அழகாகப் பேசுங்கள், அழகானதைப் பேசுங்கள்

0 5,964

இறை விசு­வா­சி­களின் பேச்சில் உண்­மையும் அழகும் இருக்க வேண்டும், இத­யங்­களின் ஆழத்­தி­லி­ருந்து வரும் நேர்­மை­யான வார்த்­தை­க­ளா­கவும் அவை இருக்க வேண்டும், ஏனெனில்  உண்­மையும் நம்­ப­கத்­தன்­மையும் அழ­கான பேச்­சுக்­களும் ஓர் இறை­வி­சு­வா­சிக்­கான சிறந்த அடை­யா­ள­மாகும்.

நம்­பிக்கை கொண்­டோரே! அல்­லாஹ்­வுக்கு அஞ்­சுங்கள்! நேர்­மை­யான சொல்­லையே கூறுங்கள்! அல்­குர்ஆன் (33 : 70)

(முஹம்­மதே!) அழ­கி­ய­வற்­றையே பேசு­மாறு எனது அடி­யார்­க­ளுக்குக் கூறு­வீ­ராக! ஷைத்தான் அவர்­க­ளி­டையே பிளவை ஏற்­ப­டுத்­துவான். ஷைத்தான் மனி­த­னுக்குப் பகி­ரங்க எதி­ரி­யாவான்.

அல்­குர்ஆன் (17 : 53)

யாரேனும் கண்­ணி­யத்தை நாடினால் கண்­ணியம் யாவும் அல்­லாஹ்­வுக்கே உரி­யது. தூய சொற்கள் அவ­னி­டமே மேலேறிச் செல்லும். நல்­லறம் அதை உயர்த்தும். தீய காரி­யங்­களில் சூழ்ச்சி செய்­வோ­ருக்குக் கடு­மை­யான வேத­னை­யுண்டு. அவர்­களின் சூழ்ச்­சிதான் அழியும்.  அல்­குர்ஆன் (35 : 10)

அள­வற்ற அரு­ளா­ளனின், அடி­யார்­களின் பண்­புகள் குறித்து குர்ஆன் பேசும் போது பின்­வரும் சில முக்­கிய பண்­பு­களை அது எமக்கு சுட்­டிக்­காட்­டு­கி­றது.

வீணா­னதைப் புறக்­க­ணிப்­பார்கள். அல்­குர்ஆன் (23 : 3)

வீணா­ன­வற்றை அவர்கள் செவி­யுறும் போது அதை அலட்­சியம் செய்­கின்­றனர். ”எங்கள் செயல்கள் எங்­க­ளுக்கு உங்கள் செயல்கள் உங்­க­ளுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்­டா­கட்டும். அறி­வீ­னர்­களை விரும்ப மாட்டோம்” எனவும் கூறு­கின்­றனர். அல்­குர்ஆன் (28 : 55)

அவர்கள் பொய் சாட்சி கூற­மாட்­டார்கள். வீணா­ன­வற்றைக் கடக்­கும்­போது கண்­ணி­ய­மாகக் கடந்து விடு­வார்கள். அல்­குர்ஆன் (25 : 72)

உண்மை பேசுதல், அழ­கிய வார்த்­தை­களால் மக்­க­ளோடு உரை­யா­டுதல் என்ற அம்­சத்தை அள­வற்ற அரு­ளா­ளனின் அடி­யார்கள் கடைப்­பி­டிக்கும் அதே­வேளை உண்­மைக்குப் புறம்­பான வார்த்­தைகள், அறி­வீ­ன­மான செயல்­களை அவர்கள் அலட்­சியம் செய்­து­வி­டு­வார்கள் என்­ப­த­னையும் மேலுள்ள வச­னங்கள் எமக்கு தெளி­வு­ப­டுத்­து­கின்­றன.

உண்மை உரைத்தல், அழ­கிய வார்த்­தை­களை உப­யோ­கித்தல், நீதி நேர்­மை­யாகப் பேசுதல் என்ற உயர்ந்த குணங்­களின் சொந்­தக்­கா­ர­ராக எமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்­டி­யுள்­ளார்கள்,

அறி­யா­மைக்­கால மக்­கள்­கூட அதற்­கான சாட்­சி­யத்தை வழங்­கி­யுள்­ளார்கள்.

“(நபியே!) உங்­க­ளு­டைய நெருங்­கிய உற­வி­னர்­களை நீங்கள் எச்­ச­ரி­யுங்கள்” எனும் (26:214ஆவது) இறை வசனம் அருளப் பெற்­ற­போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக்­கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்­தாரே! பனூ அதீ குலத்­தாரே!” என்று குறைஷிக் குலங்­களை (பெயர் சொல்லி) அழைக்­க­லா­னார்கள். அவர்கள் அனை­வரும் ஒன்று கூடி­னார்கள். அங்கு வர­மு­டி­யாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்­து­வர (தம் சார்­பாக) ஒரு தூதரை அனுப்­பி­னார்கள். இவ்­வாறு அபூ­லஹப் உள்­ளிட்ட குறை­ஷியர் வந்­தனர். நபி (ஸல்) அவர்கள், “சொல்­லுங்கள்: இந்தப் பள்­ளத்­தாக்கில் குதிரைப் படை­யொன்று உங்கள் மீது தாக்­குதல் தொடுக்கப் போகி­றது என்று நான் உங்­க­ளுக்குத் தெரி­வித்தால், நான் உண்மை சொல்­வ­தாக என்னை நீங்கள் நம்­பு­வீர்­களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்­புவோம்); உங்­க­ளிடம் நாங்கள் உண்­மையைத் தவிர வேறெ­தையும் அனு­ப­வித்­த­தில்லை” என்று பதி­ல­ளித்­தனர்.. நபி (ஸல்) அவர்கள், “அப்­ப­டி­யென்றால், நான் கடும் வேத­னை­யொன்று எதிர் நோக்­கி­யுள்­ளது என்று உங்­களை எச்­ச­ரிக்­கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்­கையைச்) சொன்­னார்கள். (இதைக் கேட்ட) அபூ­லஹப், “நாளெல்லாம் (என்­றென்றும்) நீ நாச­மா­கு­வா­யாக! இதற்­கா­கவா எங்­களை ஒன்று கூட்­டினாய்?” என்று கூறினான். அப்­போ­துதான் “அபூ­ல­ஹபின் கரங்கள் நாச­மா­கட்டும்! அவனும் நாச­மா­கட்டும்” என்று தொடங்கும் (111ஆவது) அத்­தி­யாயம் அரு­ளப்­பெற்­றது.

அறி­விப்­பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4770

நபி (ஸல்) அவர்கள் மதீ­னா­வுக்கு வந்த வேளையில், “நபி (ஸல்) அவர்கள் வந்து விட்­டார்கள், நபி (ஸல்) அவர்கள் வந்து விட்­டார்கள்” என்று சொல்­லப்­பட்­டது. அப்­போது மக்­க­ளெல்லாம் அவர்­களை நோக்கி விரைந்­தார்கள். நானும் மக்­க­ளுடன் அவர்­களைப் பார்க்கச் சென்றேன். அவர்­களை அடை­யாளம் கண்டு கொண்டேன். அவர்­களின் முகம் பொய் சொல்லும் முக­மாகத் தெரி­ய­வில்லை என்­பதைப் புரிந்­து­கொண்டேன். “ஸலாத்தை பரப்­புங்கள், (பசித்­த­வ­ருக்கு) உண­வ­ளி­யுங்கள், மக்கள் உறங்கும் வேளையில் தொழுங்கள், மன அமை­தி­யுடன் சொர்க்கம் செல்­வீர்கள்” என்­பது தான் அவர்­கள் பேசிய முதல் பேச்­சாகும்.

அறி­விப்­பவர்: அப்­துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

நூல்: திர்­மிதீ 2409, இப்­னு­மாஜா 1323

அபூ­ஸுப்யான் அவர்­க­ளிடம் ஹிரக்ல் மன்னர் நபி­க­ளாரைப் பற்றி விசா­ரித்த போது அவர்­களின் நேர்­மைக்கும் உண்­மைக்கும் அவர் இஸ்­லாத்தை ஏற்­ப­தற்கு முன்பே சான்று பகர்ந்­தார்கள்.

“அவர் இவ்­வாறு (தம்மை இறைத்­தூதர் என) வாதிப்­ப­தற்கு முன் அவர் (மக்­க­ளிடம்) பொய் சொன்னார் என்று (எப்­போ­தேனும்) நீங்கள் அவரைச் சந்­தே­கித்­தி­ருக்­கின்­றீர்­களா?” என்று கேட்டார். நான் “இல்லை” என்றேன்.

“நான் உம்­மிடம் அவர் இவ்­வாறு (தம்மை இறைத்­தூதர் என) வாதிப்­ப­தற்கு முன்பு (அவர் மக்­க­ளிடம்) பொய் பேசினார் என்று எப்­போ­தேனும் நீங்கள் சந்­தே­கித்­த­துண்டா என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதி­ல­ளித்தார். இதி­லி­ருந்து மக்­க­ளிடம் பொய் பேசாத அவர் அல்­லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்­து­கொண்டேன்” என்று ஹிரக்ல் மன்னர் கூறினார். அறி­விப்­பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 7.

மிகச் சிறந்த உண்­மை­யா­ள­ராக திகழ்ந்த நபி­களார் உண்மை பேசுதல், அழ­கா­னதைப் பேசுதல் போன்­ற­வற்றை இறை விசு­வா­சத்­தோடு தொடர்­பு­ப­டுத்திக் கூறி­யுள்­ளார்கள். அத­னால்தான் யார் அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொள்­கி­றாரோ (ஒன்று) அவர் நல்­லதைப் பேசட்டும் அல்­லது வாய் மூடி இருக்­கட்டும் என்று இதனை வலி­யு­றுத்திக் கூறி­யுள்­ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்: “அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் தம் அண்டை வீட்­டா­ருக்கு தொல்லை தர­வேண்டாம். அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் தம் விருந்­தா­ளியைக் கண்­ணி­யப்­ப­டுத்­தட்டும். அல்­லாஹ்­வையும் மறுமை நாளையும் நம்­பிக்கை கொண்­டவர் (ஒன்று) நல்­லதைப் பேசட்டும். அல்­லது வாய் மூடி இருக்­கட்டும்.”

அறி­விப்­பவர் : அபூ­ஹு­ரைரா (ரழி)  நூல்: புகாரி (6018)

உண்­மை­யையும் நல்­ல­தையும் பேசுதல் இறை விசு­வா­சியின் உயர்ந்த பண்பு என்­பது போல அது அல்­லாஹ்­வுக்­காக அவன் செய்­கின்ற மிகப்­பெரும் தர்மம் என்றும் நபி­களார் எமக்கு கற்­றுத்­தந்­துள்­ளார்கள்.

அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள், “மக்கள் தமது மூட்­டுக்கள் ஒவ்­வொன்­றுக்­கா­கவும் சூரியன் உதிக்­கின்ற ஒவ்­வொரு நாளிலும் தர்மம் செய்­வது அவர்­களின் மீது கட­மை­யாகும். இரு­வ­ருக்­கி­டையே நீதி செலுத்­து­வதும் தர்­ம­மாகும். ஒருவர் தன் வாக­னத்தின் மீது ஏறி அமர (அவ­ருக்கு) உது­வு­வதும் தர்­ம­மாகும். அல்­லது அவ­ரது பயணச் சுமை­களை அதில் ஏற்றி விடு­வதும் தர்­ம­மாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்­ம­மாகும். ஒருவர் தொழு­கைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்­ம­மாகும். தீங்கு தரும் பொருளைப் பாதை­யி­ருந்து அகற்­று­வதும் ஒரு தர்­ம­மே­யாகும்.”

அறி­விப்­பவர் : அபூ­ஹு­ரைரா (ரழி)  நூல்: புகாரி (2989)

சுவ­னத்தை அடைந்­து­கொள்ள ஆசை வைக்கும் ஒவ்­வொ­ரு­வரும் தமது வாழ்க்­கையை இறை­யச்­சத்தின் மூலம் அலங்­க­ரித்துக் கொள்­வது எவ்­வாறு அத்­திய அவ­சி­ய­மா­னதோ அது போன்று தமது வார்த்­தை­க­ளையும் உண்­மையைக் கொண்டும் அழ­கான வார்த்தைப் பிர­யோ­கங்­களைக் கொண்டும் அலங்­க­ரித்துக் கொள்­வது அவ­சி­ய­மாகும், அத­னையே பின்­வரும் நபி­மொழி எமக்கு விளக்­கு­கின்­றது.

நான் நபி (ஸல்) அவர்­க­ளிடம் வந்து, “அல்­லாஹ்வின் தூதரே உங்­களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்­சி­ய­டை­கி­றது. எனது கண் குளிர்ச்­சி­ய­டை­கி­றது. எனக்கு அனைத்து பொருட்­களைப் பற்­றியும் சொல்­லுங்கள்” என்றேன். அதற்கு அவர்கள், “அனைத்தும் நீரி­லி­ருந்து படைக்­கப்­பட்­டுள்­ளன” என்று கூறி­னார்கள். “எந்த காரி­யத்தை நான் செய்தால் சொர்க்­கத்­திற்கு செல்­வேனோ அப்­ப­டிப்­பட்ட ஒரு காரி­யத்தை எனக்கு கற்­றுக்­கொ­டுங்கள்” என்று கூறினேன். “ஸலாத்தைப் பரப்பு, நல்ல பேச்சைப் பேசு. உற­வு­களை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்­தி­யுடன் சொர்க்­கத்தில் நுழைவாய்” என்று கூறி­னார்கள்.

அறி­விப்­பவர் : அபூ ஹுரைரா (ரழி), நூல் : அஹ்மத் (9996)

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்­தேனும் நர­கத்­தி­லி­ருந்து உங்­களைக் காப்­பாற்றிக் கொள்­ளுங்கள். அதுவும் இல்­லை­யானால் அழ­கான வார்த்­தையைக் கொண்­டா­வது (காப்­பாற்றிக் கொள்­ளுங்கள்)” என்­றார்கள்.

அறி­விப்­பவர் : அதீ பின் ஹாதிம் (ரழி), நூல் : புகாரி (6023)

உண்­மையும் நல்ல அழ­கான வார்த்தைப் பிர­யோ­கங்­களும் இறைவிசுவாசியின் அடையாளம், மிகச் சிறந்த தர்மம், சுவனம் செல்வதற்கான வழி என்பதனையும் தாண்டி அவை எங்களை நரகத்திலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்புக் கேடயங்களாகும், சாதாரண மனிதர்கள் இதனை தமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களது இம்மை மறுமை வெற்றிக்கு அது மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். எனினும் அழைப்பாளர்கள், அறிவைச் சுமந்தவர்கள் இதனை கடைப்பிடிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இதன் மூலமே இம்மை மறுமை வெற்றியுடன் மனிதர்களின் உள்ளங்களைக் கவர்ந்து அவர்களை அல்லாஹ்வை நோக்கி மிக இலகுவாக அழைக்க முடியும், அழைப்பாளர்கள் தமது அழைப்புப் பணியில் வெற்றிபெறுவதற்கான அடிப்படைபைப் பண்புகளுள் இதுவும் முக்கிய ஒன்றாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.