ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் அதிகரித்த கையடக்க தொலைபேசி பாவனை

0 2,263

21ஆம் நூற்­றாண்டின் தலை­சி­றந்த கண்­டு­பி­டிப்­பாக கைய­டக்க தொலை­பே­சிகள் திகழ்­கின்­றன. கைய­டக்க தொலை­பே­சிகள் இன்றி ஒரு நாளை கடத்­து­வதும் பாரிய சவா­லா­கவே இருக்­கின்­றது. ஏனெனில் எமது வாழ்வின் அன்­றாட தேவை­களும் வேலை­களும் கைய­டக்கத் தொலை­பே­சி­களை மைய­மாகக் கொண்டே ஆற்­றப்­ப­டு­கின்­றன. ஆயினும் இத்­த­கைய பய­னுள்ள தொழில்­நுட்ப சாதனம் எமது வாழ்வின் ஆரோக்­கி­யத்தை பாதிக்­கின்­றது என்றால் நம்­பு­வது சற்று கடி­னமே. ஆனாலும் அது தான் உண்மை.

இலங்கை சுகா­தார மேம்­பாட்டு பணி­ய­கத்தின் வைத்­திய அதி­காரி வைத்­தியர் லசந்த விஜே­சே­கர தொலை­பே­சி­களால் ஏற்­ப­டு­கின்ற சுகா­தார சீர்­கே­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், அதி­க­மான தொலை­பேசி பயன்­பாடும் ஆரோக்­கி­யத்தை பாதிப்­ப­துடன் அத்­த­கைய பழக்கம் உற­வுகள் மற்றும் நண்­பர்கள் இடை­யி­லான தொடர்­பா­டலைப் பாதிக்­கி­றது எனவும் குறிப்­பிட்டார்.

2011 ஆம் ஆண்­டிற்­கான உலக சுகா­தார நிறு­வ­னத்தின் கணக்­கெ­டுப்பின் படி உல­க­ளா­விய ரீதியில் ஐந்து பில்­லியன் கைய­டக்க தொலை­பே­சிகள் பயன்­பாட்டில் உள்­ளன. சாதா­ர­ண­மாக நாளொன்­றிற்கு இரண்டு மணி நேரம் கைய­டக்கத் தொலை­பே­சியை பயன்­ப­டுத்­து­வதே சிறந்­தது. ஆயினும் சரா­சரி மனி­த­னொ­ருவன் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் என்ற விகி­தத்தில் ஒரு கிழ­மைக்கு 35 மணி நேரம் கைப்­பே­சியில் செல­வழிக்­கிறார் என வெளி­நாட்டு ஆய்­வொன்று தெரி­விக்­கி­றது.

கைய­டக்க தொலை­பே­சி­களை அதிகம் பயன்­ப­டுத்­து­வதால் ஏற்­ப­டு­கின்ற பாதிப்­புகள்

அதி­க­மாக கைய­டக்க தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்­து­வ­தனால் அதி­க­ள­வி­லான தக­வல்கள் மூளை­யினுள் உட்­செ­லுத்­தப்­ப­டு­வதால் மூளை சோர்­வ­டை­கி­றது. அத்­தோடு முடி­வெ­டுக்கும் திறன், ஞாபக திறன் குறைதல் உட்­பட பல மூளை சம்­பந்­தப்­பட்ட பாதிப்­பு­க­ளுக்கு ஆட்­ப­டு­கின்ற வாய்ப்­புகள் அதிகம்.

மேலும் பெறு­கின்ற தக­வல்கள் அதி­க­ரிப்­ப­தனால் மன அழுத்தம் அதி­க­ரிப்­ப­தோடு பல உள ரீதி­யான பாதிப்­பு­க­ளுக்கும் உட்­ப­டலாம்.

உணர்வு ரீதி­யான பாதிப்­பு­க­ளாக உற­வு­க­ளுக்­கி­டை­யி­லான விரிசல் வீட்­டிலும் வேலைத்­த­ளத்­திலும் இடைத்­தொ­டர்பை பேணாமை, தனி­மையை உணர்தல், எதிர்­காலம் குறித்து நம்­பிக்­கை­யற்ற உணர்வு தோன்றல் போன்­ற­வற்றை குறிப்­பி­டலாம்.

உடல் ரீதி­யான பாதிப்­புகள் எவை­யென ஆராய்­கையில் இதயம், மூளை, கண் மட்­டு­மன்றி முழு உட­லையும் கைப்­பே­சிப்­பா­வனை பாதிக்­கி­றது. சர்­வ­தேச புற்­றுநோய் ஆராய்ச்சி முகவர் நிலை­ய­மா­னது அள­வுக்கு மீறிய கைப்­பேசி பாவனை மூளையில் கட்­டிகள் ஏற்­ப­டவும் புற்று நோய் ஏற்­ப­டவும் கார­ணமாய் அமை­யு­மென 2011 இல் அறிக்கை வெளி­யிட்­டது. அதிக எடை உயர்வு மற்றும் இரு­தய நோய்கள் என்­பன ஏற்­ப­டவும் அதி­க­ரித்த கைப்­பேசி பாவனை கார­ண­மா­கலாம்.

கைப்­பே­சியில் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் பதி­வி­றக்கம் செய்­யப்­பட்ட விளை­யாட்­டு­க­ளிலும் அதிக ஆர்வம் செலுத்­து­வ­தனால் அதன் பாவ­னைக்கு முற்­றிலும் அடி­மைப்­ப­டு­கின்ற அபா­யமும் நில­வு­கி­றது.

மேலும் புற்­றுநோய் மற்றும் மூளையில் கட்­டிகள் வரு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாக  காணப்­ப­டு­கி­றது. இன்­ற­ள­விலும் கைப்­பேசி பாவ­னையால் புற்­றுநோய் ஏற்­ப­டு­கி­றதா என்­பது பெரும் கேள்­விக்­கு­றி­யா­கவே காணப்­ப­டு­கி­றது.

ஆயினும் கைப்­பே­சியில் இருந்து வெளி­யேற்­றப்­ப­டு­கின்ற மின்­காந்த அலைகள் மூளைக் கலங்­களில் அசா­தா­ரண வளர்ச்­சியை தூண்டும் ஆற்றல் கொண்­டவை என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

மேலும் தொலை­பே­சியின் மூலம் பேசிக்­கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்­தி­லேயே இவ்­வகை அலைகள் உரு­வாகும் வீதம் அதி­க­மாக இருப்­ப­தாக தொழில்­நுட்ப வல்­லு­னர்கள் கருத்துத் தெரி­விக்­கின்­றனர். இரவில் தலைக்­க­ருகே கைப்­பே­சி­களை வைத்­தி­ருப்­பதும் உமி­ழப்­ப­டு­கின்­ற அலை­களின் தாக்­கத்தை அதி­க­ரிக்கும். அதிக வெளிச்­ச­மான தொடு ­தி­ரை­களை தொடர்ந்தும் பார்ப்­ப­தனால் பார்வை நரம்பும் மூளையின் கட்­புலன் பிர­தே­சமும் பாதிக்­கப்­ப­டு­வ­தாக மருத்­துவ உலகம் கூறு­கி­றது. மூளை மற்றும் சுற்­றயல் நரம்புத் தொகு­தியை அதி­க­மான கைப்­பேசி பாவனை தாக்­கலாம் என்ற கூற்றை நிரூ­பிப்­ப­தற்­கான ஆய்­வுகள் பெரு­ம­ளவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அதிக சத்­தத்தை கேட்­பதால் மட்­டு­மன்றி காது­க­ளுக்குள் சொரு­கப்­ப­டு­கின்ற தொடர்பு சாத­னங்­களால் செவிப்­பறை அதிர்­வ­தோடு கேட்டல் தொடர்­பான பிரச்­சி­னை­களும் தோன்­று­கின்­றன.

ஒலி­யியல் டாக்டர் அலிசன் கேட்லெட் வுடால் கூறு­கையில், சமீ­பத்­திய ஆய்­வின்­படி கைப்­பேசி  பாவனை 60 நிமி­டங்­க­ளுக்கு மேலாக காணப்­ப­டு­மி­டத்து அதிக அதிர்­வெண்ணை நமது செவிப்­பறை உணர்­வதால் நீடித்த கேட்டல் குறை­பாடு ஏற்­பாடும் என குறிப்­பி­டு­கிறார். இதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களால் 2000 முதல் 8000 மீடிறன் கொண்ட அதிர்­வ­லை­களை கேட்க முடி­யா­து­போகும். அதா­வது சாதா­ரண பேச்சை கூட அவர்­களால் செவி­ம­டுக்க இய­லாது போகும்.

அமெ­ரிக்க செவி­ம­ட­லியல் கல்­லூரி நடத்­திய ஆய்­வின்­படி தொலை­பே­சியால் வெளிப்­படும் மின்­காந்த அலைகள் செவிப்­பு­லனில் சேதத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் டாக்டர் வுடால் கூறு­கையில் பல சமீ­பத்­திய ஆய்­வு­களின் முடி­வுகள்  அவ்­வகை மின்­காந்த அலைகள் செவிப்­பு­லனை சேதப்­ப­டுத்­து­வதில் பங்­க­ளிப்புச் செய்­கின்­றன என கூறு­கின்­றன. பிரத்­தி­யே­க­மான கேட்டல் உப­க­ர­ணங்­களால் கேட்டல் மீடிறன் எல்லை தற்­கா­லி­க­மாக மாறு­வதை அவ­தா­னிக்க முடிந்­தது. இசையை மீண்டும் மீண்டும் அதி­க­ள­வான ஒலி அதிர்­வெண்ணில் கேட்கும் போது தற்­கா­லிக குறை­பாடு நிரந்­த­ர­மாக மாறும். 

சரா­சரி நபர் தங்கள் கைப்­பே­சியை ஒரு நாளைக்கு 150 முறைக்கும் மேல் பார்க்­கிறார். அடிக்­கடி தொலை­பேசி பயன்­பாடு கண்­ணுக்கு அசெ­ள­க­ரி­யத்தைக் கொடுக்கும். இது கண் சம்­பந்­தப்­பட்ட நோய்­க­ளுக்கு வழி­கோலும்.
அமெ­ரிக்­காவில் 3 பேருக்கு இருவர் என்ற விகி­தத்தில் அதி­க­ள­வி­லான கைப்­பேசி பாவ­னை­யினால் பார்வை குறை­பாட்­டுக்கு ஆளா­வ­தாக கணிக்­கப்­பட்­டுள்­ளது. மங்­க­லான பார்வை, கண்ணில் வரட்சி ஏற்­படல், தலை­வலி மற்றும் பார்வை திரிபு என்­பன ஏற்­பட வாய்ப்பு அதி­கமாக இருப்­ப­தாக மருத்­துவ உலகம் எச்­ச­ரிக்­கி­றது. கண்­சி­மிட்டல் என்­பது கண்ணின் ஈரப்­ப­தனை பேணு­வ­தற்கும் தூசு, சூரிய ஒளி­யி­லி­ருந்து பாது­காக்­கவும் இயற்­கை­யி­லேயே ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள செயற்­பா­டாகும். ஆயினும் தொலை­பேசி திரையை அவ­தா­னிக்­கின்ற போது நிமி­டத்­திற்கு 15 முறை சிமிட்ட வேண்­டிய எண்­ணிக்கை பாதி­யாக குறை­கி­றது. இதன் மூலம் கண் வரட்­சி­ய­டை­வ­தற்­கான வாய்ப்பை நாம் ஏற்­ப­டுத்­து­கிறோம். கைப்­பேசி திரையில் சிறிய காணொ­லியை அல்­லது ஆக்­க­மொன்றை வாசிக்கும் போது நாம் அதை மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மாக கரு­தாத போதும் ­அத்­த­கைய செயற்­பா­டு­களின் போது நமது கற்­தசை கழுத்து மற்றும் தோள்­பட்டை தசைகள் இயங்­கு­கின்­றன. இவை கண்­ணிமை தளர்ச்சி மற்றும் பார்வை மங்­க­லா­வ­தற்கு கார­ண­மா­கின்­றன. கைப்­பேசி திரையின் ஒளியை அதி­க­மாக வைத்து பார்ப்­பதன் மூலம் கண்கள் கூசு­வ­தோடு கண்­ணுக்கு கஷ்­டத்­தையும் கொடுக்­கிறோம். மேலும் இருளில் கைப்­பேசி திரையை பார்ப்­பதும் இத்­த­கைய நிலை­மையை தூண்­ட­வல்­லன.

கைப்­பேசி பாவ­னை­யினால் மலட்­டுத்­தன்மை மற்றும் விந்­து­களின் எண்­ணிக்கை குறைதல் என்­பன ஏற்­ப­டு­கின்­றன. கைப்­பேசி பாவனை,  மிகவும் உணர்­திறன் வாய்ந்த திசுக்­களின் மீது அதி­க­ரித்த ஒட்­சி­ச­னேற்ற அழுத்தம், வெப்­ப­மாதல் மற்றும் கதிர்­வீச்சு மூலம் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றன. இதனால் விதையின்  திசுக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன.  கதிர்­வீச்சு விந்­த­ணுக்­களின் அளவு, விந்­தணு செறிவு, விந்­த­ணுக்­களின் எண்­ணிக்கை, இயக்கம் மற்றும் ஆற்­றல் ­ஆ­கி­ய­வற்றைக் குறைப்­பதன் மூலம் ஆண்­களில் விந்­த­ணுக்­களின் தரத்தை பாதிக்­கி­றது. இதனால் ஆண்­களில் மலட்­டுத்­தன்மை தோன்­று­கி­றது.

ஏறக்­கு­றைய 660,000 வாகன சார­திகள் வாக­னத்தை செலுத்­திக்­கொண்டு  இருக்­கும்­போது தங்கள் கைபே­சி­களைப் பயன்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். கைபேசிகள் எல்லா நேரங்களிலும் உலகோடு தொடர்பில் இருக்க வழிவகுக்கிறன என்றாலும் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது சமூக வலைத்தளங்களை சரிபார்ப்பது அதிக  அபாயங்களை ஏற்படுத்தும்.

கைப்பேசியின் கவனச்சிதறல்கள் அதிகமான வாகன விபத்திற்கும் உயிர் மற்றும் அங்க இழப்புகளுக்கும் வழிவகுக்கின்றன.

சமீபத்திய சில ஆய்வுகள் கைப்பேசிகள் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட நோய்க் கிருமிகளுக்கான புகலிடம் என்றும் கூறுகின்றன. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் அரிப்புகள் ஏற்படுத்தக்கூடிய நுண்ணங்கிகள் உதாரணமாக ஸ்டெபைலோ கொக்கஸ் ஆரஸ் போன்றன கைப்பேசிகள் மூலம் பரவுகின்றன.

கைப்பேசிகளை கவனமாக கையாள்வதன் மூலம் இத்தகைய சுகாதார பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறோம்.-Vidivelli

  • ஷிப்னா சிராஜ்

Leave A Reply

Your email address will not be published.