மாற்றங்களை வேண்டி நிற்கும் இலங்கையின் அரசியல் கலாசாரம்

0 754

இலங்­கையின் அர­சியல் பரப்பில் தற்­போது அதிகம் பேசப்­ப­டு­கின்ற விவ­கா­ரமே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் தொலை­பேசி உரை­யா­டல்­களின் ஒலிப்­ப­திவு பற்­றிய சர்ச்­சை­யாகும். இந்த ஒலிப்­ப­தி­வுகள் அர­சி­யலில் மாத்­தி­ர­மன்றி நீதித்­துறை, பாது­காப்­புத்­துறை, ஊடகத்துறை­க­ளிலும் தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ளன. இதற்­கப்பால் சில­ரது தனிப்­பட்ட வாழ்­விலும் குடும்ப சூழ­லிலும் இது கடும் பாதிப்பை தோற்­று­வித்­துள்­ளது.

அந்­த­வ­கையில் ரஞ்­ச­னுடன் உரை­யா­டி­ய­தாக கரு­தப்­படும் நீதி­ப­திகள் சிலர் சேவை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­துடன் விசா­ர­ணை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ளனர். ஒரு நீதி­ப­தியை கைது செய்­யு­மாறு சட்­டமா அதிபர் நேற்று அறி­வு­றுத்­தி­யுள்ளார். புல­னாய்வுப் பிரவின் முன்னாள் பணிப்­பா­ளரும் இது­வி­ட­ய­மாக நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ளார்.
இதற்­கப்பால் இந்த விவ­காரம் மக்கள் மத்­தி­யிலும் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது.

குறிப்­பாக இந்த ஒலிப்­ப­தி­வுகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டதன் பின்னர் அவை அதி­க­மா­னோரால் செவி­ம­டுக்­கப்­பட்­டுள்­ளன. இது நீதி மற்றும் புல­னாய்­வுத்­துறை சார்ந்­தோ­ருக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் இடை­யி­லான உறவை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ள­துடன் அவற்றில் அர­சியல் தலை­யீ­டுகள் இருந்­த­னவா எனும் கேள்­வி­யையும் தோற்­று­வித்­துள்­ளது.

ஒரு நாட்டின் நீதி மற்றும் பாது­காப்­புத்­து­றைக்கு அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. நீதித்­துறை மற்றும் குற்­றத்­த­டுப்பு பிரிவைச் சேர்ந்­த­வர்கள் இதில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளமை நிரூ­பிக்­கப்­பட்டால் அவர்கள் தரா­தரம் பாராது பதவி நீக்கம் செய்­யப்­ப­டு­வ­துடன் அதி­க­பட்ச தண்­ட­னையும் வழங்­கப்­பட வேண்டும்

எனினும், இந்த விவ­கா­ரத்தில் ஓர் அர­சியல் தரப்பை மாத்­திரம் குறி­வைத்து காய்­ந­கர்த்­தப்­ப­டு­வதை பொதுப்­புத்­தி­யுள்ள அனை­வ­ராலும் புரிந்து கொள்ள முடி­யு­மா­க­வி­ருக்கும். இந்த குரல் பதிவை வெளிப்­ப­டுத்தும் ஊட­கங்கள் முற்­றிலும் அர­சியல் உள்­நோக்­கங்­களும் பக்­கச்­சார்பும் கொண்­டவை என்­பது வெளிப்­ப­டை­யா­ன­தாகும். பொலி­ஸா­ரிடம் பாது­காப்­பாக இருக்க வேண்­டிய இந்த ஆவ­ணங்கள் எவ்­வாறு ஊட­கங்­க­ளுக்கு கசி­ய­வி­டப்­ப­டு­கின்­றன எனும் கேள்­விக்கும் விடை காணப்­பட வேண்டும். தன்­னிடம் தற்­போ­தைய ஆளும்­த­ரப்பு அர­சி­யல்­வா­திகள் பல­ரது குரல் பதி­வுகள் உள்­ள­தா­கவும் அவற்றை விரைவில் வெளி­யி­ட­வுள்­ள­தா­கவும் ரஞ்சன் ராம­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருக்­கிறார். அவை வெளி­வந்தால் அவற்­றையும் இதே ஊட­கங்கள் அதே அளவு முக்­கியம் கொடுத்து வெளிப்­ப­டுத்­துமா என்­பது கேள்­விக்­கு­ரி­யதே.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த குரல் பதிவு விவ­கா­ரத்­தினால் நிர்­வா­ண­மாக்­கப்­பட்­டி­ருப்­பது இலங்­கையின் அர­சியல் கலா­சா­ர­மே­யாகும். ஏலவே பல்­வேறு வகை­க­ளிலும் சீர­ழிந்­துள்ள நமது அர­சி­யலை மேலும் பாதா­ளத்தில் தள்­ளு­வ­தா­கவே இந்த விவ­காரம் அமைந்­துள்­ளது. அத்­துடன் அர­சி­யல்­வா­தி­களின் ஒழுக்கம் குறித்து ஏலவே இருந்த சந்­தே­கத்­தையும் மேலும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வரை ரஞ்­சனைப் பிடித்து சிறையில் தள்­ளு­வதால் மாத்­திரம் தீர்வைப் பெற்­று­விட முடி­யாது. மாறாக இந்த விவ­கா­ரத்­தினால் வெளிப்­பட்­டுள்ள ஆழ அக­லங்கள் ஆரா­யப்­பட வேண்டும். அர­சியல் தலை­யீ­டுகள் உள்ள அரச துறை­களைக் கண்­ட­றிந்து அவற்றில் களை­யெ­டுக்க வேண்டும். ஒழுக்­கமும் நேர்­மையும் அற்ற அர­சி­யல்­வா­திகள் ஓரங்­கட்­டப்­பட வேண்டும். அவர்­களை அடுத்த தேர்­தல்­களில் போட்­டி­யிட அனு­ம­திக்க கூடாது. அவ்­வாறு போட்­டி­யிட்­டாலும் மக்கள் நிரா­க­ரிக்க வேண்டும்.

இலங்­கையின் அர­சி­யலை சுத்­தப்­ப­டுத்­து­வதே மக்கள் முன்­னுள்ள பிர­தான பணி­யாகும். அதனை சுத்­தப்­ப­டுத்­தா­த­வரை எந்த துறை­யிலும் மாற்­றங்­களை எதிர்­பார்க்க முடி­யாது.

இலங்கை மிகவும் திற­மையும் நேர்­மையும் கொண்ட அர­சி­யல்­வா­தி­க­ளையும் அதி­கா­ரி­க­ளை­யுமே வேண்டி நிற்­கி­றது. அவ்­வா­றா­ன­வர்கள் வானத்­தி­லி­ருந்து விழ முடி­யாது. மாறாக நம்­மத்­தியில் உள்ள நல்­ல­வர்­களை இனங்­கண்டு நாம்தான் அவர்­களை மக்கள் பிரதி­நி­தி­க­ளாக தெரிவு செய்ய வேண்டும். நல்ல அர­சி­யல்­வா­திகள் பாரா­ளு­மன்ற கதி­ரை­களில் அமர்­வதன் மூலமே ஊழல்கள் நிறைந்­துள்ள அரச இயந்­தி­ரத்­திலும் எதிர்­பார்க்­கப்­படும் மாற்­றங்­களை கொண்­டு­வர முடி­யு­மா­க­வி­ருக்கும். இதற்­காக ஏப்­ரலில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலை மக்கள் நன்றாக பயன்படுத்த தயாராக வேண்டும்.

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஊழல் மோசடிக்கு எதிராக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி யுள்ளதுடன் அரச இயந்திரத்தை வினைத்திறனாக்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். தான் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவர்களின் விடயத்திலும் அவர் கறாராகவே நடந்து கொள்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும். நல்லதொரு அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப அவர் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று பாடுபடுவாராயின் அதுவே அவர் இந்த தேசத்துக்குச் செய்யும் பேருபகாரமாக அமையும்.-இலங்­கையின் அர­சியல் பரப்பில் தற்­போது அதிகம் பேசப்­ப­டு­கின்ற விவ­கா­ரமே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் தொலை­பேசி உரை­யா­டல்­களின் ஒலிப்­ப­திவு பற்­றிய சர்ச்­சை­யாகும். இந்த ஒலிப்­ப­தி­வுகள் அர­சி­யலில் மாத்­தி­ர­மன்றி நீதித்­துறை, பாது­காப்­புத்­துறை, ஊடகத்துறை­க­ளிலும் தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ளன. இதற்­கப்பால் சில­ரது தனிப்­பட்ட வாழ்­விலும் குடும்ப சூழ­லிலும் இது கடும் பாதிப்பை தோற்­று­வித்­துள்­ளது.

அந்­த­வ­கையில் ரஞ்­ச­னுடன் உரை­யா­டி­ய­தாக கரு­தப்­படும் நீதி­ப­திகள் சிலர் சேவை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­துடன் விசா­ர­ணை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்­ளனர். ஒரு நீதி­ப­தியை கைது செய்­யு­மாறு சட்­டமா அதிபர் நேற்று அறி­வு­றுத்­தி­யுள்ளார். புல­னாய்வுப் பிரவின் முன்னாள் பணிப்­பா­ளரும் இது­வி­ட­ய­மாக நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ளார்.

இதற்­கப்பால் இந்த விவ­காரம் மக்கள் மத்­தி­யிலும் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. குறிப்­பாக இந்த ஒலிப்­ப­தி­வுகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டதன் பின்னர் அவை அதி­க­மா­னோரால் செவி­ம­டுக்­கப்­பட்­டுள்­ளன. இது நீதி மற்றும் புல­னாய்­வுத்­துறை சார்ந்­தோ­ருக்கும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் இடை­யி­லான உறவை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ள­துடன் அவற்றில் அர­சியல் தலை­யீ­டுகள் இருந்­த­னவா எனும் கேள்­வி­யையும் தோற்­று­வித்­துள்­ளது.

ஒரு நாட்டின் நீதி மற்றும் பாது­காப்­புத்­து­றைக்கு அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. நீதித்­துறை மற்றும் குற்­றத்­த­டுப்பு பிரிவைச் சேர்ந்­த­வர்கள் இதில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளமை நிரூ­பிக்­கப்­பட்டால் அவர்கள் தரா­தரம் பாராது பதவி நீக்கம் செய்­யப்­ப­டு­வ­துடன் அதி­க­பட்ச தண்­ட­னையும் வழங்­கப்­பட வேண்டும்

எனினும், இந்த விவ­கா­ரத்தில் ஓர் அர­சியல் தரப்பை மாத்­திரம் குறி­வைத்து காய்­ந­கர்த்­தப்­ப­டு­வதை பொதுப்­புத்­தி­யுள்ள அனை­வ­ராலும் புரிந்து கொள்ள முடி­யு­மா­க­வி­ருக்கும். இந்த குரல் பதிவை வெளிப்­ப­டுத்தும் ஊட­கங்கள் முற்­றிலும் அர­சியல் உள்­நோக்­கங்­களும் பக்­கச்­சார்பும் கொண்­டவை என்­பது வெளிப்­ப­டை­யா­ன­தாகும். பொலி­ஸா­ரிடம் பாது­காப்­பாக இருக்க வேண்­டிய இந்த ஆவ­ணங்கள் எவ்­வாறு ஊட­கங்­க­ளுக்கு கசி­ய­வி­டப்­ப­டு­கின்­றன எனும் கேள்­விக்கும் விடை காணப்­பட வேண்டும். தன்­னிடம் தற்­போ­தைய ஆளும்­த­ரப்பு அர­சி­யல்­வா­திகள் பல­ரது குரல் பதி­வுகள் உள்­ள­தா­கவும் அவற்றை விரைவில் வெளி­யி­ட­வுள்­ள­தா­கவும் ரஞ்சன் ராம­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருக்­கிறார். அவை வெளி­வந்தால் அவற்­றையும் இதே ஊட­கங்கள் அதே அளவு முக்­கியம் கொடுத்து வெளிப்­ப­டுத்­துமா என்­பது கேள்­விக்­கு­ரி­யதே.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த குரல் பதிவு விவ­கா­ரத்­தினால் நிர்­வா­ண­மாக்­கப்­பட்­டி­ருப்­பது இலங்­கையின் அர­சியல் கலா­சா­ர­மே­யாகும். ஏலவே பல்­வேறு வகை­க­ளிலும் சீர­ழிந்­துள்ள நமது அர­சி­யலை மேலும் பாதா­ளத்தில் தள்­ளு­வ­தா­கவே இந்த விவ­காரம் அமைந்­துள்­ளது. அத்­துடன் அர­சி­யல்­வா­தி­களின் ஒழுக்கம் குறித்து ஏலவே இருந்த சந்­தே­கத்­தையும் மேலும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வரை ரஞ்­சனைப் பிடித்து சிறையில் தள்­ளு­வதால் மாத்­திரம் தீர்வைப் பெற்­று­விட முடி­யாது. மாறாக இந்த விவ­கா­ரத்­தினால் வெளிப்­பட்­டுள்ள ஆழ அக­லங்கள் ஆரா­யப்­பட வேண்டும். அர­சியல் தலை­யீ­டுகள் உள்ள அரச துறை­களைக் கண்­ட­றிந்து அவற்றில் களை­யெ­டுக்க வேண்டும். ஒழுக்­கமும் நேர்­மையும் அற்ற அர­சி­யல்­வா­திகள் ஓரங்­கட்­டப்­பட வேண்டும். அவர்­களை அடுத்த தேர்­தல்­களில் போட்­டி­யிட அனு­ம­திக்க கூடாது. அவ்­வாறு போட்­டி­யிட்­டாலும் மக்கள் நிரா­க­ரிக்க வேண்டும்.

இலங்­கையின் அர­சி­யலை சுத்­தப்­ப­டுத்­து­வதே மக்கள் முன்­னுள்ள பிர­தான பணி­யாகும். அதனை சுத்­தப்­ப­டுத்­தா­த­வரை எந்த துறை­யிலும் மாற்­றங்­களை எதிர்­பார்க்க முடி­யாது.

இலங்கை மிகவும் திற­மையும் நேர்­மையும் கொண்ட அர­சி­யல்­வா­தி­க­ளையும் அதி­கா­ரி­க­ளை­யுமே வேண்டி நிற்­கி­றது. அவ்­வா­றா­ன­வர்கள் வானத்­தி­லி­ருந்து விழ முடி­யாது. மாறாக நம்­மத்­தியில் உள்ள நல்­ல­வர்­களை இனங்­கண்டு நாம்தான் அவர்­களை மக்கள் பிரதி­நி­தி­க­ளாக தெரிவு செய்ய வேண்டும். நல்ல அர­சி­யல்­வா­திகள் பாரா­ளு­மன்ற கதி­ரை­களில் அமர்­வதன் மூலமே ஊழல்கள் நிறைந்­துள்ள அரச இயந்­தி­ரத்­திலும் எதிர்­பார்க்­கப்­படும் மாற்­றங்­களை கொண்­டு­வர முடி­யு­மா­க­வி­ருக்கும். இதற்­காக ஏப்­ரலில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலை மக்கள் நன்றாக பயன்படுத்த தயாராக வேண்டும்.

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ ஊழல் மோசடிக்கு எதிராக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி யுள்ளதுடன் அரச இயந்திரத்தை வினைத்திறனாக்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார். தான் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவர்களின் விடயத்திலும் அவர் கறாராகவே நடந்து கொள்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும். நல்லதொரு அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப அவர் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று பாடுபடுவாராயின் அதுவே அவர் இந்த தேசத்துக்குச் செய்யும் பேருபகாரமாக அமையும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.