மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் 550 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0 776

வுஹான் என்ற இடத்தில் அமைந்­துள்ள கட­லு­ணவுச் சந்­தை­யி­லி­ருந்து தோன்­றி­யுள்­ள­தாக நம்­பப்­படும் புதிய வகை கொரோனா வைரஸைக் கட்­டுப்­ப­டுத்த சீனா முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

மத்­திய நக­ரான வுஹான் நகரில் இந்தத் தொற்றின் கார­ண­மாக சீனாவில் குறைந்­தது 17 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் உல­க­ளா­விய ரீதியில் 550 இற்கும் மேற்­பட்டோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் சீனா­வைச் சேர்ந்­த­வர்கள் என்­ப­தோடு அதி­க­மான தொற்­றுக்கள் அண்­மித்த தினங்­களில் பதி­வா­கி­யுள்­ளன.
சந்­திரப் புது­வ­ருடப் பண்­டி­கைக்­காக மில்­லியன் கணக்­கான மக்கள் பய­ணித்து வரும் நிலையில் இவ் வைரஸ் பரவல் தொடர்பில் பெரும் கவலை ஏற்­பட்­டுள்­ளது. சந்­திரப் புது­வ­ருடப் பண்­டிகை வெள்­ளிக்­கி­ழமை (இன்று) ஆரம்­ப­மா­கி­றது.

கொரோனா வைரஸ் என்றால் என்ன?

சாதா­ரண தடிமன் தொடக்கம் மத்­திய கிழக்கு சுவாச நோய் (மேர்ஸ்) மற்றும் கடு­மை­யான சுவாச நோய் (சார்ஸ்) ஈரான நோய்­களை ஏற்­ப­டுத்தும் வைரஸ் குடும்­பத்­தினைச் சேர்ந்­ததே இந்த கொரோனா வைரஸ் என உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இந்த வைரஸ் மனி­தர்­க­ளுக்கும் மிரு­கங்­க­ளுக்­கு­மி­டையே தொற்­றக்­கூ­டி­ய­வை­யாகும். உதா­ர­ண­மாக சார்ஸ் புனுகுப் பூனை­யி­லி­ருந்து மனி­த­னுக்கு தொற்றும் வைர­ஸாகும், அதே­போன்று மேர்ஸ் ஒரு வகை ஒட்­ட­கத்­தி­லி­லி­ருந்து மனி­த­னுக்குத் தொற்­று­வ­தாகும்.

நன்­க­றி­யப்­பட்ட பல்­வேறு கொரோனா வைரஸ்கள் மிரு­கங்­க­ளுக்­கி­டையே பர­வி­ய­போ­திலும் இது வரை மனி­தர்­க­ளுக்குத் தொற்­ற­வில்லை.

புதிய வகை கொரோனா வைரஸ்கள் கடந்த ஜன­வரி மாதம் 7 ஆம் திகதி சீன அதி­கா­ரி­க­ளினால் அடை­யாளம் காணப்­பட்­டன. தற்­போது அவற்­றிற்கு 2019nCoV எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­தோடு இதற்கு முன்னர் மனி­தர்­களில் இது கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

மனி­தர்­க­ளுக்­கி­டையே இத் தொற்று ஏற்­பு­டு­கின்­றது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் இது தொடர்பில் குறு­கிய தக­வல்­களே வெளி­யா­கி­யுள்­ளன.

அதன் அறி­கு­றிகள் எவை?

இந்த வைரஸ் தொற்று ஏற்­ப­டு­மானால் காய்ச்சல், இருமல், குறு­கிய சுவாசம் மற்றும் சுவாசப் பிரச்­சி­னைகள் உள்­ள­டங்­க­லான அறி­கு­றிகள் காணப்­படும் என உலக சுகா­தார நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

சில கடு­மை­யான சந்­தர்ப்­பங்­களில் நியூ­மோ­னியா, பார­தூ­ர­மான சுவாசப் பிரச்­சினை, சிறு­நீ­ரகச் செய­லி­ழப்பு மற்றும் மரணம் கூட ஏற்­படும்.

எந்­த­ளவு உயி­ரா­பத்து மிக்­கது?

சீனாவில் உரு­வாகி 2002 – 2003 காலப் பகு­தியில் உலகம் முழு­வ­திலும் பரவி சுமார் 800 பேரைக் கொன்ற சார்ஸ் போன்ற ஏனைய வகை கொரோனா வைரஸ் போன்று உயி­ரா­பத்தை விளை­விக்கக் கூடி­ய­தல்ல என சில நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பாரிய அளவில் பர­வாத மேர்ஸ் மிகவும் உயி­ரா­பத்தை விளை­விக்கக் கூடிய ஒன்­றாக இருந்­தது. இத் தொற்று ஏற்­பட்­ட­வர்­களுள் மூன்றில் ஒரு பகு­தி­யினர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

எங்கு அதி­க­மாக இத்­தொற்று பதி­வா­கி­யுள்­ளது?

பெரும்­பாலும் சீனாவில் அதி­க­மாக இத்­தொற்று பதி­வா­கி­யுள்­ளது. குறைந்­தது 17 பேர் கொல்­லப்­பட்­டள்­ள­தாக சீன அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இவர்கள் அனை­வரும் ஹுபெயி மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். இந்த மாகா­ணத்தின் தலை­ந­கரே வுஹுன் ஆகும். இப் பகு­தி­யி­லி­ருந்து 571 தொற்­றுக்கள் பதி­வா­கியும் உள்­ளன.

சீனா­விற்கு அப்பால், தாய்­லாந்­தி­லி­ருந்து நான்கு நோயா­ளி­களும் தென் கொரியா, தாய்வான், ஜப்பான் மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து தலா ஒரு நோயா­ளியும் கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் அனை­வரும் ஒன்றில் வுஹான் பிர­தே­சத்தை சேர்­ந்­த­வர்­க­ளா­கவோ அல்­லது அண்­மையில் அங்கு சென்று வந்­த­வர்­க­ளா­கவோ இருக்­கின்­றனர்.

பர­வலைத் தடுக்க என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுகின்­றது?

இந்த புதிய வைர­ஸுக்கு இது வரை தடுப்பு மருந்­துகள் எவையும் கிடை­யாது.
கடந்த வியா­ழக்­கி­ழமை தொடக்கம் சீன அதி­கா­ரிகள் வுஹான் பகு­திக்­கான போக்­கு­வ­ரத்தை தடை செய்­துள்­ளது. விமானப் போக்­கு­வ­ரத்­துக்கள் மற்றும் புகை­யி­ரதப் போக்­கு­வ­ரத்­துக்கள் ஆகி­யன இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன. விசேட கார­ணங்கள் இருந்­தா­லன்றி வெளி­யேற வேண்டாம் எனவும் பிர­தேச மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது என அரச ஊடகம் தெரி­வித்­துள்­ளது.

காலை 10 மணிக்கு (02:00 ஜீ.எம்.ரி) நடை­மு­றைக்கு வரும் இந்த நட­வ­டிக்கை, தொற்­றுநோய் பரவும் வேகத்தை கட்­டுப்­ப­டுத்­து­வது மற்றும் உயிர்­களைப் பாது­காப்­ப­தாகும் என வைரஸ் தொடர்­பான நக­ரத்தின் மத்­திய விஷேட கட்­டளைப் பிரிவு தெரி­வித்­துள்­ள­தாக அர­சாங்க தொலைக்­கா­ட்­சி­யான சி.சி.டி.வி தெரி­வித்­துள்­ளது.

சந்­திர புத்­தாண்டு விடு­மு­றைக்கு முன்­ன­தாக சீன அதி­கா­ரிகள் கண்­கா­ணிப்பு மற்றும் நோய்த் தொற்றுக் கட்­டுப்­பா­டு­களை முடுக்­கி­விட்­டுள்­ளனர், குறித்த புத்­தாண்டு வெள்­ளிக்­கி­ழமை உத்­தி­யோக பூர்­வ­மாக ஆரம்­ப­மா­வ­தோடு நாட்டின் 1.4 பில்­லியன் மக்­களில் பலர் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் பய­ணங்­களை மேற்­கொள்வர்.

ஜப்பான், ஹொங்கொங், தாய்­லாந்து, சிங்­கப்பூர், தென் கொரியா மற்றும் மலே­சியா உள்­ளிட்ட ஆசியா நாடுகள் முழு­வ­திலும் உள்ள விமான நிலைய அதி­கா­ரிகள் வுஹானில் இருந்­து­வரும் பய­ணி­களை தீவி­ர­மாக நோய்ப் பரி­சோ­த­னைக்­குள்­ளாக்கி வரு­கின்­றனர்.

வுஹானில் இருந்து வரும் விமா­னங்­களை ஐரோப்­பாவில் மேம்­ப­டுத்­தப்­பட்ட வகையில் கண்­கா­ணிப்­புக்­குட்­ப­டுத்­த­வுள்­ள­தாக ஐக்­கிய இராச்­சியம் மற்றும் இத்­தாலி அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் அறி­வித்­துள்­ளன. அதே நேரத்தில் ருமே­னி­யாவும் ரஷ்­யாவும் சோதனை நட­வ­டிக்­கை­களைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளன.

அமெ­ரிக்­கா­வி­லுள்ள சில விமான நிலை­யங்­களும் சோத­னை­களை ஆரம்­பித்­துள்­ளன.

எங்­கி­ருந்து ஆரம்­ப­மா­னது ?

வைரஸின் தோற்றம் எங்­கி­ருந்து இடம்­பெற்­றது என்­பதை உறு­திப்­ப­டுத்த சீன சுகா­தார அதி­கா­ரிகள் தொடர்ந்தும் முயற்­சித்து வரு­கின்­றனர். வன­வி­லங்கள் சட்­ட­வி­ரோ­த­மாக வர்த்­தகம் செய்­யப்­படும் வுஹானில் உள்ள ஒரு கடல் உணவுச் சந்­தையில் இருந்து வந்­தது என அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

விலங்குகள் அங்கு காணப்பட்டமை இதற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

நோயாளியிடமிருந்து நோயாளிக்கு சுவாசம் மூலம் பரவியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. நாட்டில் 15 மருத்துவ ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வைரஸினால் சுகாதாரப் பணியாளர்கள் நோய்வாய்ப்படும் நிலை காணப்படுவதால் வைத்தியசாலைகளில் வேகமாகப் பரவும் ஆபத்து காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்தது என்ன ?

புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் உலகளாவிய பொதுச் சுகாதார அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்துவது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.-Vidivelli

  • எம்.ஐ.அப்துல் நஸார்

Leave A Reply

Your email address will not be published.