சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வேண்டும்

சபையில் இம்ரான் எம்.பி. வலியுறுத்து

0 712

சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்ட மீன­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கப்­பட வேண்­டு­மென திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்தார். நேற்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,

திரு­கோ­ண­மலை மாவ­டத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் சுதந்­தி­ர­மாக சுருக்­கு­வலை பயன்­ப­டுத்தி மீன்­பிடி தொழிலில் ஈடு­பட்டு வந்த மீன­வர்­க­ளுக்கு 2011ஆம் ஆண்டு முதல் அனு­ம­திப்­பத்­திரம் வழங்கும் நடை­முறை கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதில் ஏழு கிலோ­மீ­ற்­ற­ருக்கு அப்பால் சென்றே மீன்­பிடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டு­மெனக் கட்­டுப்­பாடு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

கிண்­ணியா, மூதூர், ஜமா­லியா பிர­தே­சங்­களில் சிறிய பட­கு­க­ளைக்­கொண்டே மீன்­பிடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதால் ஏழு கிலோ­மீற்­ற­ருக்கு அப்பால் சென்று மீன்­பி­டிப்­ப­தி­லுள்ள சிர­மத்தை அமைச்சர் எண்­ணிப்­பார்க்க வேண்டும்.

அத்­துடன் இந்த ஏழு கிலோ­மீற்றர் கட்­டுப்­பாடு திரு­கோ­ண­மலை உட்­பட சில மாவட்­டங்­க­ளி­லேயே நடை­மு­றையில் உள்­ளது. ஆகவே, ஏன் திரு­கோ­ண­மலை மாவட்ட மீன­வர்­க­ளுக்கு மட்டும் இந்தப் பாகு­பாடு. இந்த ஏழு கிலோ­மீற்றர் எல்லை கணிக்­கப்­ப­டு­வ­திலும் பிரச்­சி­னை­யுள்­ளது. பட­குகள் புறப்­படும் நேரம் கரை­யி­லி­ருந்து கணிக்­கப்­ப­டாமல் அவர்கள் மீன்­பி­டிக்கும் கட­லுக்கு அண்­மை­யி­லுள்ள கரை­யி­லி­ருந்தே கணிக்­க­ப்ப­டு­கி­றது. இது தொடர்­பான உறு­தி­யான நிலைப்­பா­டுகள் பேணப்­பட வேண்டும்.

ஆகவே, சிறிய பட­கு­களை பயன்­ப­டுத்தி மீன்­பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் மீன­வர்­க­ளுக்கு ஏழு கிலோ­மீற்றர் என்ற எல்­லையை குறைக்க வேண்டும். அல்­லது இந்தப் பிர­தே­சங்­களில் இறங்­கு­துறை அமைத்து அவர்­க­ளுக்கு மானிய விலையில் பலநாள் பட­கு­களைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். அத்­துடன் சுருக்கு வலைக்­கான அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கு­வ­திலும் முறை­யான ஒழுங்­கு­முறை இல்லை. சில வரு­டங்கள் எட்டு மாதங்­க­ளுக்கும், சில வரு­டங்கள் பத்து மாதங்­க­ளுக்­கு­மென வழங்­கப்­ப­டு­கி­றது. ஆகவே இதுவும் ஓர் ஒழுங்­க­மைப்பின் கீழ் வழங்க வேண்டும்.

கடும் மழை, வெள்ள அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­போது மீன­வர்கள் மாதக்­க­ணக்கில் தமது தொழில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. ஆகவே இக்­கா­லப்­ப­கு­தியில் விவ­சா­யி­க­ளுக்கு வழங்கும் நிவா­ரணங்களைப் போல் மீன­வர்­க­ளுக்கும் நிவா­ர­ணங்கள் வழங்­கப்­பட வேண்டும்.

இந்­திய மீன­வர்கள் எமது நாட்­டுக்குள் வந்து மீன்­பிடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதால் எமது நாட்டு மீன­வர்கள் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வது போன்றே வெளியூர் மீன­வர்கள் எமது திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மீன்­பிடி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதால் எமது மாவட்ட மீன­வர்கள் பிரச்­சி­னை­களுக்கு முகம்­கொ­டுக்­கின்­றனர்.

இதனால் மீன­வர்­க­ளுக்­கி­டையில் மோதல்கள் ஏற்­பட்டு குறிப்­பாக குச்­ச­வெளி, புல்­மோட்டை பிர­தே­சங்­களில் அவர்­களின் பட­குகள் எரி­யூட்­டப்­பட்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. ஆகவே வெளியூர் மீன­வர்கள் எமது மாவட்­டத்தில் மீன்­பிடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் கட்­டுப்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும்.

அத்­துடன் எரி­பொருள் விலை அதி­க­ரிப்­புக்­கேற்ப மீன­வர்­க­ளுக்கு எரி­பொருள் மானியம் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.