ஜனாதிபதி சிறுபான்மை மக்களை அரசியலில் புறந்தள்ளக்கூடாது

0 770

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது கூட்­டத்­தொடர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது. பாரா­ளு­மன்­றத்தின் புதிய கூட்­டத்­தொடர் ஜனா­தி­ப­தியால் ஆரம்­பித்து வைக்­கப்­ப­டும்­போது வழ­மை­யாக இடம்­பெறும் ஜனா­தி­ப­தியை வர­வேற்கும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான ஏற்­பா­டுகள் எதுவும் இடம்­பெ­றாமை சிறப்­பம்­ச­மாகும். இந்த ஏற்­பா­டு­களை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தவிர்த்­தி­ருந்­தமை குறிப்­பிடத் தக்­க­தாகும்.

ஜனா­தி­பதி தனது கொள்கைப் பிர­க­டன (அக்­கி­ரா­சன) உரையில் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு என்­னுடன் ஒன்­றி­ணை­யுங்கள் என்று அனைத்து இன அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் அர­சியல் கட்­சி­க­ளுக்கும் அறை­கூவல் விடுத்­துள்ளார். பெரும்­பான்மை மக்­களின் ஆணையை, எதிர்­பார்ப்பை மதிக்­க­வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் அர­சியல் அமைப்பில் திருத்தம் அவ­சியம், தேர்தல் முறையில் மாற்றம் முக்­கியம், ஒற்­றை­யாட்சி பாது­காக்­கப்­படும், பெளத்த மதம் முதன்மை ஸ்தானத்­துடன் போஷிக்­கப்­படும், தேசிய பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை என்­ப­வற்­றையும் குறிப்­பிட்டுக் கூறி­யுள்­ள­துடன் இவற்­றுக்கு உத்­த­ர­வாதம் அளித்­துள்ளார்.

அத்­தோடு கடந்­த­கால இன­வாத அர­சியல் நோக்­கங்­களை மக்கள் தோற்­க­டித்­துள்­ளனர். இதற்குப் பின்­ன­ரா­வது குறு­கிய அர­சியல் நோக்­கங்­க­ளைக்­கொண்ட அர­சியல் கலா­சா­ரத்தைக் கைவிட்டு மக்­க­ளி­டையே பேதங்­களை விதைப்­ப­தற்குப் பதி­லாக ஒன்­றி­ணைந்த தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்ப அனை­வரும் ஒன்­றி­ணைவோம் எனவும் ஜனா­தி­பதி தனது கொள்கைப் பிர­க­டன உரையில் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி தனது உரையில் பெரும்­பான்மை வாதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி சிறு­பான்மைக் கட்­சிகள் இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் இந்த அர­சிலைக் கைவிட்­டு­விட வேண்டும் எனவும் கோரி­யி­ருப்­பது முஸ்லிம், தமிழ் தரப்பு அர­சியல் தலை­வர்கள் மத்­தியில் சர்ச்­சை­களை உரு­வாக்­கி­யுள்­ளது.

இன­வாத அர­சி­யலை முன்­னெ­டுத்­த­வர்கள் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளார்கள். எனவே பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை என்றும் மதிக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.

பெரும்­பான்மை மக்­களில் அநேகர் முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளா­கவே நோக்­கு­கின்­றனர். முஸ்­லிம்­க­ளுக்­கென்று இந்­நாட்டில் தனி­யான சட்­டங்கள் தேவை­யில்லை. தனி­யான வங்கி முறை தேவை­யற்­றது. மத்­ர­ஸாக்கள் அரச கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­ட­வ­ரப்­பட வேண்டும் என்­றெல்லாம் பெரும்­பான்மை இனத்­தவர் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்து வரு­கி­றார்கள். ஜனா­தி­ப­தியின் உரை­யுடன் ஒப்­பிட்டு நோக்­கும்­போது பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை என்றும் மதிக்­க­வேண்­டு­மென்றால் இவற்­றுக்கெல்லாம் ஆப்பு வைக்­கப்­ப­டுமா என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

‘‘இனம் சார்ந்த கொள்­கை­யுடன் செயற்­பட்டு வரும் அர­சியல் கட்­சிகள் இந்­நாட்டில் பிரி­வி­னையைத் தோற்­று­விக்­கின்­றன என்ற நிலைப்­பாட்­டினை ஜனா­தி­பதி தனது உரையில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இனம் சார்ந்து செயற்­படும் அர­சியல் கட்­சிகள் ஆட்­சியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி அவர்­களைத் தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. ஜனா­தி­பதி ஆட்சிப் பொறுப்­பினை ஏற்ற நாள்­முதல் தற்­போது வரையில் பெரும்­பான்மை ஆத­ரவு என்ற மன நிலை­யி­லேயே இருக்­கிறார். தமது இனம் சார்ந்து செயற்­படும் சிறு­பான்மை தேசிய இனங்கள் இன­வாத தரப்­புகள் என்றால் பெரும்­பான்மை இனம் சார்ந்து செயற்­படும் கட்­சி­களை எவ்­வாறு அழைப்­பது என்று கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

‘ஜனா­தி­பதி முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றாகப் புரிந்­து­கொண்­டுள்ளார். இன­வாத அர­சி­யலைக் கைவி­டு­மாறு அவர் சிறு­பான்மைத் தரப்­பி­னரை இலக்கு வைத்து உரை­யாற்­றி­யுள்ளார். ஜனா­தி­பதி வாக்­க­ளிப்­பினை மையப்­ப­டுத்­திய மன­நி­லையில் செயற்­ப­டு­வ­தா­னது இனங்­க­ளுக்கு இடையில் மேலும் இடைவெளிகளையே ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் எம்.பி. கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் இந்நாட்டு மக்கள் பெரும்பான்மையினத் தவருடன் ஒன்றிணைந்து வாழ்பவர்கள். எனவே ஜனாதிபதி நாட்டு மக்களை இன ரீதியில் பிளவுபடுத்தி நோக்காது அனைவரும் இந்நாட்டு மக்களே என்பதில் உறுதிகொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களை அரசியலில் புறந்தள்ள முயற்சிப்பது நாட்டுக்கு பாதிப்பாகவே அமையும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.