சு.க பொதுத்தேர்தலில் கூட்டணியாக போட்டி

செயலாளர் தயாசிறி ஜயசேகர

0 709

ஜனா­தி­ப­தியின் கொள்­கைத்­திட்­டத்தை முன்­னுக்கு கொண்­டு­செல்ல பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். அதனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தனித்­து­வத்தை பாது­காத்­துக்­கொண்டு பொதுத்­தேர்­தலில் கூட்­ட­ணி­யாகப் போட்­டி­யி­டு­வோ­மென ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ளரும் ராஜாங்க அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

பொதுத்­தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முன்­னெ­டுத்­து­வரும் நட­வ­டிக்கை தொடர்­பாக தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பூரண ஆத­ரவை வழங்கி வெற்­றி­பெ­றச்­செய்தோம். தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொண்டு மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்டும். அதனால் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது­ஜன பெர­முன மற்றும் ஏனைய கட்­சி­க­ளுடன் கூட்­டி­ணைந்து தேர்­த­லுக்கு செல்­லவே தீர்­மா­னித்து வரு­கின்­றது.

மேலும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தனித்­து­வத்தை பாது­காத்­துக்­கொண்டு கூட்­டணி அமைத்­துக்­கொண்டு போட்­டி­யி­டவே கட்சி கலந்­து­ரை­யாடி வரு­கின்­றது. ஏனெனில், எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்தல் மிகவும் சவால்­மிக்­க­தாகும். சக்­தி­மிக்க பாரா­ளு­மன்ற அணி­யொன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வதன் மூலமே எமக்கு அர­சாங்­கத்தின் கொள்­கையை முன்­னுக்கு கொண்­டு­செல்­லலாம்.

அத்­துடன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்தின் கொள்கை உரையை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்­தினார். அதில் அதி­க­மா­னவை நாட்டின் எதிர்­கா­லத்­துக்கும் முன்­னேற்­றத்­துக்கும் மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­வை­யாகும். அதனால் ஜனா­தி­ப­தியின் கொள்கைத் திட்­டத்தை முன்­னுக்கு கொண்­டு­செல்ல பெரும்­பான்­மை­யு­ட­னான பாரா­ளு­மன்றம் அத்­தி­யா­வ­சி­ய­மாகும். அதனால் ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பூர­ண­மாக ஆத­ர­வ­ளித்­த­துபோல், தற்­போது எதிர்­வரும் 5வரு­டங்­க­ளுக்குள் அவ­ரது கொள்­கைத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் நாங்கள் ஆர­த­ளிக்கத் தயா­ராக இருக்­கின்றோம்.

எனவே, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்­களில் யாரை தெரி­வு­செய்து அனுப்­பினால் ஜனா­தி­ப­தியின் கொள்கை திட்­டத்தை முன்­னுக்­கு­கொண்டு செல்­லலாம் என்­பதை மக்கள் தீர்­மா­னிக்­க­வேண்டும். பாரா­ளு­மன்­றத்­துக்கு குண்­டு­வைக்­க­வேண்டும் என்­றெல்லாம் கடந்த காலங்­களில் அதி­க­மா­ன­வர்கள் கதைத்­து­வந்­தனர். தற்­போது மக்­க­ளுக்கு வாய்ப்பு கிடைக்­கப்­போ­கின்­றது. மக்கள் சரி­யான தீர்மானம் எடுத்தால் பாராளுமன்றத்துக்கு குண்டுவைக்க வேண்டிய தேவை இருக்காது.

அத்துடன் பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிடும்போது சின்னம் தொடர்பாக இன்னும் இறுதித்தீர்மானத்துக்கு வரவில்லை. என்றாலும் பொதுச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.