பிணைமுறி மோசடிகளை மூடிமறைக்கும் ஜனாதிபதி, பிரதமரும் மோசடிக்காரர்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும

0 645

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரங்­களை மறந்து ரஞ்சன் ராம­நா­யக்­கவின் தொலை­பேசி உரை­யாடல் குரல் பதி­வு­களைக் கொண்டு ஆட்சி நடத்தும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவுமே இன்று மோச­டிக்­கா­ரர்­க­ளா­கி­யுள்­ளனர் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் மான்­னப்­பெ­ரும தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது :

மத்­திய வங்கி பிணை­முறி மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு தண்­டனை பெற்றுக் கொடுப்­ப­தாகக் கூறியே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சியை பொறுப்­பேற்­றது. ஆனால் தற்­போது அவர்­களே அதி­லி­ருந்து பின்­வாங்­கு­கின்­றனர். இதன் மூலம் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மோச­டிக்­கா­ரர்­க­ளா­கி­யுள்­ளனர். தற்­போது வங்­கி­களில் பண மோச­டிகள் இடம்­பெ­று­வ­தில்லை. மாறாக மரக்­கறி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருள் விற்­பனை மூலம் பணம் கொள்­ளை­யி­டப்­ப­டு­கி­றது.

ரஞ்சன் ராம­நா­யக்­கவின் தொலை­பேசி உரை­யாடல் குரல் பதி­வு­களைக் கொண்டே தற்­போ­தைய அர­சாங்கம் ஆட்­சியை முன்­னெ­டுத்துச் செல்­கி­றது. அவற்­றி­யி­லேயே அனை­வரும் கவனம் செலுத்­து­கின்­றனர். ஆனால் மஹிந்­த­வுக்கும் கோத்­தா­ப­ய­வுக்கும் இடை­யி­லுள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் யாரும் கேள்­வி­யெ­ழுப்­பு­வ­தில்லை. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் அக்­கி­ரா­சன உரை­யன்று பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யப்­படி சபா­நா­ய­கரும் பிர­த­மரும் இணைந்தே அவரை வர­வேற்­றி­ருக்க வேண்டும். அதுவே வழ­மை­யாகப் பின்­பற்­றப்­படும் முறை­மை­யாகும். ஆனால் இம்­முறை அவ்­வாறு பிர­த­மரால் ஜனா­தி­பதி வர­வேற்­கப்­ப­ட­வில்லை. இது­கு­றித்து யாரும் கேள்­வி­யெ­ழுப்­பவும் இல்லை.

தலை­மைத்­துவம் தொடர்பில் கட்­சிக்குள் எவ்­வித முரண்­பா­டு­களும் கிடை­யாது. தற்­போ­தைய எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாச பிர­தமர் வேட்­பாளர் என்ற தீர்­மா­னத்­திற்­க­மைய பொதுத் தேர்­த­லுக்­கான நட­வ­டிக்­கை­களை ஐக்­கிய தேசியக் கட்சி ஒரு­மித்து முன்­னெ­டுக்கும். இதில் பிள­வு­க­ளுக்கு இட­மில்லை. ஐக்­கிய தேசியக் கட்சி ஜன­நா­யக ரீதி­யான கட்சி என்­ப­தா­லேயே முரண்­பட்ட கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

புதிய அர­சாங்கம் ஆட்­சிக்­கு­வந்து இரண்டு மாதங்கள் கடந்­துள்­ளன. எமது அர­சாங்­கத்தால் ஆரம்­பிக்­கப்­பட்டு தேர்தல் காலத்தில் இடை­நி­றுத்­தப்­பட்ட வேலைத்­திட்­டங்கள் பல புதிய அர­சாங்­கத்தால் கைவி­டப்­பட்­டுள்­ளன. வீட­மைப்பு திட்­டங்கள், வைத்­தி­ய­சாலை கட்­டட நிர்­மா­ணப்­ப­ணிகள், கம்­பெ­ர­லிய வேலைத்­திட்டம், இல­வச மின்­சா­ரத்தை பெற்றுக் கொடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் என்­பன கைவி­டப்­பட்­டுள்­ளன. இதனால் பெரு­ம­ள­வான மக்­க­ளுக்கு கிடைக்­க­வி­ருந்த பயன்கள் கிடைக்காமல் போயுள்ளன.

எமது அரசாங்கம் ஆட்சியிலிருந்தபோது இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது. பல மில்லியன் நிதி உதவியையும் வழங்கியுள்ளது. ஆனால் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அந்நாட்டுக்கு சென்றிருந்த போதிலும் கடனுதவியே வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் வெளிப்படுகின்றது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.