அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இன்மை குறையே

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

0 896

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் எவரும் இல்­லா­ம­லி­ருப்­பது பெரும் குறை­யா­கவே இருக்­கின்­றது. அதனால் எதிர்­வரும் தேர்­தலில்பொது­ஜன பெர­மு­னவில் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பா­ளர்­களை வெற்­றி ­பெ­றச்­செய்ய முஸ்லிம் மக்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் 2015 பொதுத்­தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்றம் வந்­த­வர்­க­ளுக்கே அமைச்சுப் பொறுப்­புக்­களை வழங்கத் தீர்­மா­னித்­த­த­னாலே காதர் மஸ்தான் எம்.பிக்கு அமைச்சுப் பொறுப்­புக்கள் வழங்­கப்­ப­ட­வில்­லை­யென ராஜாங்க அமைச்­சரும் அர­சாங்க ஊடக பேச்­சா­ள­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார்.

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் இல்­லா­மையை போக்க எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ள­வுள்ள நட­வ­டிக்கை தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

முஸ்லிம் பிர­தி­நி­திகள் எவரும் அமைச்­ச­ர­வையில் இல்­லாமை பெரும் குறை­யா­கவே இருக்­கின்­றது.பொது­ஜன பெர­முன கட்­சியில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் இல்லை. அர­சாங்­கத்தில் இரண்டு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள். அவர்கள் இரு­வரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்­த­வர்கள். இருந்­த­போதும் அர­சாங்கம் ஆட்­சிக்­கு­வந்து இரண்டு மாதங்­களை நெருங்­கி­யி­ருக்­கின்ற நிலையில் முஸ்லிம் மக்­க­ளுக்கோ முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கோ எந்தப் பிரச்­சி­னை­யு­மின்றி, அவர்­களின் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ளோம்.

அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யைச்­சேர்ந்த பைஸர் முஸ்­த­பா­வுக்கு அமைச்­சுப்­பவி வழங்­கும்­போது அவர் அடுத்­து­வரும் பொதுத்­தேர்­த­லுக்குப் பின்னர் பெற்­றுக்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். அதே­போன்று 2015 பொதுத் தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்­த­வர்­க­ளுக்கே அமைச்சுப் பத­வி­களை வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­தது. அதனால் மன்னார் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் கடந்த தேர்­த­லிலே பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­னதால் அவ­ருக்கு எந்த அமைச்­சுப்­ப­த­வியும் வழங்க முடி­யா­த­நிலை ஏற்­பட்­டது. அதனால் அவரை மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழுத் தலை­வ­ராக நிய­மித்­தி­ருக்­கின்றோம்.

மேலும், 2010 மற்றும் அதற்கு முன்­னரும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்தில் எம்­முடன் அதி­க­மான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருந்­தனர். அவர்கள் அனை­வ­ருக்கும் அமைச்­சுப்­ப­த­விகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. அதனால் தற்போது அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் இல்லாத குறையை உணர்ந்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப முஸ்லிம் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.