பாபரி மஸ்ஜிதை தகர்த்த முதல் நபர் இன்று 100 பள்ளிகளை நிர்மாணிக்கிறார்

0 1,381
  • தமிழில் : எம்.ஏ.எம்.அஹ்ஸன்

Q உங்­களைப் பற்­றியும் உங்­க­ளது குடும்பம் பற்­றியும் தெரிந்து கொள்ள முடி­யுமா?

நான் மொஹமட் ஆமிர் (பல்பிர் சிங்). 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி ராஜ்புத் பரம்­ப­ரையில் பிறந்தேன். ஹரி­யானா மாநி­லத்தின் பனிபட் மாவட்­டத்தில் உள்ள ஒரு கிரா­மமே என்­னு­டைய ஊர் ஆகும்.

எனது தந்தை ஒரு வள­மான விவ­சாயி. அத்­துடன் ஒரு ஆரம்பப் பாட­சா­லையின் தலைமை ஆசி­ரி­யரும் கூட. எப்­போதும் அநீ­திக்கும் கொடுங்­கோண்­மைக்கும் கடும் எதிர்ப்பு தெரி­விக்கும் அவர் மனித நேயப் பண்பு கொண்ட மிகச்­சி­றந்த மனிதர் ஆவார்.

1947 ஆம் ஆண்டு தேசிய ரீதி­யாக களங்­கத்தை ஏற்­ப­டுத்­திய பயங்­க­ர­மான கல­வரம் ஒன்றை அவர் கண்டார். பெருந்­தொ­கை­யான முஸ்­லிம்கள் அதில் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். அந்­நேரம் மனம் கலங்­கிய எனது தந்தை முஸ்­லிம்­க­ளு­டைய புனர்­வாழ்­வுக்­காக வேண்டி உதவ முன்­வந்தார். தனது பாட­சா­லை­யி­லுள்ள முஸ்லிம் சிறு­வர்கள் கல்­வியை நோக்கி பய­ணிக்க முக்­கிய கவனம் செலுத்­தி­ய­தோடு விஷேட சலு­கை­க­ளையும் வழங்­கினார்.

என்­னு­டைய பாட­சாலைக் கல்­வியின் பின்னர் பனி­பட்டின் இடை­நிலைக் கல்­லூ­ரி­யொன்றில் அனு­மதி பெற்றேன். அப்­போது என்­னு­டைய பெயர் பல்பிர் சிங் ஆக இருந்­தது. மும்­பைக்குப் பின் சிவ­சேனா இயக்­கத்தின் பலம் பொருந்­திய கோட்­டை­யாக பனிபட் விளங்­கி­யது. அங்கு நான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நஞ்­சூட்­டிய சிந்­த­னையைக் கொண்ட வெறி­யர்­க­ளான பல இளை­ஞர்­களைக் கண்டேன். அவர்­களால் நானும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டவும் முஸ்­லிம்­களை சிதைத்து விடும் எண்ணம் கொண்­ட­வ­னா­கவும் மாறினேன்.

சிவ­சேனா இயக்­கத்தின் பஜ்­ரங்தள் மற்றும் இந்­துத்­து­வா­வினர் இஸ்லாம், குர்ஆன், மஸ்ஜித் மற்றும் முஸ்­லிம்கள் பற்றி ஓர­ள­வா­வது தெரிந்து வைத்­தி­ருந்­தி­ருப்­பார்­க­ளே­யானால் பாபரி மஸ்­ஜி­து­டைய அழிவில் இவர்­க­ளு­டைய பங்­க­ளிப்பு இருந்­தி­ருக்­காது. இப்­ப­டி­யொரு வெட்­கக்­கே­டான செயலை செய்­வ­தற்கு நினைத்­தி­ருக்­கவே மாட்­டார்கள். இது என்­னு­டைய தனிப்­பட்ட அனு­ப­வ­மாகும். 99 சத­வீ­த­மான இந்­துக்கள் எனக்கு ஒரு தந்­தையைப் போன்­ற­வர்கள்.

நான் சிவ­சேனா இயக்­கத்­துடன் இணைந்து கொண்­டதை அறிந்த எனது தந்தை மிகவும் வருத்­தப்­பட்டார். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக திரும்­பி­யி­ருந்த என்னை சமா­தா­னப்­ப­டுத்த முயற்சி செய்தார். உண்மைச் சம்­ப­வங்­க­ளான நீதிக்­க­தை­களை எனக்குக் கூறினார். பாபர், அவு­ரங்­கஷிப் போன்ற ஆட்­சி­யா­ளர்கள் பற்றி எனக்கு எத்தி வைத்தார்.

இந்­தி­யாவில் பல சிதை­வு­களை ஏற்­ப­டுத்தி, ஆங்­கி­லே­ய­ரு­டைய ஆதிக்கம் விரி­வ­டைய முஸ்­லிம்­க­ளுக்கும் இந்­துக்­க­ளுக்கும் இடையில் இருந்த கசப்­பு­ணர்­வுதான் காரணம் என்­பதை உணர்த்த முற்­பட்டார். இருந்த போதிலும் சிவ­சேனா இயக்­கத்­துக்கு என் மனதில் இருந்த செல்­வாக்கு அவ­ரு­டைய அத்­துனை முயற்­சி­க­ளுக்கும் தோல்­வியைக் கொடுத்­தது. நான் அவ­ரு­டைய வார்த்­தைகள் எதையும் கண்­டு­கொள்­ள­வில்லை.

Q  பாபரி மஸ்­ஜிதை தகர்ப்­பதில் உங்க­ளு­டைய பங்­க­ளிப்பு என்ன?

1990 ஆம் ஆண்டு அத்­வா­னியின் ‘ரத யாத்ரா’வில் நான் ஒரு முக்­கிய அங்கம் வகித்தேன். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இருந்த வெறுப்பும் வெறி­யுமே என் இத­யத்தை நிரப்பி இருந்­தது. அயோத்­தியின் ராம் மந்திர் வளா­கத்தில் இருந்த பாபரி மஸ்­ஜி­து­டைய அமைப்­பையே இல்­லாமல் செய்து தரை­மட்டமாக்­குவேன் என உறு­தி­மொழி கூறினேன். அந்த வரு­டத்தின் ஒக்­டோபர் 30 ஆம் திகதி சிவ­சே­னாவின் இளை­ஞர்­க­ளுக்கு தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டேன்.

இளைஞர் படை­யோடு சேர்ந்து நான் அயோத்­திக்குச் சென்றேன். சில இடங்­களில் பொலிஸார் எங்­களை வழி­ம­றித்­தார்கள். துப்­பாக்­கியால் சுட்­டார்கள். எங்­களால் பாபரி மஸ்­ஜிதை அடைய முடி­ய­வில்லை. ஆனால் இந்தத் தடைகள் முஸ்­லிம்கள் மீது இருந்த வெறுப்­பு­ணர்வை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யது. ராம் ஜன்ம பூமி­யான ராம் பகாட்ஸில் தோட்­டாக்கள் வெடிப்­பது சிவ­சேனா இயக்­கத்தை மேலும் வெறுப்­பூட்­டி­யது. நான் கடு­மை­யாக ஆத்­தி­ர­ம­டைந்தேன். தோல்­விகள் என்னைத் தற்கொலைக்குத் தூண்­டி­யது. நாடெங்கும் கல­வரம் வெடித்­தது. பாபரி மஸ்­ஜிதை இடித்துத் தரை மட்­ட­மாக்­கு­வ­தற்­கான நாளை நான் எண்ணிக் கொண்­டி­ருந்தேன். இறு­தி­யாக அந்த நாளும் வந்­தது.

1992 டிசம்பர் முதலாம் திகதி நான் அயோத்­தியை எனது குழு­வுடன் அடைந்தேன். அங்­குதான் எனக்கு யோகேந்­திர பால் அறி­மு­க­மானார். அவர் சோனிபட் கிரா­மத்தைச் சேர்ந்த ஜெமீந்தார் சௌத்ரி ரக்­ஹூபிர் சிங்கின் மகன். அவ­ரு­டைய தந்­தைக்கு நேர் எதி­ரா­ன­வ­ராக அவர் இருந்தார். எனக்கு உற்ற நண்­ப­ராக மாறினார். டிசம்பர் ஐந்தாம் திகதி பாபரி மஸ்­ஜிதை அண்­மித்த பகு­தியை நாம் நெருங்­கினோம். அந்த இரவை அங்­கி­ருந்த முஸ்லிம் வீடு­களின் கூரையில் நாம் கழித்தோம்.

இந்த முறை அனை­வரும் பொறு­மை­யாக செயற்­பட்டோம். கடந்த வருடம் ஏற்­பட்ட தோல்­விகள் நினை­வுக்கு வந்­தது. கர­சே­வாவை தொடங்க முடிவு செய்தோம். ஆனால் எங்­க­ளு­டைய சங்­சலக் ஒழுக்­கங்­களை பேணு­மாறு தடுத்து நிறுத்­தினார். அந்த நேரத்தில் உமா பாரதி பேசிய தீவி­ர­மான பேச்சு எங்­க­ளு­டைய உணர்­வு­களைத் தழு­வி­யது. நான் யோகேந்­திர பாலுடன் கோட­ரியை எடுத்துக் கொண்டு மஸ்­ஜிதின் உய­ரத்­துக்குச் சென்றேன்.

அந்த கணம் ‘ஒரு அடி கொடுத்து மஸ்­ஜிதை தரை­மட்­ட­மாக்­குங்கள்” என்று உமா பாரதி முழங்­கினார். நான் எனது கோட­ரியால் மஸ்­ஜிதின் மினா­ராவை சேதப்­ப­டுத்­தி­விட்டு கோட­ரியை உயர்த்தி ‘ஜெய் ஜெய் ராம் பகவான்” என்ற சுலோ­கத்தை உரத்து முழங்­கினேன். சில மணி நேரத்தின் பின்னர் எங்­க­ளு­டைய கண்­க­ளுக்கு முன்னால் மஸ்ஜித் நன்­றாக சேத­ம­டைந்­தது. நாம் மிகுந்த சந்­தோ­ஷத்­துடன் கீழே இறங்­கி­ய­தோடு ராம் லல்­லா­வுக்கு சிரம் தாழ்த்தி வணங்­கினோம். நாங்கள் பனிபட் மக்­க­ளுக்கு காட்­டு­வ­தற்­காக மஸ்­ஜிதின் இரண்டு செங்­கற்­களை எம்­மோடு எடுத்துக் கொண்டோம். அதைக் கண்ட மக்கள் அனை­வரும் எம்மை பாராட்­டி­னார்கள். குறித்த செங்­கற்கள் இரண்டும் சிவ­சேனா இயக்­கத்தின் தலைமை அலு­வ­ல­கத்தில் மக்கள் பார்­வைக்­காக வைக்­கப்­பட்­டன.

மஸ்­ஜிதை உடைத்­ததில் பங்­க­ளிப்பு செய்­த­வர்­களுள் பிர­தான பங்­காளர் நான்தான் என என்­னு­டைய பெயரை அறி­வித்­தார்கள். நான் அனை­வ­ராலும் மெச்­சப்­பட்டேன். இவற்­றை­யெல்லாம் என்­னு­டைய தந்­தை­யிடம் நான் தெரி­வித்த போது அவர் மிகவும் கோப­ம­டைந்தார். என்­னு­டைய வெட்­கக்­கே­டான செயலை நினைத்து மன­மு­டைந்து போனார். என்னை வீட்டை விட்டுச் செல்­லு­மாறு பணித்தார். அவ­ருடன் நான் இருப்­பதை அவர் விரும்­ப­வில்லை. மஸ்­ஜிதை உடைத்­ததன் மூலம் நான் எவ்­வ­ளவு பிர­மல்­ய­ம­டைந்­தி­ருக்­கிறேன் என்­பது பற்றி அவ­ருக்கு விளக்கம் கொடுத்தேன். ஆனாலும் இறை­யில்லம் ஒன்றை உடைத்த ஒரு­வ­னுடன் தொடர்ந்தும் இருக்க அவர் விரும்­ப­வில்லை. அவ­ரா­கவே வீட்டை விட்டுச் செல்­வ­தாகக் கூறி வெளி­யேற முற்­பட்டார். அவரை தடுத்து நிறுத்தி நான் வெளியே செல்­வ­தாகக் கூறினேன். அதனைத் தொடர்ந்து நான் பனி­பட்டை விட்டு வெளி­யே­றினேன்.

Q  இப்­போது நீங்கள் எவ்­வாறு இஸ்­லாத்தைத் தழு­வி­னீர்கள் என்று கூறுங்கள்.

அல்லாஹ் என்னை ஆசிர்­வ­திக்கப் போது­மான அளவு இரக்­கத்தை கொண்­டி­ருக்­கிறான். தீவி­ர­வாதம் எனும் இருளில் இருந்து வெளியில் வர அவன் எனக்கு வழி­காட்­டல்­களைத் தந்தான். அவ­னது வீட்டை அழிப்­பதில் பங்­க­ளிப்பு செய்த அனை­வ­ருக்கும் இதுதான் சரி­யான பதி­லடி.

ஒரு நாள் யோகேந்­திர பால், பாபரி மஸ்­ஜிதின் இரண்டு செங்­கற்­க­ளையும் எடுத்து வந்து அதன் மீது சிறுநீர் கழிக்க இந்­துக்­க­ளுக்கு அழைப்பு விடுத்தான். பெருந்­தொ­கை­யானோர் அதன் மீது சிறுநீர் கழிக்­க­வென ஒன்று கூடி­னார்கள். நான்கு ஐந்து நாட்­களின் பின்னர் இறை­யில்­லத்தின் உரி­மை­யாளன் அவ­னது மாட்­சி­மையைக் காட்­டினான். ஆம்! யோகேந்­திர பால் மன­ரீ­தி­யாக நோய்­வாய்ப்­பட்டான். அவன் ஒரு பைத்­தி­ய­மாக மாறி­ய­தோடு எப்­போதும் நிர்­வாணக் கோலத்­தையே விரும்­பினான். இவன் கௌர­வத்­துக்­கு­ரிய ஜெமீந்தார் சௌத்ரி ரகுபிர் சிங்கின் ஒரே ஒரு மகன்.

ஒரு முறை அவன் தனது தாய் அணிந்­தி­ருந்த ஆடை­களை கிழித்­தெ­றிந்­த­தோடு அவ­ருடன் பாலியல் ரீதி­யாக தவ­றான முறையில் நடந்து கொள்ள முற்­பட்டான். இதன் பின்னர் அவ­னது தந்தை மிகவும் வருத்­தப்­பட்டார். தனது மக­னுக்­காக அவர் இறை­வ­னிடம் மன்­றா­டினார். ஆனால் எதுவும் பய­ன­ளிக்­க­வில்லை. ஒரு நாள் அவன் தனது தாயை கடு­மை­யாக பல­வந்­தப்­ப­டுத்­தினான். அய­ல­வர்கள் அவ­னது தாயைக் காப்­பாற்­றி­ய­தோடு அவ­னையும் விலங்­கிட்­டனர். மிகுந்த கோப­ம­டைந்த அவ­னது தந்தை அவனைக் கொல்லும் அள­வுக்கு ஆத்­தி­ர­ம­டைந்தார்.

அவனைக் குணப்­ப­டுத்த சோனி­பட்டில் மத்ரஸா ஒன்றில் உள்ள மௌலா­னா­விடம் கூட்டிச் செல்­லு­மாறு ஒரு சிலர் ஆலோ­சனை வழங்­கினர். அதனைத் தொடர்ந்து அவர் மௌலா­னாவைத் தேடிச் சென்றார்.

மௌலானா வழக்­க­மாக தொழு­கைக்­காக வரு­கின்ற பாவனா மஸ்­ஜிதின் இமாமை சந்­திக்­கு­மாறு ஒரு கடையின் பரா­ம­ரிப்­பாளர் அவ­ருக்குக் கூறினார். பாபரி மஸ்­ஜிதின் அழி­வுக்குப் பின்னர் குறு­கிய காலத்­துக்குள் மௌலானா ஒரு உரையை நிகழ்த்­தியி­ருந்தார். அந்த உரையில் இந்த மாபெரும் சோகத்­துக்கு முஸ்­லிம்­க­ளா­கிய நாமும் ஒரு விதத்தில் காரணம் என அவர் தெரி­வித்­தி­ருந்தார். இஸ்­லாத்தைப் பற்றி நாம் அவர்­க­ளுக்குக் கூறி ‘தஃவா’வை எத்தி வைக்கத் தவ­றி­யது ஒரு குற்றம் என அவர் அடை­யா­ளப்­ப­டுத்தி இருந்தார். நாம் அவர்­க­ளுக்கு தஃவாவை எத்தி வைக்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்­தி­ருந்தார். யோகேந்­திர பாலின் தந்தை சௌத்ரி ரகுபிர் சிங் பாவனா மஸ்­ஜிதை அடைந்து அந்த இமாமை சந்­தித்தார். அந்த இமாம் மௌலா­னாவை சந்­திப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்தார்.

அந்த இமாம் ”இவ­ரு­டைய மக­னுக்கு அல்­லாஹ்­வி­னு­டைய வேதனை இறக்­கப்­பட்­டுள்­ளது. இஸ்­லாத்தை தழு­வு­வதன் மூலமே இவரை குணப்­ப­டுத்த முடியும்” எனக்­கூ­றினார். நிர்­வாணக் கோலத்தில் விலங்­கி­டப்­பட்ட யோகேந்­தி­ராவை சௌத்ரி, பாவனா மஸ்­ஜி­துக்கு மௌலா­னாவை சந்­திக்­க­வென கூட்டி வந்தார். அவர் மௌலா­னாவின் காலில் விழுந்து, எவ்­வ­ளவு முயற்சி செய்தும் யோகேந்­தி­ராவை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போன நிலையை தெரி­வித்தார். அவரை எழுப்பி நடந்­ததை விளக்­கு­மாறு சௌத்­ரி­யிடம் மௌலானா கூறினார். நடந்த விட­யங்­களை சௌத்ரி விளக்­கினார்.

அனைத்­தையும் கேட்ட மௌலானா, அனை­வரும் தவறு செய்­ப­வர்­களே என்ற யதார்த்­தத்தை விளக்கி விட்டு யோகேந்­தி­ரவை குணப்­ப­டுத்த உத்­த­ர­வாதம் அளித்தார். மௌலானா, மக்­க­ளிடம் யோகேந்­தி­ர­வுக்­காக பிரார்த்­திக்­கு­மாறு வேண்­டிக்­கொண்டார். மக்கள் அனை­வரும் ஆச்­ச­ரி­யப்­படும் வகையில் தனது தலைப்­பாகை ஒன்­றினால் யோகேந்­தி­ரவின் தனிப்­பட்ட அங்­கங்­களை மறைத்தார். இதனைத் தொடர்ந்து மௌலானா , சௌத்­ரிக்கு இஸ்­லாத்தை எத்தி வைத்தார். அவரும் மகிழ்ச்­சி­யுடன் இஸ்­லாத்தை ஏற்றார்.

இரு­வரும் வுழு செய்து விட்டு மொஹமட் உஸ்மான் மற்றும் மொஹமட் உமர் எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டார்கள். இவர்கள் கிரா­மத்­துக்கு திரும்­பி­ய­தோடு இரு­வ­ரு­டைய மாற்­றமும் பிராந்­தியம் முழுக்கத் தீயாகப் பர­வி­யது. இதனைக் கேள்­விப்­பட்ட ஒரு சில செல்­வாக்கு மிக்க இந்­துக்கள் இவர்­களைக் கொன்று விட திட்டம் தீட்­டினர். இதை­ய­றிந்த உள்ளூர் பள்­ளி­வாசல் இமாம் இரு­வ­ரையும் புலட் என்ற இடத்­துக்கு 40 நாட்கள் தப்லீக் ஜமாஅத் குழு­வி­ன­ரோடு தஃவா பணிக்கு அனுப்பி வைத்தார். உம­ரு­டைய (யோகேந்­திர) தாயும் இஸ்­லாத்தை தழு­வினார். உமர் இப்­போது நல்­ல­தொரு முஸ்லிம் குடும்­பத்தில் மண முடித்து டில்­லியில் ஒரு தொழிற்­சா­லையை நடத்தி வரு­கிறார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.