ஈரான் வெளிநாட்டமைச்சருக்கு அமெரிக்கா செல்வதற்கு அனுமதி மறுப்பு

0 874

ஈரானின் உயர்­மட்ட ஜெனரல் கொல்­லப்­பட்டமை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையில் உரை­யாற்­று­வ­தற்­காக ஈரானின் வெளி­நாட்­ட­மைச்சர் ஜவாட் ஸாரிப் அமெ­ரிக்­கா­வினுள் நுழை­வ­தற்கு ஜனா­தி­பதி ட்ரம்பின் நிர்­வாகம் அனு­மதி மறுத்­துள்­ள­தாக பொரின் பொலிசி சஞ்­சிகை கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்­ளது.

விட­யத்­தோடு தொடர்­பு­டைய இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி வெளி­யி­டப்­பட்ட இத்­த­க­வலில் வியா­ழக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள பாது­காப்பு சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­று­வ­தற்­காக சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஸாரிப் விசா­வுக்­கான கோரிக்கை விடுத்­தி­ருந்தார். எனினும், அக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தெனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபையின் விவ­கா­ரங்­களைக் கையாள்­வ­தற்கு வெளி­நாட்டு அதி­கா­ரிகள் அமெ­ரிக்­கா­வினுள் அனு­ம­திக்­கப்­பட வேண்­டு­மென்ற 1947 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மை­யக உடன்­பாட்டின் ஏற்­பா­டு­களை மீறு­வ­தாக இச்­செ­யற்­பாடு அமைந்­துள்­ள­தாக அமெ­ரிக்க செய்திப் பிர­சுர நிலையம் தெரி­வித்­துள்­ளது.

பக்தாத் சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யேறிக் கொண்­டி­ருந்­த­போது அமெ­ரிக்க ஆளில்லா விமா­னத்தின் மூலம் ஈரா­னிய படைத்­த­ள­பதி சுலை­மானி மற்றும் ஈராக்கின் பரா இரா­ணுவத் தலைவர் அபூ மஹ்தி அல்-­மு­ஹாந்திஸ் ஆகியோர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொல்­லப்­பட்­டனர்.

இதனைத் தொடர்ந்து கூர்­மை­ய­டைந்­துள்ள அமெ­ரிக்க–ஈரான் பதற்றநிலை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பினால் கொலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் வியாழக்கிழமை கூட்டம் தெஹ்ரானின் உயர்மட்ட இராஜதந்திரிக்கு சர்வதேச சமூகத்துடன் நேரடியாக உரையாற்றுவதற்கான சந்தர்ப்பமாக அமைந்திருந்தது எனவும் பிரசுர நிலையம் தெரிவித்துள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.