கொரோனா வைரஸ் பரவல்: நாட்டில் பொது மக்கள் அச்சமடைய வேண்டாம்

சகலரும் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை

0 848

சீனா­வி­லி­ருந்து உலகின் பல்­வேறு நாடு­க­ளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அச்­ச­ம­டையத் தேவை­யில்லை எனவும் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­வரும் எந்­த­வொரு தக­வ­லையும் நம்ப வேண்டாம் எனவும் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க குறிப்­பிட்டார். குறித்த வைரஸ் தொற்­றுக்கு இலக்­கா­ன­தாக இலங்­கையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சீனப் பெண் தற்­போது தேறி வரு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பொது மக்­களை முகக்­க­வசம் அணி­யு­மாறு தாம் இது­வரை அறி­வு­றுத்­த­வில்லை எனக் குறிப்­பிட்ட அவர், தொற்று நோயா­ளர்­க­ளையும் அவர்­க­ளோடு தொடர்­பு­படும் வைத்­தி­ய­சாலை அதி­கா­ரி­க­ளை­யுமே முகக்­க­வசம் அணி­யு­மாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.
உல­க­ளா­விய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸ் இலங்­கையில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்கம் குறித்து கேட்­ட­போதே அவர் ‘விடி­வெள்­ளி‘க்கு இவ்­வாறு தெரி­வித்தார்.

குரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் ஏரா­ள­மான வதந்­திகள் பரப்­பப்­ப­டு­கின்­றன. அவற்றை மக்கள் நம்பி அச்­ச­ம­டை­யவோ பதற்­ற­ம­டை­யவோ தேவை­யில்லை. சுகா­தார அமைச்­சினால் வெளி­யி­டப்­படும் உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்கள் நாட்­டி­லுள்ள பிர­தான ஊட­கங்­க­ளுக்கு வழங்­கப்­படும். அந்த வழி­காட்­டல்­களை மாத்­திரம் மக்கள் பின்­பற்­றினால் போது­மா­னது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கம் அறிக்கை

இதே­வேளை நாட்­டி­லுள்ள பல்­வேறு வைத்­தி­ய­சா­லை­களில் கொரோனா வைரஸ் தாக்­கத்­துக்­குள்­ளா­கிய நோயா­ளர்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்கள் என பரப்­பப்­படும் செய்­தியில் எவ்­வித உண்­மை­யு­மில்லை எனவும் இது பொய் பிர­சாரம் எனவும் அர­சாங்கம் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்­ளது.

கொழும்பு உலக வர்த்­தக மத்­திய நிலை­யத்தில் நப­ரொ­ருவர் சுக­வீ­ன­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­காக கொண்டு செல்­லப்­பட்­ட­போது புகைப்­ப­ட­மெ­டுத்து சிலர் ஊட­கங்­களில் செய்­தி­யாக பிர­சு­ரித்­தி­ருப்­பதும் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றி­யி­ருப்­பதும் பொய்­யான, தவ­றான பிர­சா­ர­மாகும். அந்தச் செய்­தியில் குறிப்­பிட்ட நபர் கொரோனா வைரஸ் தாக்­கத்­துக்­குட்­பட்­டவர் என தவ­றாக பிர­சாரம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான கட்­டுக்­க­தைகள் மக்கள் மத்­தியில் தேவை­யற்ற பீதியை உரு­வாக்கும் வகையில் பரப்­பப்­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அரசின் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது எனவும் குறிப்­பிட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய பொய் பிர­சா­ரங்­க­ளுக்கு ஏமாற்­ற­ம­டைய வேண்டாம் என அர­சாங்கம் பொது மக்­களைக் கேட்­டுக்­கொள்­கின்­றது. வைரஸ் தாக்­கத்­துக்­குட்­பட்ட எவ­ரா­வது ஒருவர், எந்தப் பிர­தே­சத்­திலும் இனங்­கா­ணப்­பட்டால் அது தொடர்­பான விப­ரங்கள் பொது மக்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் எனவும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சீன பெண் தேறி வரு­கிறார்

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான முத­லா­வது நப­ராக சீன சுற்­றுலா பயணி ஒருவர் இலங்­கையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் பணிகள் அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன. அதன்­படி, குறித்த பெண்ணின் உடல் நிலையில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ள­தாக அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் அசித்த அத்­த­நா­யக்க கூறினார். குறித்த சீன பெண் அடுத்து வரும் இரு நாட்­க­ளுக்குள் பூரண குண­ம­டை­வ­தற்­கான அறி­கு­றிகள் உள்­ள­தாக அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் வைத்­தியர் ஒருவர் கூறினார். எவ்­வா­றா­யினும் குறித்த பெண்­ணி­ட­மி­ருந்து வேறு எவ­ருக்­கேனும் அந்த வைரஸ் தொற்­றி­யுள்­ளதா என்­பது குறித்த ஆய்­வுகள் தொடர்ந்து இடம்­பெ­று­வ­தாக சுகா­தார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு குறிப்­பிட்­டுள்­ளது.

இத­னி­டையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்­பி­லான சந்­தே­கத்தின் பேரில், நேற்று முன் தினம் மாலை வரை ஐ.டி.எச். காய்ச்சல் வைத்­தி­ய­சாலை என அறி­யப்­படும் அங்­கொட தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் மட்டும் 23 பேர் வரை அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் 11 பேர் சிகிச்­சை­களை முடித்­துக்­கொண்டு வீடு திரும்­பி­யுள்­ள­தா­கவும் தற்­போது 12 பேருக்கு அங்கு சிறப்பு சிகிச்­சைகள் வழங்­கப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளுக்கு கொரோனா தொற்று உள்­ளதா என்­பதை கண்­ட­றிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட ஆய்­வாளர் வைத்­தியர் சுதத் சம­ர­வீர கூறினார். அவ்­வாறு சிகிச்சை பெறும் 12 பேரில் 7 பேர் சீனர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலங்­கையில் பரவும் வாய்ப்பு குறைவு

எவ்­வா­றா­யினும் கொரோனா வைரஸ் இலங்­கைக்குள் பர­வு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் மிகக் குறை­வாக உள்­ள­தாக சார்ஸ் எனும் சுவாச ஆட்­கொல்லி வைரஸ் தொற்­றினை கண்­டு­பி­டித்த இலங்­கையின் பேரா­சி­ரியர் மலிக் பீரிஸ் தெரி­வித்­துள்­ளமை று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறினார். அவ்வாறு சிகிச்சை பெறும் 12 பேரில் 7 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் பரவும் வாய்ப்பு குறைவு எவ்­வா­றா­யினும் கொரோனா வைரஸ் இலங்­கைக்குள் பர­வு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் மிகக் குறை­வாக உள்­ள­தாக சார்ஸ் எனும் சுவாச ஆட்­கொல்லி வைரஸ் தொற்­றினை கண்­டு­பி­டித்த இலங்­கையின் பேரா­சி­ரியர் மலிக் பீரிஸ் தெரி­வித்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல் எம்.எப்.எம். பஸீர்

Leave A Reply

Your email address will not be published.