வேக்கந்தை வீடமைப்புத்திட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பைஸர்

0 715

கொழும்பு, கொம்­ப­னித்­தெரு, வேக்­கந்தை தொடர்­மாடி வீட­மைப்புத் திட்­டத்தில் வசிக்கும் மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளையும் குறை­க­ளையும் கேட்­ட­றி­வ­தற்கு, முன்னாள் அமைச்­சரும், ஸ்ரீல.சு.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா, தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபைத் தலைவர் ரேணுக பெரேரா உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளுடன் சென்­றி­ருந்தார்.

இதன்­போது, தங்­க­ளுக்கு மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக மாளி­கா­வத்தை அல்­லது தெமட்­ட­கொ­டையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள தொடர்­மாடி வீடு­க­ளி­லேயே இடங்கள் ஒதுக்கித் தரப்­படல் வேண்­டு­மென்றும், குறித்த வீடுகள், 650 சதுர அடி பரப்­ப­ளவு கொண்­ட­வை­க­ளாக இருக்­க­வேண்டும் என்றும், பைஸர் முஸ்­த­பா­விடம் மக்கள் கோரிக்கை விடுத்­தனர்.

இதே­வேளை, ஒரு வீட்­டுக்கு ஒரு வீடு என்ற அடி ப்படையில் இல்­லா­த­வாறு வழங்­கப்­பட வேண்டும்.

தற்­பொ­ழுது வேக்­கந்­தை­யி­லுள்ள தொடர் மாடி­களில் ஒரு வீட்டில் மூன்று அல்­லது இரண்டு குடும்­பங்­க­ளா­வது வாழ்ந்து வரு­கின்­றன.

இங்­குள்­ள­வர்­களின் பிள்­ளை­களும் திரு­மணம் முடித்து இங்­கேயே வசிக்­கின்­றனர். எனவே, இவர்­க­ளுக்கும் தனித்­த­னி­யான வீடுகள் கைய­ளிக்­கப்­படல் வேண்டும் என்றும் இதன்­போது மக்கள் வேண்­டிக்­கொண்­டனர்.

குறித்த வீடுகள் உடைந்து மனித வாழ்­விற்குத் தகு­தி­யற்­ற­வை­யென, கட்­டிட ஆராய்ச்சி நிலையம் கடந்த 3 வரு­டத்­திற்கு முன்­பா­கவே அறி­வித்­துள்­ளது. இதனால், இக்கட்­டிடம் இடிந்து வீழ்ந்தால் ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்கள் பலி­யாக நேரிடும். ஆகவே, இயற்கை அனர்த்­த­மொன்று ஏற்­ப­டு­வ­தற்கு முன்னர், அர­சாங்கம் தங்­களைப் பாது­காக்க முன்­வர வேண்டும் என்றும், பைஸர் முஸ்­தபா எம்.பி. யிடம் கோரிக்கை விடுத்­தனர்.

இவற்றைக் கவ­னத்தில் எடுத்­துக்­கொண்ட முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா, இது­வி­டயம் சம்­பந்­த­மாக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் கலந்­தா­லோ­சிப்­ப­தா­கவும், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை போன்­ற­வற்றின் அமைச்­ச­ரவை

அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவே பத­வி­வ­கிப்­பதால், அவர் இதற்கு சிறந்த தீர்க்­க­மான முடிவை எடுப்பார் என்றும் அம்­மக்­க­ளிடம் நம்­பிக்கை தெரி­வித்தார்.

வேக்­கந்தை தொடர்­மாடி வீட­மைப்புத் திட்­டத்தில் உள்ள தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சொந்­த­மான வீடுகள் 50 வரு­டங்­க­ளுக்கும் மேலாகப் பழை­மை­வாய்ந்­த­மையால், இந்த தொடர்­மா­டிகள் உடைந்து விழும் அபா­யத்தில் உள்­ளது.

இங்கு 5 மாடிகள் வரை நிர்­மா­ணிக்­கப்­பட்டு மொத்தம் 114 வீடுகள் உள்­ளன.
இத்­திட்டம், 1974 ஆம் ஆண்­ட­ளவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. கீழ் தளத்தில் 50 க்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் சட்­ட­வி­ரோ­த­மாகக் குடி­யேறி பல­கை­யி­லான தற்­கா­லிக வீடு­களை நிர்­மா­ணித்து வாழ்ந்து வரு­கின்­றனர்.

கடந்த அர­சாங்கம் சட்­ட­வி­ரோ­த­மாக வாழ்ந்த 50 குடும்­பங்­க­ளுக்கு மட்டும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் மீள்­கு­டி­யேற்றத் தொடர்­மாடித் திட்­ட­மான மட்­டக்­குளி, ஹேன­முல்­லையில் வீடு­களை வழங்­கி­யுள்­ளன.

ஏனை­ய­வர்­களில் எவரும் இது­வரை மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­ப­ட­வில்லை.
வேக்­கந்தை தொடர்­மா­டிக்­கான காணியை, நகர அபி­வ­ருத்தி அதி­கார சபை தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்­ள­வுள்ள நிலையில், இங்­குள்ள 114 வீடு­க­ளையும் அகற்றி, மீள் தொடர்­மா­டி­களை நிர்­மா­ணிக்­கவும் நட­வ­டிக்கை எடுத்துள்ளது.

இது தவிர, இங்கு வாழும் 114 வீடுகளில் 650 குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரு வீட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாகப் பெருகியும் உள்ளன.
இந்நிலையிலேயே, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, இது தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்திற்கு சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • மினு­வாங்­கொடை நிருபர்

Leave A Reply

Your email address will not be published.