நெலுந்தெனிய, உடுகும்புறவில்: பள்ளி வளாகத்தில் புத்தர் சிலை வைத்த விவகாரத்திற்கு தீர்வு

0 1,033

கொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்ட விவ­காரம் வரக்­கா­பொல நீதிவான் நீதி­மன்­றத்தில் சுமு­க­மாகத் தீர்த்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு வைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலையை அகற்­று­வ­தில்­லை­யெ­னவும் பள்­ளி­வாசல்வளா­கத்­துக்கும் புத்­தர்­சி­லைக்­கு­மி­டையில் மதில் ஒன்­றினை அமைத்துக் கொள்­வ­தற்கும் முஸ்­லிம்கள் இணக்கம் தெரி­வித்­தனர். முஸ்­லிம்கள் தாம் நீண்­ட­காலம் பெரும்­பான்மை இனத்­த­வ­ருடன் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தா­கவும் இவ்­வி­வ­கா­ரத்­தினால் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­வதை விரும்­ப­வில்லை எனவும் தெரி­வித்­தனர்.

அதற்­கி­ணங்க புத்தர் சிலை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­றப்­ப­ட­மாட்­டாது. புத்தர் சிலைக்கும் பள்­ளி­வாசல் வளா­கத்­துக்­கு­மி­டையில் மதில் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­படும் என வரக்­கா­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார்.

இவ்­வி­வ­காரம் தொடர்­பாக நேற்று முன்­தினம், நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் உட்­பட நிர்­வா­கிகள், அப்­ப­கு­தியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்­த­கர்கள் உட்­பட முஸ்­லிம்கள், மாற்றுத் தரப்பின் சார்பில் அப்­ப­கு­தியைச் சேர்ந்த தலைமை பெளத்த குரு உட்­பட பெரும்­பான்மைச் சமூ­கத்­தினர் வரக்­கா­பொல நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

நீதி­மன்றில் இரு தரப்­பி­னரும் இவ்­வி­வ­கா­ரத்தை சுமு­க­மாகத் தீர்த்­துக்­கொள்­வ­தெ­னவும், புத்தர் சிலையை அகற்­று­வ­தில்லை எனவும் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தனர். முஸ்­லிம்கள் பொறுமை காத்து இணக்­கப்­பாட்­டுக்கு வந்து பெரும்­பான்மைச் சமூ­கத்தின் உணர்­வு­க­ளுக்கு இட­ம­ளித்­த­மைக்கு வரக்­கா­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி நன்­றி­களைத் தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 2 மணிக்கு இடம்­பெற்­றது. புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­ப­கு­தியில் பதற்ற நிலை நில­வி­யது. வரக்­கா­பொல மற்றும் கேகாலை பொலிஸார் அங்கு பாது­காப்பு கட­மை­களை முன்­னெ­டுத்­தனர்.

இரு தரப்­பி­ன­ருக்கும் இடையில் இணக்­கப்­பா­டொன்­றினை ஏற்­ப­டுத்தி பிரச்­சி­னையை சுமு­க­மாக தீரப்­ப­தற்கு பொலிஸார் முயற்­சித்தபோதும் அது பல­ன­ளிக்­க­வில்லை. பெரும்­பான்மை சமூ­கத்­தினர் புத்தர் சிலையை அங்­கி­ருந்து அகற்­றிக்­கொள்­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­தனர். இதனையடுத்தே வரக்காபொல பொலிஸார் இவ்விவகாரத்தை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்வதற்குத் தீர்மானித்தனர்.

வரக்காபொல நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் 8 ஆம் திகதி இரு தரப்பினரையும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீதிவான் மேலதிக விசாரணையை ஜூலை 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.