சீனாவில் கொரோனா வைரஸ் பரவல்: உயிரிழப்புகள் 106 ஆக உயர்வு

4500 பேர் பாதிப்பு

0 746

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 106 ஆக உயர்ந்துள்ள நிலையில் 1,771 புதிய நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்­ணிக்கை 4515 ஆக அதி­க­ரித்­துள்­ளது. குறித்த தொற்று பரவும் வீதம் 50 வீதத்­தினால் அதி­க­ரித்­துள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

தொற்று ஆரம்­பித்த பிர­தே­ச­மான ஹூபேயில் மேலும் 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மேலும் 1,291 நோயாளர்கள் புதி­தாகக் கண்­டறியப்பட்­டுள்­ள­தா­கவும் ஹூபேயின் சுகா­தார ஆணைக்­குழு தெரி­வித்­துள்ள அதே­வேளை, அங்கு மாத்­திரம் தொற்­றுக்­குள்ளா னோரின் எண்­ணிக்கை 2,714 ஆக அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது. ஹூபே மாகா­ணத்தின் மொத்த மக்கள் தொகை 1.1 கோடி ஆகும்.

ஆசி­யா­விலும், ஐரோப்பா மற்றும் வட அமெ­ரிக்­கா­விலும், சமீ­பத்தில் வூஹான் நக­ருக்குச் சென்­ற­வர்­க­ளுக்கும் இந்நோய்த் தொற்று ஏற்­பட்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த வைரஸ் பர­வலின் மையப்­புள்­ளி­யாக கரு­தப்­படும் ஹூபே மாகா­ணத்தில் உள்ள வூஹான் நகரம் முற்­றாக முடக்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஊருக்கு செல்­வது, அந்த ஊரி­லி­ருந்து வெளி­யூ­ருக்கு பய­ணிப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

கொரோனா வைரஸால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் முதி­ய­வர்கள் அல்­லது முன்பே மூச்சு திணறல் பிரச்­சினை உள்­ள­வர்கள் என்றும் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். சீனா­வுக்கு அடுத்­த­தாக அதி­க­பட்­ச­மாக தாய்­லாந்­தில்தான் 8 பேர் இந்த வைரஸால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, சிங்­கப்பூர் மற்றும் தாய்வான் உள்­ளிட்ட நாடு­களில் 5 பேரும், மலே­சியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்­ளிட்ட நாடு­களில் 4 பேரும், பிரான்சில் 3 பேரும், வியாட்­நாமில் இரு­வரும், நேபாளம், கனடா, கம்­போ­டியா, இலங்கை, ஜேர்­மனி ஆகிய நாடு­களில் தலா ஒரு­வரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ் வைரஸின் தாக்கம் பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது அமெரிக்கா மற்றும் லண்டன் பங்குச் சந்தைகள் நேற்றைய தினம் வீழ்ச்சிய டைந்துள்ளன.-Vidivelli

  • எம்.ஐ.அப்துல் நஸார்

Leave A Reply

Your email address will not be published.