மாளிகாவத்தை மையவாடி தீர்ப்பு மார்ச் 16 இல்

0 1,305

மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான காணியில் ஒரு பகு­தியை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து கட்­டி­ட­மொன்­றினை நிர்­மா­ணித்­த­மைக்கு எதி­ராக பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த நிறு­வன உரி­மை­யா­ள­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கின் தீர்ப்பு எதிர்­வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

கொழும்பு மாவட்ட நீதி­மன்றின் வழக்கு இல. 00193/13 இன் மேன்­மு­றை­யீட்டு தீர்ப்­பினை வழங்­கு­வ­தற்­காக மாவட்ட நீதி­மன்றின் பதி­வாளர் முறை­யீட்­டா­ளர்­க­ளுக்கு அழைப்­பாணை அனுப்பி வைத்­துள்­ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மத உரி­மை­க­ளுக்­கான அமைப்பு முஸ்லிம் மைய­வாடி காணியை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து மாடிக் கட்­டி­ட­மொன்­றினை நிர்­மா­ணித்து வந்­த­வ­ருக்கு எதி­ராக 2012 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்­தது. இவ்­வ­மைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் மற்றும் அப்துல் அஸீஸ் செய்யத் நிஹார் உட்­பட்டோர் குறிப்­பிட்ட தினத்தில் நீதி­மன்றில் ஆஜ­ரா­கு­மாறு அழைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

குறிப்­பிட்ட வழக்கில் மேன்­மு­றை­யீட்டு தீர்ப்­பினை அறி­விப்­ப­தற்­கா­கவே அவர்கள் அழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

முஸ்லிம் மத உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் இது தொடர்பில் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்;

‘குறிப்­பிட்ட காணியை அள­வீடு செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு நீதி­மன்றம் நில அள­வை­யாளர் ஒரு­வரை நிய­மித்­தி­ருந்­தது. அவ­ரது அறிக்­கை­யின்­படி முஸ்லிம் மையவாடி காணியில் 11 பேர்ச்சஸ் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்டகால விசாரணையின் பின்பு தீர்ப்பொன்று கிடைக்கப் போகிறது’ என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.