புலனாய்வு பிரிவின் எச்சரிக்கைகளுக்கு அமையவே அனைத்து மாவட்டங்களுக்கும் முப்படை பாதுகாப்பு

அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

0 824

தேசிய பாது­காப்பு தொடர்பில் அனைத்து தீர்­மா­னங்­க­ளையும் எடுக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு உண்டு. புல­னாய்வுப் பிரி­வி­னூ­டாகக் கிடைக்­கப்­ பெற்ற தக­வல்­க­ளுக்­க­மை­யவே ஜனா­தி­பதி அனைத்து நிர்­வாகப் பிர­தே­சங்­க­ளிலும் முப்­ப­டை­யி­னரை பாது­காப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளா­ரென அமைச்­ச­ரவை பேச்­சாளர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.இடைக்­கால அர­சாங்­கத்தில் பாது­காப்பு அமைச்சர் நிய­மிக்­கப்­ப­டாமை பெரிய குறை­பா­டல்ல. தேசிய பாது­காப்பைக் கருத்திற் கொண்டு ஜனா­தி­பதி அனைத்து மாவட்­டங்­க­ளிலும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு முப்­ப­டை­யி­னரை ஈடு­ப­டுத்­தி­யுள்ளார். தேசிய பாது­காப்பு தொடர்பில் முப்­ப­டை­களின் தள­பதி என்ற அடிப்­ப­டையில் ஜனா­தி­ப­திக்குத் தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் அதி­காரம் அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய பாது­காப்பு சபை கூட்­டத்தில் ஜனா­தி­பதி, பிர­தமர், பாது­காப்பு செய­லாளர் மற்றும் பாது­காப்பு பிர­தா­னிகள் மாத்­தி­ரமே கலந்­து­கொள்­வார்கள்.

பாது­காப்பு சபை கூட்­டத்தின் இர­க­சியத் தீர்­மா­னங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­மாட்­டாது. அதற்­கான நட­வ­டிக்­கைகள் மாத்­தி­ரமே முறை­யாக மேற்­கொள்­ளப்­படும். கிடைக்­கப்­பெற்ற புல­னாய்வுத் தக­வல்­களை கொண்டு ஜனா­தி­பதி பாது­காப்பை பலப்­ப­டுத்­தி­யுள்ளார். இது ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய விடயம்.

பாது­காப்பு அமைச்சர் நிய­மிக்­கப்­ப­டாத விட­யத்தை எதிர்த் தரப்­பினர் அர­சியல் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றார்கள். கடந்த அர­சாங்­கத்தில் பாது­காப்பு அமைச்சர், இரா­ஜாங்க அமைச்சர், பாது­காப்பு செய­லா­ளர்கள் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தும். முன்­ன­றி­வித்தல் விடுக்­கப்­பட்ட ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­கு­தலை தவிர்க்க முடி­ய­வில்லை.தேசிய பாது­காப்பு விட­யங்கள் அர­சியல் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டன. இதன் கார­ண­மா­கவே பாரிய விளைவுகள் ஏற்பட்டன இவ்வாறான முறையற்ற செயற்­பா­டு­க­ளுக்கு இனி இட­ம­ளிக்க முடி­யாது. நாட்டு மக்­களின் நலனை கருத்திற் கொண்டே ஜனா­தி­பதி பாது­காப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்றார். பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்த முடியாது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.