ஈரான்-அமெரிக்க மோதல்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலல்ல

இராணுவ தளபதி சவேந்திர சில்வா

0 692

ஈரான் – அமெ­ரிக்க மோதல் எவ்­வி­தத்­திலும் இலங்­கைக்கு அச்­சு­றுத்­த­லா­காது. அவ்­வாறு அழுத்­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணியும் இல்லை என்று இரா­ணுவத் தள­பதி லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா தெரி­வித்­துள்ளார்.
இலங்கை மிகச்­சி­றிய நாடு என்­பதால் சர்­வ­தேச பிரச்­சி­னை­களில் தலை­யி­டாது சுமு­க­மாக செயற்­ப­டு­வதே சிறந்த வழி என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வருட ஆரம்­பத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஏற்­பட்ட காட்­டுத்­தீயின் கார­ண­மாக பாதிப்­பிற்­குள்­ளான, உயி­ரி­ழந்த மிரு­கங்கள் மற்றும் நபர்­க­ளுக்­காகப் பிரார்த்­திக்கும் மத­வ­ழி­பாட்டு நிகழ்வு நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள அனைத்து பாது­காப்பு படைத் தலை­மை­ய­கங்கள், பயிற்சிப் பாட­சா­லைகள் போன்­ற­வற்றை உள்­ள­டக்கி செவ்­வாய்க்­கி­ழமை களனி ரஜ­ம­ஹா­வி­கா­ரையில் அதிஷ்­டான போதி பூஜை நிகழ்வு இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்வு பதில் பாது­காப்பு பிர­தா­னியும் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான லெப்­டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா தலை­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­வை­ய­டுத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த அவர்,

கேள்வி: அமெ­ரிக்க – ஈரான் மோதல்கள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளன. இதனால் அமெ­ரிக்­கா­வுடன் இலங்கை செய்து கொண்­டுள்ள ஒப்­பந்­தங்கள் மூலம் ஏதேனும் நெருக்­க­டிகள் ஏற்­ப­டுமா?

பதில்: இல்லை. அவ்­வாறு எந்த சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கைக்கு நெருக்­க­டிகள் ஏற்­ப­டாது. அவ்­வாறு ஏற்­ப­டு­வ­தற்கு ஏது­வான கார­ணி­களும் இல்லை.

கேள்வி: சுமார் 2 இலட்­சத்­துக்கும் அதி­க­ள­வான இலங்கை மக்கள் வெளி­நா­டு­களில் தொழில்­பு­ரி­கின்­றனர். அவ்­வாறு வெளி­நா­டு­களில் தொழில்­பு­ரி­ப­வர்­க­ளுக்கு ஏதேனும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டுமா ?

பதில்: சில நாடு­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளதால் வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­ப­வர்­களும் ஏதேனும் சிக்­கல்கள் ஏற்­ப­டலாம் என்ற நிலைமை ஏற்­பட்­டது. எனினும் உரிய நேரத்தில் அவை தீர்க்­கப்­பட்­டுள்­ளன. மேலும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­மென்று நாம் எண்­ண­வில்லை. எமது நாடு மிகச் சிறி­யது. எனவே நாம் எந்தப் பிரச்­சி­னை­க­ளிலும் தலை­யி­டாது சுமுகமாக செயற்பட வேண்டும்.

கேள்வி: ஈரான் – –அமெரிக்க மோதலால் இலங்கைக்கு ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமா?

பதில் : ஈரான் –- அமெரிக்க மோதல் இலங்கைக்கு எவ்விதத்திலும் அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ ஏற்படுத்தாது என்றார்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.