இலங்கையில் வைரஸ் இனங்காணப்பட்ட சீன பெண் சென்ற இடங்கள் குறித்து சிறப்பு ஆய்வு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 11 வைத்தியசாலைகள் தயார் நிலையில்

0 760

கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான முத­லா­வது நப­ராக சீன சுற்­றுலா பயணி ஒருவர் இலங்­கையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, அவர் சுற்­றுலா சென்ற, தங்­கி­யி­ருந்த இடங்­களில் அவ்­வைரஸ் தாக்கம் தொடர்பில் விஷேட ஆய்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அனில் ஜய­சிங்­கவின் விஷேட ஆலோ­ச­னைக்கு அமைய, சுகா­தார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரி­வி­னரின் உத­வி­யுடன் இந்த ஆய்­வுகள் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­கின்­றன.

அதன்­படி கடந்த 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திக­தி­வரை குறித்த தொற்­றுக்­குள்­ளான சீனப் பெண் தனது குழு­வி­ன­ருடன் சுற்­றுலா சென்ற, தங்­கி­யி­ருந்த கண்டி, நுவ­ரெ­லியா, காலி, சீகி­ரியா போன்ற பகு­தி­களில் கொரோனா வைரஸ் தொடர்பில் விஷேட ஆய்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் நேற்று மாலை வரை குறித்த பகு­தி­களில் சந்­தே­கத்­துக்கு இட­மான வைரஸ் தொற்று தொடர்பில் எந்த கார­ணி­களும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இத­னி­டையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்­பி­லான சந்­தே­கத்தின் பேரில், நேற்று மாலை வரை ஐ.டி.எச். காய்ச்சல் வைத்­தி­ய­சாலை என அறி­யப்­படும் அங்­கொட தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் மட்டும் 20 பேர் வரை அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்க மருத்­துவ அதி­கா­ரிகள் சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த அளுத்கே தெரி­வித்தார். அதில் வெளி­நாட்டு பிர­ஜை­களும் உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய அவர், கொரோனா வைரஸ் குறித்த சந்­தே­கத்தில் தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோரின் எண்­ணிக்கை இவ்­வாறு உயர்­வ­டைந்­துள்­ளமை பாரிய சிக்­கல்­களை தோற்­று­வித்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

இது குறித்து சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அனில் ஜா­சிங்­க­வுக்கு தமது சங்கம் ஊடாக விஷேட கோரிக்­கைகள் அனுப்­பட்­டுள்­ள­தா­கவும், கொழும்­புக்கு அருகில் இத்­த­கைய சந்­தே­கத்­துக்கு இட­மான நபர்­களை தனித்­த­னி­யாக தடுத்து வைத்து சோத­னை­களைச் செய்ய முடி­யு­மான வண்ணம் சிறப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்தித் தரு­மாறு கோரி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

தொடர்ச்­சி­யாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சந்­தே­கத்தில் அங்­கொட தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­க­ளுக்­காக பொது மக்கள் வரு­வது, அங்கு பாரிய இட நெருக்­க­டி­யையும் சமூக அவ­ல­மொன்­றி­னையும் தோற்­று­விக்­கலாம் என்­பதால் இந்த கோரிக்­கை­களை சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்­திடம் முன்­வைத்­துள்­ள­தாக அவர் கூறினார்.

இந் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் நோயா­ளர்­க­ளுக்கு அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சாலை தவிர்ந்த நாட்­டி­லுள்ள மேலும் 11 வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெறு­வ­தற்­கான வச­திகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அனில் ஜா­சிங்க கூறினார்.

வட கொழும்பு போதனா வைத்­தி­ய­சாலை ( ராகம வைத்­தி­ய­சாலை), கம்­பஹா ஆரம்ப வைத்­தி­ய­சாலை, கண்டி தேசிய வைத்­தி­ய­சாலை, நீர்­கொ­ழும்பு, கராப்­பிட்­டிய, அநு­ரா­த­புரம், யாழ்ப்­பாணம், குரு­நாகல், மட்­டக்­க­ளப்பு போதானா வைத்­தி­ய­சா­லைகள், இரத்­தி­ன­புரி மற்றும் பதுளை மாகாண வைத்­தி­ய­சா­லைகள் ஆகி­ய­வற்றில் அனு­ம­திப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் கூறினார்.

சந்­தே­கத்­திற்­கி­ட­மான நோயா­ளர்­களை அனு­ம­தித்து தேவை­யான சிகிச்­சை­களை வழங்­கு­வ­தற்கு குறித்த வைத்­தி­ய­சா­லை­களின் பணிப்­பா­ளர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சோதனை, சிகிச்சை நட­வ­டிக்­கை­க­ளுக்கு தேவை­யான உப­க­ர­ணங்கள் உள்­ளிட்­ட­வற்றை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் சுட்­டிக்­காட்­டினார். இவ்­வாறு 11 வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் இடம்­பெறும் சோத­னை­களில் எவ­ருக்­கேனும் கொரோனா வைரஸ் தொற்று உள்­ளமை உறுதி செய்­யப்­படின் அந்த நபர் மட்டும் அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு மேல­திக சிகிச்­சைகள் வழங்­கப்­படும் எனவும் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் கூறினார்.

இத­னி­டையே, கொழும்பு மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் நிர்­மாண வேலைத் தளங்­களில் அதிக சீனர்கள் ஈடு­பட்­டு­வரும் நிலையில், அவர்கள் அனை­வ­ரையும் சிறப்பு மருத்­துவ கண்­கா­ணிப்பின் கீழ் வைத்­தி­ருக்கும் வண்ணம் அவ்­வந்த பிர­தேச சுகா­தார சேவைகள் அத்­தி­யட்­ச­கர்­க­ளினால் திட்­டங்கள் வகுப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதற்­கான ஆலோ­ச­னைகள் சுகா­தார அமைச்­ச­ரிடம் இருந்தும், அவ­சர நிலை­மை­களை கையாள ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட சிறப்பு குழு­வி­ட­மி­ருந்தும் தேவை­யான ஆலோ­ச­னைகள் உரிய தரப்­பி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, இலங்­கையில் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள கொரோனா வைரஸ் தொற்று உள்ள சீனப் பெண்­ணுக்கு அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் பிரத்­தி­யேக அறையில் தீவிர சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அவ­ரது நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இல்லை எனவும், அவ­ரது உயி­ருக்கு எந்த அச்­சு­றுத்­தலும் இல்லை எனவும் அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் அசித்த அத்­த­நா­யக்க கூறினார். அவரை 24 மணி நேர கண்­கா­ணிப்பில் வைத்து சிகிச்­சை­ய­ளிப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே, கொரோனா வைரஸ் தொடர்பில் சிகிச்சை பெற்று வரும் சீன சுற்­றுலா பிர­யா­ணி­யான 43 வயது பெண், தங்­கி­யி­ருந்­த­தாக கூறப்­படும் காலி பகு­தியின் ஹோட்­டல்கள் உள்­ளிட்ட ஏனைய பிர­தேச இடங்கள் தொடர்­பிலும் சிறப்பு அவ­தானம் செலுத்­தப்­பட்டு ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தென் மாகாண சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் சந்­திம சிறி­துங்க கூறினார்.
தற்­போதும் சிகிச்சை பெறும் குறித்த பெண் காலி – கோட்டை, அஹுங்­கல்லை பகு­தி­களில் ஹோட்­டல்­களில் தங்­கி­யி­ருந்­தமை தெரி­ய­வந்­துள்ள நிலை­யி­லேயே அது குறித்து அவ­தானம் எலுத்­தி­யுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் அதி­க­மான சீன பிர­ஜைகள் வந்து செல்லும் காலியில் உள்ள இறப்பர் நூத­ன­சா­லையும் மறு அறி­வித்தல் வரை மூடப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் அடை­யாளம் காணப்­பட்ட முத­லா­வது கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான பெண் கடந்த 19 ஆம் திக­தியே இலங்­கைக்கு சீன குழு­வி­ன­ருடன் சுற்­றுலா வந்­துள்ளார். அன்­றைய தினம் அவர் கட்­டு­நா­யக்க பகு­தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்­கி­யி­ருந்­துள்ளார். அதன் பின்னர் மறு நாள், 20 ஆம் திகதி நீர் கொழும்­பி­லி­ருந்து சீகி­ரிய நோக்கி சென்­றுள்­ள­துடன், சீகி­ரிய பகு­தியில் சுற்­றுலா ஹோட்டல் ஒன்றில் தங்­கி­யி­ருந்­துள்ளார். பின்னர் 21 ஆம் திகதி சீகி­ரி­யாவில் இருந்து கண்­டிக்கு சென்­றுள்­ள­துடன், அங்கும் மூன்று ஹோட்­டல்­களில் அன்­றைய தினமும் மறு நாளும் தங்­கி­யி­ருந்து உண­வு­களைப் பெற்­றுள்ளார். 22 ஆம் திகதி கண்­டி­யி­லி­ருந்து நுவ­ரெ­லி­யா­வுக்கு சென்­றுள்­ள­துடன் நுவ­ரெ­லி­யாவில், சுற்­றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் அன்று தங்­கி­யி­ருந்­துள்ளார். அதன் பின்­னரே 23 ஆம் திகதி நுவ­ரெ­லி­யா­வி­லி­ருந்து தென் மேற்கு கடற் கரை­யோ­ரங்­க­ளுக்கு அவர் சுற்­றுலா சென்­றுள்ளார். அங்கு 23, 24 ஆம் திக­தி­களில் காலி, அஹுங்­கல்லை பகு­தி­களில் 3 ஹோட்­டல்­களில் அவர் தங்­கி­யி­ருந்து உணவு பெற்­றுக்­கொண்­டுள்ளார். இத­னை­ய­டுத்தே 25 ஆம் திகதி அவர் அஹுங்­கல்லை வைத்­தி­ய­சா­லையில் காய்ச்சல் கார­ண­மாக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன் அங்­கி­ருந்தே அங்­கொடை தொற்று நோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந் நிலை­யி­லேயே குறித்த பெண் சென்ற, தங்­கி­யி­ருந்த, உணவு பெற்­றுக்­கொண்ட பகு­திகள், ஹோட்­டல்கள் தொடர்பில் தொற்று நோய் தடுப்புப் பிரி­வி­னரின் விஷேட ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் உயர் அதி­காரி ஒருவர் கூறினார்.

இத­னி­டையே கொரோனா வைரஸ் தொற்­றுக்கு எதி­ராக அல்­லது அதனை பரவ விடாமல் செய்ய உழைக்கும் வைத்­தி­யர்கள் உள்­ளிட்ட சுகா­தாரப் பிரி­வி­ன­ருக்கு விஷேட ஆலோ­ச­னைகள் அடங்­கிய சுற்­று­நி­ருபம் ஒன்று நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. கொரோனா வைரஸ் தொற்­றி­லி­ருந்து அவர்­களை பாது­காத்­துக்­கொள்­வது தொடர்பில் குறித்த சுற்­று­நி­ருபம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதன் பிர­காரம், விமான நிலை­யத்தில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள மருத்­துவக் குழு, சுகா­தார ஊழி­யர்கள் உள்­ளிட்ட அனைத்து வைத்­தி­ய­சாலை நிர்­வாகக் குழு­வினர் முகக்­க­வசம் அணி­வ­துடன், கையு­றைகள் மற்றும் மருத்­து­வர்கள் பயன்­ப­டுத்தும் தலையை மூடும் வகை­யி­லான கவ­சத்தை அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம், வைத்­தியர் அனில் ஜா­சிங்க தெரி­வித்தார்.

இத­னைத்­த­விர, வைரஸ் பர­வு­வதைக் குறைப்­ப­தற்­கான ஆலோ­ச­னைகள் அடங்­கிய 4 பக்கங்களைக் கொண்ட விசேட ஆலோசனை சுகாதார அமைச்சினால்வெளியிடப்பட்டுள்ளது, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் தமது தகவல்கள் வெளிப்படுத்தும் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்புதல் அவசியமாகும். இதனூடாக, சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலம், அவர்கள் பயணிக்கவுள்ள பகுதிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் தாய்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்வான், தென் கொரியா, பிரான்ஸ், ஜப்பான், வியட்நாம், நேபாளம், கனடா, கம்போடியா, இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கண்டறியப்ப்ட்டுள்ள நிலையில், குறித்த நாடுகளில் அந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 47 என கணிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.