உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள்: விசாரணைகள் குறித்து அரசாங்கம் பராமுகம்

ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

0 896

உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்­களை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு ஆட்­சிக்­கு­வந்த அர­சாங்கம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் குறித்து பரா­மு­கத்­தோ­டி­ருப்­ப­தாக ஐக்­கிய தேசி­யக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

அர­சாங்கம் ஆட்­சிக்­கு­வந்து இரண்டு மாதம் கடந்­துள்ள நிலையில் தேர்­த­லின்­போது வழங்­கிய எந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றி­யுள்­ள­தென்று ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பில் இவ்­வாறு தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,
ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்கு உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­கு­தல்கள் பெரிதும் சாத­க­மா­கி­யி­ருந்­தன. தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது தாக்­கு­தலை பெரிதும் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தனர். இதன்­போது தாக்­கு­த­லுடன் இவர்­க­ளுக்கும் தொடர்­புள்­ளதா என்­பது குறித்தும் பலர் சந்­தேகம் எழுப்­பி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் தாம் ஆட்­சிக்­கு­வந்து இரு மாதத்­திற்குள் தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக பல செயற்­றிட்­டங்­களை மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்­தனர். பேராயர் கர்­தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை­யு­டனும் இவர்கள் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் இவர்கள் ஆட்­சிக்­கு­வந்து இரண்டு மாத­கா­ல­மா­கி­யுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 வரு­டங்­க­ளுக்கு குத்­த­கைக்கு ஒப்­ப­டைப்­ப­தற்­காக கடந்த அர­சாங்கம் எடுத்த தீர்­மா­னத்­திற்குப் பெரிதும் எதிர்ப்புத் தெரி­வித்து வந்­தனர். ஆனால் ஷங்­ரில்லா ஹோட்­ட­லுக்கு அரு­கி­லி­ருந்த நிலத்தை இவ்­வாறு ஒப்­ப­டைக்க தீர்­மா­னித்­துள்­ளனர். அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்­கத்தின் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான வாசு­தேவ நாண­யக்­கார மற்றும் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­தையும் அவ­தா­னிக்­க­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

முல்­லைத்­தீவு -– குருக்­கந்த பகு­தியில் அமைந்­துள்ள ஆலயம் தொடர்பில் கடந்த தினங்­களில் பெரிதும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி வந்த அர­சாங்கம் இன்­றைய தினம் (நேற்று) அங்கு பொங்கல் விழாவை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதுவே எமது அர­சாங்­கத்தின் ஆட்­சியின் போது இடம்­பெற்­றி­ருந்தால் எங்­களை இன­வா­தி­க­ளா­கவும் , பௌத்த மதத்­திற்கு எதி­ரி­க­ளா­கவும் சித்­தி­ரித்­தி­ருப்­பார்கள்.

காட்டு யானையால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் யானை வேலி அமைத்­து­த­ரு­மாறு கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். அர­சாங்கம் அவர்­க­ளுக்கு துப்­பாக்­கி­களை பெற்றுக் கொடுக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

இதுதான் இந்த அர­சாங்­கத்தின் தீர்­வு­காணும் முறை. அமைச்சர் எஸ்.எம். சந்­தி­ர­சே­னவே இவ்­வாறு தீர்­மானம் எடுத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இவர்தான் மணல் மற்றும் மண்ணை ஏற்றிச் செல்­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தையும் இரத்து செய்­தவர். இவரின் இந்த செயலால் சூழல் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், கிரா­மப்­ப­கு­தி­களில் கன­ரக வாக­னங்­களை கொண்டு சென்று மணல் மற்றும் மண் ஏற்றிச் செல்­லப்­ப­டு­கின்­றன. இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்டிருந்த கிராமப்புறப் பாதைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோத்தாபயவின் வெற்றிக்கு அவரிடம் பெரிதும் இணைந்திருந்த ஒரு சிலருக்கு சாதகமான விடயங்கள் கிடைத்திருந்தாலும் , மத்தியதர வகுப்பினருக்கு எவ்வித நலனும் கிடைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்த்து கவலையடைந்தே உள்ளனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.