பாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா? சதி நாசவேலையா?

0 1,032
  • ஏ.எல்.எம்.சத்தார்

இந்நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் வகையில் பேரி­ன­வா­தி­களால் 1915ஆம் ஆண்­டி­லி­ருந்து நாச­கார வேலைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து காலத்­துக்குக் காலம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டே வந்­தன. கடந்த இரு தசாப்­தங்­க­ளாக இத்­த­கைய வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள் உக்­கி­ர­ம­டைந்­தன.

முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை மட்டம் தட்­டு­வதே இன­வா­தி­களின் குறி­யாக இருந்­தது. இதற்­காக சிறு­சிறு நொண்­டிக்­கா­ர­ணங்­களை முன்­வைத்து வர்த்­தக நிலை­யங்­களைத் தாக்கி கொள்­ளை­ய­டித்தும், தீக்­கி­ரை­யாக்­கியும் நாச வேலை­களைச் செய்து வந்­தனர். மஹிந்த ஆட்­சிக்­கா­லத்தில் இன­வா­திகள் ஊட்டி வளர்க்­கப்­பட்டு சிறு­பான்­மைக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் வளர்ச்சி கண்­டன.

2015 இல் மைத்­தி­ரி–­ரணில் ஆட்­சியில் ஆரம்­பத்தில் இன­வன்­மு­றைகள் சற்று ஓய்வு கண்­டன. நாள­டைவில், பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குத் தீ வைத்தல் என்­பன ஆங்­காங்கே அவ்­வப்­போது தொடர்ந்­தன. நாச­கா­ரி­க­ளது கைவ­ரி­சையும் ஓங்­கவே செய்­தன.

காலி கிந்­தோட்­டையில் ஆரம்­பித்து அம்­பா­றையில் ஊடு­ருவி கண்டி திக­னயில் மேலும் விஸ்­வ­ரூபம் எடுத்­தன. இந்த அடா­வ­டித்­த­னங்கள் முஸ்­லிம்—­சர்­வ­தேச நாடு­களில் எல்லாம் வைர­லா­கி­யதன் விளை­வாக வன்­முறை சூத்­தி­ர­தா­ரிகள் இனம் காணப்­பட்டு கைது செய்­யப்­பட்­டனர். இவர்­க­ளுக்­குள்­ளேயும் மஹிந்த தரப்­பி­னரும் இன­வாத அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­க­ளுமே அடங்­கியிருந்தனர். அதனால் வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் யார் என்­பதும் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

இது இவ்­வா­றி­ருக்­கையில் அண்­மைக்­கா­லங்­க­ளாக ஒரு­சில பகு­தி­களில் அவ்­வப்­போது முஸ்லிம் வர்த்­தகக் கடைகள் இனம் தெரி­யா­த­வாறு தீப்­பி­டித்­தெ­ரிந்து நாசத்­திற்­குள்­ளாகும் சம்­பங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. மின்­சாரக் கசி­வு–­ஒ­ழுக்­கினால் நிகழ்ந்த விளை­வுகள் என்று இந்த சம்­ப­வங்­க­ளுக்கு சாக்­குப்­போக்குத் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வாறு பல கடைகள் அழிந்-து குற்­று­யி­ராகிப் போயுள்­ளன. மின்­சாரக் கசிவு முஸ்லிம் கடை­களை மாத்­திரம் பார்த்­துத்­தானா ஏற்­ப­டு­கின்­றன என்ற சந்­தேகம் பல­ராலும் தெரி­விக்­கப்­ப­டு­வதைக் காணவும் முடி­கி­றது.

இந்­நி­லை­யி­லேயே கடந்த 25 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 8.30 மணி­ய­ளவில் பாணந்­துறை நகரில் நான்கு முஸ்லிம் கடைகள் பற்றி எரிந்து சாம்­ப­லா­கி­யுள்­ளன.

பாணந்­துறை நகரின் பிர­தான வீதியில் தொடர்­வ­ரி­சையில் அமைந்­துள்ள நான்கு கடை­கள்தான் இவ்­வாறு தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன அல்­லது தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன. இதே கடை­வ­ரி­சையில் சுமார் 50 மீட்­டரில் நகர ஜும் ஆப் பள்­ளியும் அமையப் பெற்­றுள்­ளது. சுமார் ஒரு வரு­டத்­திற்கு முன்னர் இன­வா­தி­களால் பெற்றோல் குண்­டெ­றி­யப்­பட்டு இப்­பள்­ளியும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தது.

அன்­றைய கட்­டதில் குரு­நாகல், கொழும்பு, தெஹி­வளை உள்­ளிட்ட இடங்­க­ளிலும் இதே பாணி­யி­லான தாக்­குதல் நடத்தி பள்­ளிகள், கடைகள் சேத­மாக்­கப்­பட்ட நிலையில் கண்­கா­ணிப்புக் கமெ­ராவின் உத­வியில் ஒரு சில நாச­கார சூத்­தி­ர­தா­ரிகள் கைது­செய்­யப்­பட்­டனர். இவர்­களில் பாணந்­துறைப் பகு­தியைச் சேர்ந்த பிக்கு ஒரு­வரும் அடங்­கு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வாறு குரு­நாகல் பள்ளித் தாக்­குதல், தெஹி­வளை ஹார்கோர்ட் பாமஸி தீவைப்பு உள்­ளிட்ட சம்­ப­வங்­க­ளுக்கு உடந்­தை­யா­ன­வர்கள் என்று கைது செய்­யப்­பட்­டோ­ருக்கு என்ன நடந்­துள்­ளது என்­பது கூட மூடி மறைக்­கப்­பட்டே வந்­துள்­ளது.

இவர்­க­ளது விட­யத்தில் எமது பாது­காப்பு நீதித்­துறை விடும் நழுவல் போக்கே இன­வா­திகள் தொடர்ந்தும் தம் அடா­வடிச் செயல்­களை  முன்­னெ­டுத்துத் தொடர வழி­வ­குத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

இந்தப் பின்­ன­ணி­யி­லேதான் இன்று பாணந்­து­றையில் நான்கு கடை­களும் பற்றி எரிந்­தி­ருப்­பது இத்­த­கை­யோரின் செயல் என்றே பெரும்­பாலும் ஊகம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எரிந்து முற்­றா­கவே அழி­வுக்­குள்­ளா­கி­யுள்ள கடை­களின் சேத நஷ்டம் பல­கோடி ரூபா என மதிப்­பீ­டுகள் தெரி­விக்­கின்­றன.

மின்­ஒ­ழுக்கு என்று பொது­வாகக் கூறப்­பட்ட போதிலும் குறிப்­பிட்ட கடைகள் மூடும்­போது வழ­மை­போன்று மின் இணைப்பை செய­லி­ழக்கச் செய்­து­விட்டே சென்­றுள்­ள­தாக கடை உரி­மை­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன் சம்­பவம் நிகழ ஆரம்­பித்து சுமார் ஒரு மணி­நே­ரத்­திற்குப் பின்­னரே அயல் ஊர் மன்­றங்­களைச் சேர்ந்த தீய­ணைப்புப் பிரி­வினர் ஸ்தலத்­திற்கு வந்­துள்­ளனர். இதற்குள் கடைகள் எரிந்து தீர்ந்­துள்­ளன. அத்­துடன்  தீயும் வேக­மாகப் பற்­றி­ய­துடன் நான்கு கடை­களும் குறு­கிய நேரத்­திற்குள் பற்றி எரிந்­துள்­ள­மை­யி­னாலும் விரைந்து எரியும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டனவா என்ற சந்­தேகம் தெரி­விப்­ப­டு­கின்­றது.

மேலும் பற்றி எரிந்­துள்ள விதத்­திலும் மின்­னொ­ழுக்­காக இருக்­க­மாட்­டாது என்றே பலரும் ஊகம் தெரி­விக்­கின்­றனர்.

சம்­ப­வத்தைக் கேள்­வியுற்­ற­துடன் அமைச்சர் பைஸர் முஸ்­தபா பாணந்­து­றையில் கடைகள் பற்­றி­யெ­ரிந்த இடத்­திற்கு நேர­டி­யாக வந்து நிலை­மை­களைக் கண்­ட­றிந்தார். சம்­பந்­தப்­பட்ட கடை­களின் உரி­மை­யா­ளர்­க­ளுடன் விப­ரங்­களைக் கேட்­ட­றிந்து ஆறுதல் கூறி­யுள்ளார்.

பாணந்­துறை தெற்கு பொலி­ஸா­ருக்கு பார­பட்­ச­மற்ற விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கும்­படி கேட்­டுக்­கொண்­டுள்ளார். இவ­ரது இக்­கோ­ரிக்கை மூலமும் இச்­சம்­பவம் மின் ஒழுக்­கினால் விளைந்­த­தல்ல என்­ப­தையே வெளிப்­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது.

அத்­துடன் இது விட­ய­மாக மக்கள் அவசரப்பட்டு ­ந­ட­வ­டிக்­கை­களில் இறங்க வேண்டாம் எனவும் முஸ்லிம் சமூ­கத்தை அவர் கேட்டுக் கொண்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நா­சத்தின் விளை­வாக நான்கு கடை உரிமையாளர்களும் பல கோடி ரூபாவை இழந்துள்ளமை ஒரு புறமிருக்க, வருட இறுதியில் நத்தார் பண்டிகையைத் தொடர்ந்து கிறிஸ்தவப் புதுவருடம் பின்னர் தமிழர் சிங்களப் புத்தாண்டு என்று வர்த்தகம் களைகட்டும் இச்சந்தர்ப்பம் பார்த்து வர்த்தகம் முடக்கப்பட்டுள்ளமையும் மற்றொரு பாரிய இழப்பாகும்.

அத்துடன் அன்றாட உழைப்பிலும் மண்விழுந்து குடும்ப பொருளாதாரத்திலும் பாரிய அடி விழுந்துள்ளதாகவே கூறலாம்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பாணத்துறை நோலிமிட் நிறுவனம் எரிந்து பலத்த சேதத்திற்குள்ளானது. அது பற்றியும் இதுவரை முறையான காரணிகள் கண்டறியப்படவில்லை. குறித்த நிலையம் நான்கு வருடங்களின் பின்னர் புனரமைக்கப்பட்டு மீண்டும் எழுந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எது எப்படிப் போனாலும் இச்சம்பவம் குறித்து சரியான காரணியைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் இது நாசகார நடவடிக்கையாயின் இத்தகைய செயற்பாடுகள் இதர பகுதிகளிலும் இடம்பெறாது முற்றுப்புள்ளி வைக்கலாம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.