2020 ஹஜ் கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை

பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பு செயலாளர்

0 1,056

2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் கட்­டணம் பற்றி ஹஜ் குழு இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எந்தத் தக­வ­லையும் வெளி­யி­ட­வில்­லை­யெ­னவும் சமூக வலைத்­த­ளங்­களில் தவ­றான தக­வல்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­வ­தா­கவும் பொது மக்கள் அவற்றை நம்­ப­வேண்­டா­மெ­னவும் பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவின் முஸ்லிம் விவ­கா­ரங்­ளுக்­கான இணைப்புச் செய­லாளர் பர்சான் மன்சூர் தெரி­வித்தார்.

ஹஜ் குழு இவ்­வ­ருடம் மிகக்­கு­றை­வான ஹஜ் கட்­ட­ணத்தை நிர்­ண­யித்­துள்­ள­தாக சமூக வலைத்­த­ளங்­களில் பரப்­பப்­பட்டு வரும் வதந்­திகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

இவ்­வ­ருடம் ஹஜ் கட்­ட­ண­மாக 5 இலட்­சத்­துக்கும் குறை­வான தொகையை ஹஜ் குழு நிர்­ண­யித்­தி­ருப்­ப­தாக சமூக வலைத்­த­ளங்­களில் தவ­றான செய்தி பரப்­பப்­பட்டு வரு­கி­றது. இது உண்­மைக்கு மாறான தக­வ­லாகும்.

ஹஜ் குழு இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கட்­டணம் தொடர்பில் இது­வரை எந்த தீர்­மா­னங்­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. ஹஜ் கட்­டணம் உரிய கலந்து ரையா­டல்­களின் பின்பே தீர்­மா­னிக்­கப்­படும். அத்­தீர்­மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

எனவே, தற்போது பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.