடிகின்றது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்