13ஆவது திருத்தத்தில் சில ஏற்பாடுகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு

0 864

அர­சியல் தீர்­வுகள் மக்­க­ளுக்­கான பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யுடன் இணைந்து செல்­ல­வேண்டும். 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை எடுத்துக் கொண்டால், அதி­லுள்ள சில ஏற்­பா­டுகள் நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­ற­வை­யென ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் ஐரோப்­பிய ஒன்­றிய தூதுக்­கு­ழு­வி­ன­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இந்த சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

சந்­திப்பு தொடர்பில் ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு வெளி­யிட்­டி­ருக்கும் ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது: நெதர்­லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப், இத்­தாலி தூத­ர­கத்தின் பிரதித் தலைவர் அலெக்ரா பைஸ்ட்­ரோச்சி, ருமே­னி­யாவின் தூதுவர் கலா­நிதி விக்டர் சியுஜ்­தியா, பிரான்சின் தூதுவர் எரிக் லாவெர்டு மற்றும் ஜெர்­ம­னியின் தூதுவர் ஜோன் ரோட் ஆகியோர் இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர்.

அபி­வி­ருத்தி மற்றும் அதி­காரப் பகிர்வு சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்த தூதுக்­கு­ழு­வினர் அபி­வி­ருத்தி மற்றும் அதி­காரப் பகிர்வு குறித்து அறிந்­து­கொள்­வதில் ஆர்­வ­மாக இருந்­தனர். இவ்­வி­டயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ,

“அர­சியல் தீர்­வுகள் மக்­க­ளுக்­கான பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யுடன் இணைந்­து­செல்ல வேண்டும். உதா­ர­ண­மாக 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை எடுத்துக் கொண்டால், அதி­லுள்ள சில ஏற்­பா­டுகள் நடை­முறை சாத்­தி­ய­மற்­றவை. அதற்குப் பதி­லாக அர­சி­யல்­வா­திகள் மாற்றுத் தீர்­வுகள் குறித்து சிந்­திக்க வேண்டும்.

பொலிஸ் அதி­கா­ரங்கள் மாகாண சபை­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டால், அது பொலிஸ் பணி­களை அர­சி­யல்­ம­ய­மாக்­கு­வ­தற்கு வழி­வ­குக்கும். பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட பத­வி­க­ளுக்கு குறித்த மாகா­ணங்­க­ளுக்குள் அடங்கும் மாவட்­டங்­களைச் சேர்ந்­த­வர்­களை நிய­மிப்­பது நடை­முறை சாத்­தி­ய­மா­னது. இது மொழித்­திறன் மற்றும் கலா­சார வேறு­பா­டு­களால் எழும் சிக்­கல்­களைத் தீர்க்கும்” என்று குறிப்­பிட்டார்.

முத­லீட்­டுக்­கான மைய­மாக இலங்­கையைப் பார்க்­கவும்

இந்த சந்­திப்­பின்­போது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ, முத­லீட்­டுக்­கான ஒரு மையம் என்ற வகையில் இலங்­கையை சாத­க­மாகப் பார்க்­கு­மாறு ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ளிட்ட அனைத்து நாடு­க­ளி­டமும் கேட்டுக் கொள்­வ­தாகத் தெரி­வித்தார்.

இலங்­கையின் வெளி­நாட்டுக் கொள்கை

இலங்­கையின் நடு­நிலை வெளி­நாட்டுக் கொள்­கை­பற்றி விளக்­கிய ஜனா­தி­பதி கோத்­தா­பய, “இலங்கை போன்ற சிறிய நாடு­களை உலகின் ஏனைய பகு­தி­களைப் போலவே அதே வேகத்தில் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் நகர்த்­து­வ­தற்கும் உத­வு­வது பிராந்­திய மேலா­திக்­கத்தை முறி­ய­டிப்­ப­தற்­கான சிறந்த வழி­யாகும்” என்று தெரி­வித்தார்.

இலங்கை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீது நம்­பிக்கை வைக்கலாம்

ஒரு நம்­ப­க­மான மற்றும் நீண்­ட­காலப் பங்­காளர் என்ற வகையில் இலங்கை, ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீது நம்­பிக்கை வைக்­கலாம் என்றும் அவர்கள் வலி­யு­றுத்­தினர். எனவே, ஐரோப்­பிய ஒன்­றிய பங்­கா­ளர்­க­ளுடன் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் நேர்­மை­யா­னதும் வினைத்­தி­ற­னா­ன­து­மான நிர்­வாகம் முக்­கிய அங்­க­மாகும் என்றும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

விவ­சா­யத்­துறை

இலங்­கையின் விவ­சா­யத்­து­றையைப் பாதிக்கும் ஒரு முக்­கிய சவால் கால­நி­லை­யாகும். எனவே, பச்­சை­வீடு போன்ற முறைகள் எவ்­வாறு உத­வக்­கூடும் என்­பதை இலங்கை கண்­ட­றிய வேண்டும். இர­சா­யன உரத்­தி­லி­ருந்து சேதன உரங்­க­ளுக்கு இலங்கை செல்ல வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இது வித்­தி­யா­ச­மான சந்தை வாய்ப்­பு­களை ஈர்க்கக் கூடி­ய­தாக அமையும். மேலும், இர­சா­யன உரங்கள் மற்றும் கிரு­மி­நா­சி­னிகள் புற்­று­நோய்க்கு ஒரு முக்­கிய கார­ணி­யா­க­வுள்ள அதே­நேரம், எமது நீர் நிலை­களை மாசு­ப­டுத்­து­வ­தா­கவும் இருப்­பதால் இந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
நெதர்­லாந்து தூதுவர் கோங்க்க்ரிஜ்ப், சேதன விவ­சாயம் தொடர்­பாக இலங்­கையில் ஏற்­க­னவே நெதர்­லாந்து அரசு ஆரம்­பித்­துள்ள ஒருங்­கி­ணைந்த நிகழ்ச்­சித்­திட்­டங்கள் பற்றி விளக்­கினார். இந்த மாற்றம் வெற்­றி­ய­ளிக்க விவ­சா­யி­க­ளுக்கு நிர்­வா­கத்­துறை அதி­கா­ரி­களின் ஆத­ரவு தேவை­யென்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஊவா மாகா­ணத்தில் பெண் விவசாயிகளுக்காக இத்தாலிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாசனைத் திரவிய விவசாய திட்டம் குறித்து இத்தாலிய தூதுவர் குறிப்பிட்டார். தற்போது சுமார் 400 விவசாயிகள் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு பாராட்டு

ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், தொழிற்றிறன் மற்றும் தகுதிக்கு வெகுமதி அளிப்பதற்குமான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு குறித்து தூதுக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.