மாவனெல்லை புத்தர் சிலை விவகாரம்: விசாரணைகளில் அசாத்சாலி அழுத்தங்கள் பிரயோகித்தார்

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர்

0 1,014

மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்­பான விசா­ர­ணை­க­ளின்­போது மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பொலிஸ் விசா­ர­ணை­க­ளுக்கு அழுத்­தங்கள் பிர­யோ­கித்­த­தாக ஓய்வு பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சிறி­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

இர­க­சிய பொலிஸார் கடந்த 11 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ்மா அதி­ப­ரிடம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் வாக்­கு­மூ­ல­மொன்­றினைப் பதிவு செய்­தனர். அது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார். முன்னாள் பிரதி பொலிஸ்மா அதி­ப­ரிடம் 4 மணி­நேரம் வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தடுத்துக் கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் இருந்தும் அத்­தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாமை தொடர்­பாக முக்­கி­ய­மான தக­வல்­களை விசா­ர­ணையின் போது தான் வெளி­யிட்­ட­தா­கவும் அவர் கூறினார்.

இர­க­சியப் பொலிஸ் பெண் பொலிஸ் பரி­சோ­தகர் கடந்த 11 ஆம் திகதி காலை 10 மணிக்கு தனது வீட்­டுக்கு வந்து பிற்­பகல் 2.30 மணி வரை வாக்­கு­மூலம் பதிவு செய்­த­தா­கவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரி­விக்­கையில் மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் தற்­போது நடை­பெற்று வரும் விசா­ர­ணைகள் சம்­பந்­த­மா­கவும் என்­னிடம் வாக்­கு­மூலம் பெறப்­பட்­டது என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்ற காலத்தில் சிறி­வர்­தன கேகாலை மாவட்­டத்­துக்கும் பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதி­ப­ராகக் கட­மை­யாற்­றினார்.

மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் எனக்கு கீழ் இயங்­கிய பொலிஸ் குழு ஒன்றின் மூலமே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அப்போதே பொலிஸ் விசாரணைகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தார் என்றும் கூறினார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.