அமெரிக்க – ஈரான் மோதலால் இலங்கையின் பாதுகாப்பிற்கு சிக்கல்
அரசு ரஞ்சன் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்கிறார் சஜித்
அரசு ரஞ்சன் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்கிறார் சஜித் பிரச்சினையாகி விட்டதென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹோமாகம பிரதேசத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
ஈரானும் அமெரிக்காவும் பாரதூரமான மோதலொன்றுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. இவ்விரு நாடுகளுக்குமிடையில் மோதல்கள் ஏற்பட்டால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து யாரும் கவனம் செலுத்தவில்லை. இதைவிட முக்கியமாக ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா – ஈரானுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல்களால் தோன்றியுள்ள சர்வதேச ஸ்திரமற்ற தன்மையால் யுத்தம் ஏற்படுமாக இருந்தால், இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரதூரமான நெருக்கடிகள் ஏற்படக்கூடும்.
இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான மோதலினால் சர்வதேசத்தில் எரிபொருள் விலை அதிகரித்த போக்கினை காண்பிக்கிறது. இவ்வாறான நிலையில் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற விலைக்கே தொடர்ந்தும் எரிபொருட்களை விநியோகிக்க முடியுமானால் அது வரவேற்கத்தக்க விடயமாகும்.
மாறாக, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் பாதிக்கப்படப் போவது சாதாரண பொதுமக்களேயாவர். மேற்குலக நாடுகளில் பணிபுரிபவர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கைப் பெறும் அந்நிய செலாவணி மூலம் வருமானத்தை ஈட்டித்தருகின்றனர். அவர்களுடைய தொழிலுக்கு பாதுகாப்பற்ற தன்மை ஏற்பட்டால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர்.
அவ்வாறு ஏதேனும் நடைபெற்றால் அதனை ஈடுசெய்வதற்கு எம்மால் எடுக்கப்படக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? அதற்கான மாற்று வழிமுறை என்ன? இவைபற்றி இதுவரையில் அரசாங்கத் தரப்பில் எந்தப் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவில்லை? ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளே அதற்கான பிரதான காரணம்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு, எரிபொருள் பிரச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றைவிட இன்று ரஞ்சனின் தொலைபேசி அழைப்புக்களே அரசாங்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் காணப்படுகிறது என்றார். -Vidivelli