மக்கா ‘சிலோன் ஹவுஸ்’ விவகாரம்: 100 மில்லியன் டொலர் பணத்துக்கு என்ன நடந்தது?

புதிய ஹஜ் குழு கேள்வி

0 796

முஸ்­லிம்­களின் புனித நக­ரான மக்­காவின் ஹரம் ஷரீப்­பள்­ளி­வாசல் அபி­வி­ருத்திப் பணி­க­ளின்­போது அப்­ப­கு­தியில் அமைந்­தி­ருந்த இலங்கையின்  “சிலோன் ஹவுஸ்” எனும் விடு­திக்­கட்­டிடம் சவூதி அர­சாங்­கத்­தினால் சுவீ­க­ரிக்­கப்­பட்டு நஷ்ட ஈடாக சுமார் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் மேற்­பட்ட தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்தப் பணத்­துக்கு என்ன நடந்­தது எனத்­தெ­ரி­ய­வில்லை என ஹஜ் கமிட்டி தெரி­வித்­துள்­ளது.

இந்த கொடுக்கல் வாங்­க­லுடன் முன்­னைய சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரும் சவூ­தி­யி­லுள்ள இலங்கை வர்த்­த­கர்கள் சிலரும் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் விசேட விசா­ர­ணை­யொன்­றினை மேற்­கொண்டு இந்­நி­திக்கு என்ன நேர்ந்­துள்­ளது? இத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் யார் என்­பதைக் கண்­ட­றி­யு­மாறு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் வேண்­டி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்­காக சவூதி அரே­பி­யா­வுக்குச் சென்ற ஹஜ்­குழு இது தொடர்­பான விப­ரங்­க­ளைத்­தி­ரட்டி வந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஹஜ் குழுவின் உறுப்­பினர் அப்துல் சத்தார் கருத்து தெரி­விக்­கையில்;

இலங்­கைக்கு சொந்­த­மான “சிலோன் ஹவுஸ்” ஹரம்­ஷ­ரீ­புக்கு அருகில் மக்­காவில் அமைந்­தி­ருந்­தது. இந்தப் பிர­தேசம் விலை­ம­திப்­பிட முடி­யாத பகு­தி­யாகும். இந்தப் பகு­தியில் அமைந்­தி­ருந்த சிலோன் ஹவுஸே சவூதி அர­சாங்­கத்­தினால் சுவீ­க­ரிக்­கப்­பட்டு 100 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட டொலர்கள் நஷ்­ட­ஈ­டாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

2006 ஆம் ஆண்டு இலங்­கையின் பிர­தி­நி­திகள் சிலர் சவூதி அர­சாங்­கத்­துடன் பேச்சுவார்த்தை நடத்­தி­யுள்­ளனர். அப்­போது சிலோன் ஹவுஸ் அமைந்­தி­ருந்த காணிக்கு 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் வழங்­கு­வ­தற்கு சவூதி அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­தது.

மர்ஹும் ரி.பி. ஜாயா உட்­பட முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் உத­வி­யுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்ட சிலோன் ஹவுஸ் கட்­டிடம் இலங்­கையின் அமைப்­பொன்றின் மூலம் நிர்­வ­கிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இந்த கட்­டி­டத்­துக்­காக சவூதி அர­சினால் வழங்­கப்­பட்ட இந்தப் பெருந்­தொகை நிதி சவூதி அர­சாங்­கத்தின் சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய சிலோன் ஹவுஸ் அமைப்­புக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த கொடுக்கல் வாங்­க­லுடன் முன்னாள் சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரும் அவ­ருக்கு நெருக்­க­மான சவூ­தியில் வாழும் இலங்கை வர்த்­த­கர்கள் சிலரும் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. கிடைக்­கப்­பெற்ற நஷ்­ட­ஈட்டைப் பயன்­ப­டுத்தி இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூ­தியில் தங்­கு­வ­தற்கு விடுதி வச­திகள் ஏற்­பாடு செய்­தி­ருந்தால் அது குறைந்த செலவில் இலங்கை யாத்­தி­ரி­கர்கள் தங்­கு­வ­தற்கு உதவி­யாக இருக்கும்.

சிலோன் ஹவுஸ் கட்­டி­டத்­துக்­காக வழங்­கப்­பட்ட நஷ்­ட­ஈட்டுத் தொகையில் ஊழல்கள் இடம்­பெற்­றுள்­ளன. பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்த ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீலை தொடர்பு கொண்டு வினவியபோது இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலையினை கண்டறியுமாறு பிரதமரிடம் வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.