சரத் பொன்சேகா கூறியது தவறு

கண்டிக்கிறார் ஹரீஸ்

0 649

நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்­லிம்­களில் கடந்­த­கா­லத்தில் சுமார் 200 க்குட்­பட்ட முஸ்­லிம்­களே தீவி­ர­வா­தி­க­ளென்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டார்கள். இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் தீவி­ர­வா­திகள் போன்று கரு­து­வதும், முஸ்­லிம்கள் புல­னாய்வுப் பிரிவின் உயர்­ப­த­வியில் இருக்­கக்­கூ­டாது என்­பதும் கண்­டிக்­கத்­தக்­க­தாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும், அக்­கட்­சியின் பிரதித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

புல­னாய்வுப் பிரிவின் முக்­கிய பத­வியில் முஸ்லிம் ஒரு­வரை நிய­மித்­துள்­ள­மைக்கு பாரா­ளு­மன்­றத்தில் தனது உரை­யின்­போது சரத் பொன்சேகா எதிர்ப்பு வெளி­யிட்­டமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் ‘விடி­வெள்­ளி’க்கு இவ்­வாறு கருத்து வெளி­யிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், முஸ்லிம் சமூகம் தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­துகள் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட போது 90 வீத­மான முஸ்­லிம்கள் அவரை ஆத­ரித்து வாக்­க­ளித்­தார்கள். அவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக பத­வியில் இருந்த காலத்தில் தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டிப்­ப­தற்­கான அவ­ரது நகர்­வு­களில் தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களின் தமிழ் மொழி மூல­மான உரை­யா­டல்­களை ஒட்­டுக்­கேட்­ப­தற்கு முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பொலி­ஸாரும், உளவுப் பிரிவு அதி­கா­ரி­களும் பெரிதும் உத­வி­யி­ருக்­கி­றார்கள்.

யுத்­தத்தை முடிப்­ப­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் பக்­க­ப­ல­மாக இருந்­துள்­ளன என்­பதை சரத் பொன்­சேகா போன்­ற­வர்கள் மறந்­து­வி­டக்­கூ­டாது.

200 முஸ்­லிம்கள் தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­மைக்கு முழு முஸ்லிம் சமூ­கமும் பொறுப்­பா­ன­தல்ல. இவ்­வா­றான நிலையில் நாட்டில் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவும் செயற்­பட்ட முஸ்­லிம்­களை, அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய முஸ்­லிம்­களை குற்றம் சுமத்­து­வதும் அவர்கள் பாது­காப்பு பிரிவில் உயர்­ப­த­வியில் இருக்­கக்­கூ­டாது எனத் தெரி­விப்­பதும் கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

யுத்த காலத்தில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பலர் புலி­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்த வர­லாறு உள்­ளது. அவர்கள் பலரைக் காட்­டிக்­கொ­டுத்த சம்­ப­வங்­களும் உள்ளன. அச்சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த மக்களும் அவர்களைச் சந்தேகித்ததில்லை. முதற்தடவையாக சரத் பொன்சேகாவே இவ்வாறு இனவாத கருத்துகளைக் கூறி ஒரு சமூகத்தை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளார். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.