இனமுறுகளை ஏற்படுத்த பொதுபலசேனா முயல்கிறது

உலமா சபையின் செயலாளர்

0 1,487

‘பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர், நளீ­மியா கலா­பீடம் அடிப்­படை வாதி­களை உரு­வாக்­கு­கி­றது. அதனை மூடி­விட வேண்டும்’ என்­றெல்லாம் ஊடக மாநா­டு­களில் கருத்து வெளி­யி­டு­வது கண்­டிக்­கத்­தக்­கது.

இவ்­வா­றான கருத்­துகள் மூலம் பெரும்­பான்மை சமூ­கத்தை முஸ்­லிம்கள் மீது குரோதம் கொள்ளச் செய்து மீண்டும் இன­மு­று­கல்­களைத் தோற்­று­விக்­கிறார்’ என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் தெரி­வித்தார்.

அண்­மையில் ஞான­சா­ர­தேரர் நளீ­மியா கலா­பீடம் தொடர்பில் வெளி­யிட்ட பொய்­யான கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ஞான­சா­ர­தேரர் முஸ்லிம் சமூ­கத்தின் மீதான சுய­வெ­றுப்பின் கார­ண­மா­கவே இவ்­வாறு நளீ­மியா பட்­ட­தா­ரி­களை தவ­றாகக் கூறி­வ­ரு­கிறார். ஞான­சா­ர­தேரர் போன்ற இன­வாத கருத்­துக்­களைக் கொண்ட சிலர் நளீ­மியா கலா­பீ­டத்தை இன­வாதப் பார்­வையில் நோக்­கி­னாலும் பெரும்­பா­லான பெரும்­பான்மைச் சமூ­கத்­தினர் நளீ­மியா கலா­பீடம் தொடர்பில் நல்­லெண்­ணத்­தையே கொண்­டுள்­ளார்கள்.

நளீ­மி­யாவில் படித்து பட்டம் பெற்­ற­வர்கள் இன்று இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல சர்­வ­தே­சத்­திலும் உயர் பத­வி­களில் இருக்­கி­றார்கள். தூது­வர்­க­ளாக, பொறி­யி­ய­லா­ளர்­க­ளாக, டாக்­டர்­க­ளாக, சட்­டத்­த­ர­ணி­க­ளாக பணி­யாற்­று­கி­றார்கள்.

அரச நிர்­வா­கத்தில் உயர் பத­வி­களில் இருக்­கி­றார்கள். அவர்கள் தகு­தியின் அடிப்­ப­டையில் போட்டிப் பரீட்­சை­களில் உயர்­த­ரத்தில் சித்­தி­ய­டைந்தே இந்தப் பத­வி­களைப் பெற்றுக் கொண்­டுள்­ளார்கள்.

இலங்கை அரச உயர்­ப­த­வி­களில் இருக்கும் நளீ­மி­கள் ஒரு இனத்­துக்கோ, ஒரு சம­யத்­துக்கோ சேவை­யாற்­ற­வில்லை. அனைத்து சமூ­கங்­க­ளுக்கும் அனைத்து இனங்­க­ளுக்கும் சேவை­யாற்­று­கி­றார்கள். இவர்­களை துவேச மனப்­பான்­மை­யுடன் நோக்­கு­வதும், கருத்­துகள் வெளி­யி­டு­வதும் தவ­றாகும்.

மார்க்க கல்­வி­யையும், அரசின் பல்­க­லைக்­க­ழக கல்­வி­யையும் உயர் பண்­பா­டு­க­ளையும் ஆன்­மீ­கத்­தையும் உள்­ள­டக்­கிய ஜாமிஆ நளீ­மி­யாவின் கல்வித் திட்டம் இந்­நாட்­டிற்கு தேவை­யான நற்­பி­ர­ஜை­க­ளையே உரு­வாக்­கு­வ­தே­யன்றி இன­வா­தி­க­ளை­யல்ல. அடிப்­ப­டை­வா­தி­க­ளை­யல்ல என்­பதை இன­வா­திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

நளீ­மியா பட்­ட­தா­ரிகள் நேர்­மை­யா­கவும் ஊழல்­க­ளற்­ற­வர்­க­ளா­க­வுமே செயற்­பட்டு வரு­கி­றார்கள். இவர்கள் மீது தவ­றான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு அவர்­களை கைது செய்ய வேண்டும். நளீ­மி­யாவை மூட வேண்டும் எனக் கோஷ­மி­டு­வது எவ்­வ­கை­யிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஞானசார தேரர் நளீமியா கலாபீட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு நளீமியாவின் பரந்துபட்ட சேவையை அறிந்து கொள்ள வேண்டும்.

நளீமியா பீடத்தைப் பற்றி பெரும்பான்மை மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் விதைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.