4/21 தாக்குதல் சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்: இம்ரான் எம்.பி

0 784

மத்­திய வங்கி கொள்­ளை­யர்­க­ளையும் உயிர்த்த ஞாயிறு சூத்­தி­ர­தா­ரி­க­ளையும் சிறை­யி­ல­டை­யுங்கள் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் கிண்­ணி­யாவில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்,

நாம் ஆட்­சிக்­கு­வந்து மறு­நாளே மத்­திய வங்கி கொள்­ளை­யர்­க­ளையும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­க­ளையும் சிறை­யி­ல­டைப்­போ­மெ­னக்­கூறி ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்­கத்தால் ஆட்­சிக்­கு­வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலை­யிலும் இது­பற்றி விசா­ர­ணை­கூட நடத்த முடி­ய­வில்லை. மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக கூறிய நிவா­ர­ணங்­களை வழங்க முடி­ய­வில்லை.

ஆனால் எமது அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்ட கர்ப்­பிணி தாய்­மார்­களின் கொடுப்­ப­னவை நிறுத்­தி­யுள்­ளார்கள், நாம் குறைத்த மருந்து பொருட்­களின் விலையை உயர்த்­தி­யுள்­ளார்கள், ஆட்­சிக்கு வந்­த­வுடன் நாம் வழங்­கிய சலு­கை­களை நிறுத்­தி­யுள்­ளார்கள்.

ஏன் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என கேட்டால் பாரா­ளு­மன்­றத்தில் எமக்கு பெரும்­பான்மை இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடி­ய­வில்லை என்­கி­றார்கள்.

நாங்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்­சியை கைப்­பற்­றிய போது எமக்கும் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை இருக்­க­வில்லை. பெரும்­பான்­மை­யின்­றியே அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்தோம். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் மகா­பொல புல­மை­ப­ரிசில் தொகையை அதி­க­ரித்தோம். நூறு நாள் திட்­டத்தில் பல அபி­வி­ருத்தி திட்­டத்தை முன்­னெ­டுத்தோம் என்­பதை நீங்கள் நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

ஆகவே, மீண்டும் மீண்டும் மக்கள் முன் பொய் கூறாமல் மத்­திய வங்கி கொள்­ளை­யர்­க­ளையும் உயிர்த்த ஞாயிறு சூத்­தி­ர­தா­ரி­க­ளையும் சிறை­யி­ல­டை­யுங்கள், விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­வ­தாக கூறிய இல­வச உரத்தை வழங்­குங்கள், அரச ஊழி­யர்­களின் சம்பளத்தை அதிகரியுங்கள், பட்டதாரிகளுக்கு வேலை வழங்குங்கள், மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள். இதற்கு நாம் மூன்றிலிரண்டல்ல அதற்கு மேலான ஆதரவையும் பாராளுமன்றத்தில் வழங்கத் தயாராகவுள்ளோம் என தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.