உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

0 610

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்­பாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் சாட்சி விசா­ர­ணைகள் மீண்டும் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

அதற்­க­மைய குறித்த விசா­ர­ணைகள் எதிர்­வரும் 17ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன. தாக்­கு­தல்கள் தொடர்­பாக இது­வரை 305 பேரிடம் வாக்­கு­மூ­லங்­களை பதி­வு­செய்­துள்­ள­தாக ஆணைக்­கு­ழுவின்செய­லாளர் ஹேரத் தெரி­வித்தார்.

கொழும்பு பேராயர் மல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை, பேரா­சி­ரியர் ரொஹான் குண­ரத்ன மற்றும் பிரதி பொலிஸ்மா அதி­பர்கள் உள்­ளிட்ட பலர் ஆணைக்­கு­ழுவில் வாக்­கு­மூலம் அளித்­துள்­ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் இடைக்­கால அறிக்கை, கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்டது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.