தம்புள்ள, கலேவலை வைத்தியசாலைகளிலும் டாக்டர் ஷாபி சட்டவிரோத கருத்தடை செய்த குற்றஞ்சாட்டி: தம்புள்ளை நீதிமன்றில் புதிதாக இரு வழக்குகள்

சி.ஐ.டி. தாக்கல்; குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள் 76 பேரிடம் புதிய விசாரணைகளில் வாக்கு மூலம்

0 1,038

குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத் தடை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள டாக்டர் ஷாபி குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள வைத்­தியர் ஷாபி ஷிஹாப்­தீ­னுக்கு எதி­ராக தம்­புள்ளை நீதிவான் நீதி­மன்றில் மேலும் இரு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தி­ய­ராக ஷாபி ஷிஹாப்தீன் தம்­புள்ளை மற்றும் கலே­வலை வைத்­தி­ய­சா­லை­களில் கட­மை­யாற்­றி­ய­போது தாய்­மா­ருக்கு சட்­ட­வி­ரோ­த­மாக கருத்­தடை செய்­யப்­பட்­ட­தாகக் கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டுகள் சில­வற்றை மையப்­ப­டுத்தி இவ்­விரு வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­ட­தாக சி.ஐ.டியினர் நேற்று குரு­நாகல் நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.

வைத்­தியர் ஷாபி ஷிஹாப்தீன் விவ­காரம் குறித்த வழக்கு விசா­ர­ணைகள் நேற்று குரு­நாகல் பிர­தான நீதிவான் சம்பத் ஹேவா­வசம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போது இந்த விவ­கா­ரத்தின் மீள் விசா­ர­ணைகள் அல்­லது புதிய விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பா­க­வுள்ள சி.ஐ.டியின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரேரா மேற்­படி விட­யத்தை நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார்.

நேற்று விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­ன­போது பிணை­யி­லுள்ள வைத்­தியர் ஷாபி மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். அவர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நவ­ரத்ன பண்­டா­ரவின் கீழ் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான சிராஸ் நூர்தீன், பசன் வீர­சிங்க, சைனாஸ் அஹமட் உள்­ளிட்டோர் முன்­னி­லை­யா­கினர். விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரே­ராவின் தலை­மையில் சமூக கொள்ளை விசா­ர­ணைப்­பி­ரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சே­கர, பொலிஸ் பரி­சோ­தகர் மொஹான், கான்ஸ்­டபில் சில்வா உள்­ளிட்ட குழு­வினர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் ஆஜ­ரா­கினர். பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாய்மார் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மொஹான், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சானக உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழு ஆஜ­ரா­கி­யது. இந்­நி­லையில் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரேரா புதிய விசா­ர­ணைகள் தொடர்பில் விளக்­க­ம­ளித்தார்.

‘கனம் நீதிவான் அவர்­களே, கடந்த வருடம் டிசம்பர் 12 ஆம் திகதி நீதி­மன்றம் கொடுத்த உத்­த­ர­வுக்­க­மைய இந்த விவ­கா­ரத்தில் புதி­தாக ஆரம்­பத்­தி­லி­ருந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ளோம். இவ்­வி­சா­ர­ணை­களை நானே மேற்­பார்வை செய்­கின்றேன். இந்­நி­லையில் இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட அல்­லது இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து இந்த விசா­ர­ணை­களை நாங்கள் ஆரம்­பித்­துள்ளோம்.

அதன்­படி முதலில் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்றும் வைத்­தி­யர்கள், தாதி­யர்கள் என 76 பேரிடம் இது­வரை வாக்­கு­மூலம் பதிவு செய்­துள்ளோம். அத்­துடன் இதற்கு முன்னர் விசா­ரணை அதி­கா­ரி­களின் அவ­தானம் செலுத்­தப்­ப­டாத பிர­ச­வத்­துக்கு முன்­ன­ரான, பின்­ன­ரான ஆய்வு பிரிவில் சேவை­யாற்­று­வோ­ரி­டமும் வாக்­கு­மூ­லம்­பெற நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். இத­னை­விட 6 புதிய முறைப்­பா­டு­களும் எங்­க­ளுக்கு கிடைத்­துள்­ளன.

குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் 210/103 எனும் இலக்­கத்தின் கீழி­ருந்த டீ.எச்.டீ அட்­டையை மாற்றி நவ­சியாம் ப்ரியா என்­ப­வ­ரது குழந்­தையை விற்­பனை செய்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ளன. அந்த விசா­ரணை அறிக்கை சட்­டமா அதி­ப­ருக்கு மேல­திக ஆலோ­ச­னையை பெற்றுக் கொள்­வ­தற்­காக அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இதே­நேரம் இந்த விவ­கா­ரத்­தோடு இணைந்­த­தாக தம்­புள்ளை நீதிவான் நீதி­மன்­றுக்கு 82/2020, 83/2020 ஆகிய இலக்­கங்­களின் கீழ் இரு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. தம்­புள்ளை, கலே­வலை வைத்­தி­ய­சா­லை­களில் சந்­தே­க­நபர் சேவை­யாற்­றி­ய­போது சட்­ட­வி­ரோத கருத்­த­டைகள் அங்கும் இடம்­பெற்­ற­னவா என்­பதை உறு­தி­செய்ய கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய அந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

சந்­தே­க­நபர் ஷாபி ஷிஹாப்­தீனை முதலில் குரு­நாகல் பொலிஸ் நிலை­யத்தில் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­கா­ரியே கைது செய்­துள்ளார். அப்­போது அவரால் வைத்­தியர் ஷாபியின் வீட்­டி­லி­ருந்து சீ.சீ.ரி.வி. காணொ­லிகள் பதி­வாகும் டீ.வி.ஆர். உப­க­ர­ணமும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. பின்னர் அது மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக சீ.ஐ.டியி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது முன்­னைய விசா­ரணை அதி­கா­ரி­களால் சந்­தே­க­ந­ப­ருக்கு மீள ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அந்த டீ.வி.ஆர். உப­க­ரணம் எமது புதிய விசா­ர­ணை­க­ளுக்கு அவ­சியம் என்­பதால் அதனை எம்­மிடம் மீள ஒப்­ப­டைக்க சந்­தே­க­ந­ப­ருக்கு உத்­தி­ர­விட வேண்டும். (குறித்த கோரிக்­கையை ஏற்று எதிர்­வரும் 20 ஆம் திக­திக்குள் அந்த டீ.வி.ஆர் உப­க­ர­ணத்தை சீ.ஐ.டியில் ஒப்­ப­டைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.)

கடந்த மூன்றாம் திகதி சி.ஐ.டி பணிப்­பாளர் உள்­ளிட்ட விஷேட குழு­வினர் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வைத்­தி­ய­பீட பீடா­தி­ப­தியை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் 869 தாய்­மா­ரையும் தனித்­த­னி­யாக பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்தி சட்­ட­வி­ரோத கருத்­தடை அல்­லது மலட்டுத் தன்­மைக்கு அவர்கள் உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார்­களா என்­பதை கண்­ட­றிய முடி­யு­மென பீடா­தி­ப­தியால் கூறப்­பட்­டது. எனவே, பொருத்­த­மான பரி­சோ­த­னை­யொன்­றுக்கு பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாய்­மாரை உட்­ப­டுத்தி அது தொடர்பில் அறிக்கை சமர்­பிக்க கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வைத்­தி­ய­பீட பீடா­தி­ப­திக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரு­கிறோம். (குறித்த கோரிக்­கையும் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.)’ என உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரேரா மன்றில் கூறினார்.

இத­னை­ய­டுத்து ஷாபியின் சட்­டத்­த­ரணி நவ­ரத்ன பண்­டார தனது வாதங்­களை முன்­வைத்தார். ‘சி.ஐ.டி புதிய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாகக் கூறு­கி­றது. அப்­ப­டி­யானால் இதற்கு முன்னர் செய்த விசா­ர­ணை­களில் தவ­றுகள், பிழைகள் உள்­ளதை அவர்­களே ஒப்புக் கொண்­டுள்­ளனர். இந்த வழக்கு ஒரு விசித்­தி­ர­மான வழக்கு. சந்­தே­க­ந­பரை கைது செய்­த­பின்­னரே சாட்­சி­களைத் திரட்­டு­கின்­றனர். அப்­போதும் இப்­போதும் அதுவே நடக்­கி­றது. சி.ஐ.டி கோரும் டீ.வி.ஆரை வழங்க எந்த ஆட்­சே­ப­னை­களும் இல்லை.

சந்­தே­க­ந­பரின் பிணை நிபந்­த­னை­களில் ஒன்­றான ஒவ்­வொரு மாதமும் சி.ஐ.டி தலை­மை­ய­கத்தில் கையொப்­ப­மிட வேண்டும் என்ற நிபந்­த­னையில் சிறு மாற்­றத்தைக் கோரு­கின்றோம். அதா­வது, சந்­தே­க­ந­பரின் மனைவி, பிள்­ளைகள் அனை­வரும் தற்­போது கல்­மு­னையில் வசிக்­கின்­றனர். சிங்­கள மொழி மூலம் கல்வி கற்ற பிள்­ளைகள் தற்­போது தமிழ்­மொழி மூலம் கற்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான பின்­ன­ணியில் குடும்ப நிலை­மையை கருத்­திற்­கொண்டு சி.ஐ.டி. தலை­மை­ய­கத்தில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்குப் பதி­லாக சீ.ஐ.டியின் மட்­டக்­க­ளப்பு கிளை காரி­யா­ல­யத்தில் கையெ­ழுத்­திடும் வகையில் அந்த நிபந்­த­னையை திருத்த தரு­மாறு கோரு­கின்றோம்’ என்றார்.

எனினும், அந்தக் கோரிக்­கைக்கு நீதி­மன்றம் அனு­மதி வழங்­க­வில்லை. இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்பின் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மொஹான், சானக ஆகியோர் வாதங்­களை முன்­வைத்­தனர்.

இந்த விசா­ர­ணைகள் தற்­போதே சரி­யான பாதைக்கு வந்­துள்­ள­தா­கவும் இதற்கு முன்னர் சி.ஐ.டி. விசா­ரணை அதி­கா­ரிகள் மன்­றுக்குப் பல்­வேறு முரண்­பட்ட தக­வல்­க­ளையே முன்­வைத்­துள்­ளனர். சரி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் வைத்­தியர் ஷாபி கைது செய்­யப்­பட்ட போதிலும் பின்னர் அதி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்ளார். அது எவ்­வா­றென இது­வரை புரி­ய­வில்­லை­யென அவர்கள் மன்­றுக்குத் தெரி­வித்­தனர்.

இதன்­போது சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரேரா முன்­னைய விசா­ரணை அதிகாரிகள் மன்றுக்குத் தவறான அல்லது மறைக்கப்பட்ட தகவல்களை முன்வைத்திருப்பின் அது தொடர்பில் தனது ஆழ்ந்த கவலைகளை மன்றில் தெரிவிப்பதாகக் கூறினார்.

இதனையடுத்து வைத்தியர் ஷாபியின் சட்டத்தரணி நவரத்ன பண்டார, வைத்தியர் ஷாபி பயங்கரவாத தடை சட்டத்திலிருந்து உரிய முறையிலேயே விடுவிக்கப்பட்டதாகவும் அது தொடர்பில் உளவுத்துறைகள், பொலிஸார், முப்படைகளிடமிருந்து அறிக்கை பெற்ற பின்னரேயே அவர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை வழக்குப் பதிவுகளில் மிகத் தெளிவாக உள்ளது. மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகப் பேசி சந்தேகநபரின் பிணையை இரத்து செய்வதே பாதிக்கப்பட்டோரின் சட்டத்தரணிகளின் அவா என்றார்.

இந்நிலையில் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான், இது தொடர்பிலான விசாரணைகளுக்கு சி.ஐ.டியின் கோரிக்கைக்கமைய இரு மாதகால அவகாசம் வழங்கி வழக்கை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். -Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.