வர்த்தகர் இப்ராஹிம் உட்பட அறுவருக்கு 31 வரை விளக்கமறியல்

0 991

ஏப்ரல் 21 தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு இது­வரை காலமும் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல வர்த்­தகர் இப்­ராஹீம் ஹாஜியார் உள்­ளிட்ட ஆறு பேர் நேற்று முதல் விளக்­க­ம­றி­ய­லுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

தெமட்­ட­கொடை வீட்டுத் தொகு­தியில் இடம்­பெற்ற தற்­கொ­லைக்­குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வி­னரால் அதே தினம் கைது செய்­யப்­பட்ட எம்.யூ.இப்­ராஹிம், எம்.ஐ.எம்.அஹமட், எம்.ஐ. இஜாஸ் அகமட், எம்.ஐ.இஸ்­மாயில், எம்.எம். இர்ஷான், எம்.ஏ.எம். ஹக்கீம் ஆகி­யோரே இவ்­வாறு தடுப்புக் காவ­லி­லி­ருந்து விளக்­க­ம­றி­ய­லுக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­வர்­க­ளாவர்.

நேற்­றைய தினம் இவர்­களை கொழும்பு மேல­திக நீதிவான் தனுஜா ஜய­துங்க முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போதே அவர்களை எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.