பொலிஸார் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்

0 922

தனது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் முறைப்­பாடு செய்­வ­தற்கு பொலிஸ் நிலையம் சென்ற பெண் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் முறைப்­பாடு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாது திரும்பி அனுப்­பப்­பட்ட சம்­பவம் அண்­மையில் பொலி­ஸாரை விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

சிங்­கள நாளி­தழின் பெண் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் பாதாள உலகக் கோஷ்­டியைச் சேர்ந்த ஒரு­வரால் கொலை அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்டார். இது தொடர்பில் முறைப்­பாடு செய்­வ­தற்கு அவர் முல்­லே­ரியா பொலிஸ் நிலை­யத்­துக்­குச்­சென்றார். ஆனால் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி முறைப்­பாட்­டினை ஏற்றுக் கொள்ள வில்லை. இதனையடுத்து தான் பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யினால் அவ­மா­னப்­ப­டுத்தப்பட்­ட­தா­கவும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் முறைப்­பாடு ஏற்றுக் கொள்­ள­வில்லை எனவும் அவரால் நுகே­கொட பிரி­வுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

நாட்டின் எந்­த­வொரு பிர­ஜைக்கும் துன்­பங்கள் விளை­விக்­கப்­பட்டால், அச்­சு­றுத்தல்கள் விடுக்­கப்­பட்டால் அது தொடர்பில் முறை­யிட்டு பரி­காரம் தேடிக்­கொள்­வ­தற்கு இருக்கும் இடமே பொலிஸ் நிலை­ய­மாகும். சட்­டத்­தையும் சமா­தா­னத்­தையும் பாது­காக்­கவே பொலிஸ் நிலை­யங்கள். இந்­நி­லை­யங்கள் மக்­க­ளுக்கு சுயா­தீ­ன­மாகச் சேவை­யாற்ற வேண்டும்.

பொலிஸார் பக்­கச்­சார்­பாக நடந்­து­கொள்ளக் கூடாது. சட்டம் அனை­வ­ருக்கும் சம­மாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். ஆனால் முல்­லே­ரியா பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி நடந்து கொண்­ட­விதம் இவற்­றி­லி­ருந்தும் முற்றும் மாறு­பட்­ட­தாகும்.

பெண் ஊட­க­வி­ய­லா­ளரின் முறைப்­பாடு பாதாள உலக கோஷ்­டியைச் சேர்ந்த ஒரு­வரின் மரண அச்­சு­றுத்­த­லாகும். இந்த முறைப்­பாடு மிகவும் பார­தூ­ர­மான முறைப்­பா­டாகும். பொலிஸார் இந்த முறைப்­பாட்­டினை ஏற்று விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்டும். ஆனால் இங்கு நடந்­துள்­ளது, முறைப்­பாடு ஏற்­கப்­ப­டாது நிரா­க­ரிக்­கப்­பட்­ட­மை­யாகும்.

அது மட்­டு­மல்­லாது சம்­பந்­தப்­பட்ட பெண் அவ­மா­னத்­துக்கும் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். முல்­லே­ரியா பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஏன் முறைப்­பாட்­டினை ஏற்­றுக்­கொள்ள மறுத்­தி­ருக்­கிறார். அவர் பாதாள உலகக் கோஷ்­டியைச் சேர்ந்­த­வ­ருக்குப் பயந்­துதான் முறைப்­பாட்­டினை ஏற்க மறுத்­தாரா? என்­பது தெரி­ய­வில்லை. பொலிஸார் பொது மக்­களின் பாது­கா­வ­லர்கள். சட்­டத்தை அமுல்­ப­டுத்த வேண்­டி­ய­வர்கள். குற்றச் செயல்­க­ளுக்கு முடி­வு­கட்ட வேண்­டி­ய­வர்கள். மக்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்க கட­மைப்­பட்­ட­வர்­களே. பாது­காப்­புக்­கான கட­மை­யி­லி­ருந்தும் தவறி விடு­கின்­ற­போது மக்கள் பொலிஸ்­துறை மீது நம்­பிக்­கையை இழப்­பார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

பெண் ஊட­க­வி­ய­லாளர் பாதாள உலக கோஷ்­டியைச் சேர்ந்த ஒரு­வரால் தனது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பி­லான முறைப்­பாடு முல்­லே­ரியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாமை குறித்து நுகே­கொட பொலிஸ் பிரி­வுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு முறைப்­பாடு செய்­­யப்பட்டதைய­டுத்து மேல் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோனின் உத்­த­ர­வுப்­படி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. முல்­லே­ரியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சந்­தி­ர­சிறி நவ­க­மு­வ­வுக்கு எதி­ரா­கவே விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்தச் சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடத்தி முழு­மை­யான அறிக்­கை­யொன்று சிரேஷ்ட பொலிஸ் மா அதி­பருக் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பிட்ட பொலிஸ் பரி­சோ­தகர் நுகே­கொட சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி காரி­யா­ல­யத்­துக்கு அழைக்­கப்­பட்டு வாக்கு மூலம் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­தோடு இதற்கு மேல­தி­க­மாக அரச புல­னாய்வுப் பிரிவு இர­க­சிய பொலிஸ் விசா­ரணைப் பிரிவு என்­பன மூலமும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

முல்­லே­ரியா நிலை­யத்தில் மாத்­தி­ர­மல்ல, நாட்டின் பெரும்­பா­லான பொலிஸ் நிலை­யங்­களில் பல்­வேறு வகை­யான முறைப்­பா­டுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். முறைப்பாடு செய்யச் செல்பவர்கள் மீது அகெளரவமாக பொலிஸார் நடந்து கொள்வது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்று முல்லேரியா பொலிஸ் நிலைய சம்பவம் மாத்திரமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொலிஸ் நிலையங்களில் பொறுப்பான பதவிக்கு வருபவர்கள் உரிய தகுதிகளைப் பெற்றுள்ளவர்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. நாட்டின் எந்தப் பிரஜைக்கும் அநீதி இழைக்கப்படுமாயின் விரைந்து செயற்படுங்கள் என்றே நாம் அவர்களுக்குக் கூற விரும்புகிறோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.