உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பதவிநிலை கீழிறக்கம்

ஒரு நட்சத்திரம் அகற்றப்பட்டது

0 689

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­க­ளுக்­க­மைய, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரான சஞ்­ஜீவ பண்­டா­ரவை தற்­கா­லி­க­மாக பதவி நிலையில் கீழி­றக்க தேசிய பொலிஸ் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

தற்­போது களுத்­துறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராகக் கட­மை­யாற்றும் சஞ்­ஜீவ பண்­டா­ரவை பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராகப் பத­வி­யி­றக்கம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுத்­துள்ள நிலையில், அது­கு­றித்து அவ­ரது சீரு­டை­யி­லுள்ள ஒரு நட்­சத்­தி­ரத்தை அகற்ற நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இட­பெற்­ற­போது, சஞ்­ஜீவ பண்­டார கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராகக் கட­மை­யாற்­றிய நிலையில், முன்­கூட்டி உள­வுத்­துறை வழங்­கிய தக­வல்­களை அவர் கணக்கில் கொள்­ளாது செயற்­பட்­ட­தாகக் குற்­றச்­சாட்­டுள்­ளது. குறிப்­பாக கொழும்பு வடக்கில் தாக்­கு­த­லுக்­குள்­ளான புனித அந்­தோ­னியார் ஆலயம் அமைந்­துள்ள பொலிஸ் பிரி­வான கரை­யோர பொலிஸ் நிலை­யத்­துக்கு அவ்­வா­றான எந்த எச்­ச­ரிக்­கை­யையும் வழங்க பொலிஸ் அத்­தி­யட்­சகர் சஞ்­ஜீவ பண்­டார நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை எனவும், தாக்­கு­தலின் பின்னர் அதனை மறைக்கப் போலி ஆவ­ணங்கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அண்­மையில், குறித்த தாக்­குதல் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் வெளிப்­பட்­டது.

இவ்­வா­றான பின்­ன­ணியில் அண்­மையில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராகத் தர­மு­யர்த்­தப்­பட்ட சஞ்­ஜீவ பண்­டா­ரவை, விசா­ர­ணைகள் முடியும் வரை மீளவும் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரா­கவே வைத்திருக்க முடிவு செய்துள்ள பொலிஸ் ஆணைக்குழு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பதவியுயர்வை கிடப்பில் போட்டு அவரின் பதவி கீழிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.